வாப்பாவின் நாட்குறிப்பைப் போல

Spread the love

ஏ.நஸ்புள்ளாஹ்

வாப்பாபற்றியதான
ஒருநாட்குறிப்பிலிருந்து
ஒருஆண்மரத்தின்
வாழ்க்கைப்பாதைபயணப்படுகிறது.
வாப்பா
எனக்குப்புத்திதெரிந்த
நாளிலிருந்துஒருகடலையொத்தகவலைகளையும்
ஒருமலையையொத்தபாரத்தையும்
சுமந்துகொண்டு
கனவுகளையும்நாளைபற்றிய
நம்பிக்கைகளையும்
எனக்கும்என்ராத்தாவுக்கும்
தம்பிக்குமாக
விதைத்ததைநினைக்கும்போதெல்லாம்
வாப்பாமிகவும்
மனசுரீதியாகஉயர்ந்துபோனார்.
நாளைஒருநாள்நான்கூட
வாப்பாவாகலாம்.
ராத்தாஉம்மாவாகலாம்.
தம்பியும்வாப்பாவாகலாம்.
அன்றையநாளில்எங்களுக்குள்ளும்
இப்படிஇப்படியாகபயணப்பாதை
காயப்பட்டுப்போகலாம்
வாப்பாவின்நாட்குறிப்பைப்போல.

Series Navigationநினைவுகளின் சுவட்டில் – (85)பழமொழிகளில் எலியும் பூனையும்