வழங்கப்பட்டிருக்கின்றதா?

எதற்கென்றும் நீயும் சரிபார்த்துக்கொள்

தன் பழியின் தீவிரம் முன்னோர்கள் மீது சுமத்த

உனக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றதா? என்று .

 

உங்களின் நிர்பந்தங்களை காட்டிலும் வழக்கம் போல

மற்றவர்களை பின்பற்றுதல்

தொன்மை தொட்டு வளர்த்து விடுகின்றன

பல ஒளி ஆண்டுகளின் கனவு ஒன்று .

 

அதிலும் அவர்கள் கனவில் வாழாமல்

என் கனவில் வாழ்வதென்பது

அருவருப்பானது,அவமானமானது அப்படி

மற்றவர்களின் பிம்பமாகவே இருக்க உனக்கும்

தொன்மையான வாழ்வின் வாய்ப்பு மீண்டும்

வழங்கப்பட்டிருக்கின்றதா?

 

தன் இயல்பை தானே பழிக்கும் நிலையை

நேற்றைய இன்றைய நாளைய சான்றின்

மன்னிப்பை உங்களின் பிரபஞ்ச நேசிப்பிற்கு

உங்களால் வழங்கப்பட்டிருக்கின்றதா?

 

பிரபஞ்ச அதித நம்பிக்கைகள் மேலும்

நம்பிக்கையாகவே உணரும் தருணம் இன்றும்

உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றதா?

வாழ்த்துகள்! வாழ்த்துகள்! வாழ்த்துகள்!

-வளத்தூர் தி. ராஜேஷ் .

 

Series Navigationகலாமணி பரணீதரனின் “மீண்டும் துளிர்ப்போம்” – சிறுகதைகள் தொகுப்பு — நூல்விமர்சனம்மிச்சம் !