விடாமுயற்சியும் ரம்மியும்!

 

கலைத்துப் போட்டு

அடுக்கி

பிரித்துப் பின்

கோர்த்துப்போட்டாலும்…

விசிறிக் கலைத்து

என

எல்லா வித்தைகளும் தோற்று

எதிரிக்குத்தான் வாய்க்கிறது

ரம்மியும் ஜோக்கரும்!

 

பதினாலாவது அட்டையோ

புதிய அமைப்பாய்

தனித்துத் தொலைக்க

அதுவும் சேர்கிறது

அவனுக்கு!

 

தோல்வியைத் துரத்தும்

புள்ளிகள் குறைக்க முனைகையிலும்

எடுப்பதெல்லாம்

படம்பதித்தே வருகிறது!

 

மேற்கை இறக்குவதெல்லாம்

மூன்றாம் கைக்குத் தேவையாம்

கீழ்க்கையோ நான்

கீழே விட்டதெல்லாம் பொறுக்கி

 

சட்டென அடிக்க…

 

முதல் ஆட்டமும்

துரதிருஷ்டமும்

முற்றிலும் மறந்து

மற்றுமொரு நேர்காணலுக்குத்

தயாரானது

வேலையில்லா வாலிபம்!

 

 

Series Navigationசித்தி – புத்திகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரு கதைகளுக்கு இடையே (கவிதை -40 பாகம் -3)