வாய்ப்பு:-

என்னுடைய வாய்ப்பு
அவளுக்கு வழங்கப்பட்டது
நானே காரணமாயிருந்தேன்
அதன் ஒவ்வொரு அசைவுக்கும்.

அவளை சிலாகித்தேன்
அவளின் ஏக்கங்களை விவரித்தபடி.
காற்றில் கண்டம் விட்டுக்
கண்டம் செல்லும்
புரவிப்பெண்ணாக அவள்
உணரும் தருணங்களை..

ரேகைகளும் பாகைகளும்
தொடாத அவளது
ஆழிப்பேரலையான
அனுபவத்தை விவரித்தபடி.

விண்ணோக்கி நகரும்
ஊர்தியில் அவளை ஏற்றியநான்
ஏணிப்படியாயிருந்தேன்.,
மிதித்துச் செல்லட்டுமென.

ஏற்றிவிட்ட பெருமிதத்தில்
சுகித்தபடி இருந்தேன்
என்னுடைய இடத்திலேயே
என் வலியை ரசித்தபடி.

Series Navigationகுற்றங்கள்அவரைக்கொடிகள் இலவமாய்