விட்டில் பூச்சிக்கு விட்டேந்தியாய் அலையும் வீட்டு பூனை

அரிதான காட்சிதான்!
விட்டில் பூச்சிக்கு விட்டேந்தியாய்
அலையும் ஒரு வீட்டு பூனை!
என்னவெல்லாம் சாகசம் செய்கிறது!
பாயும் புலியாக!  ஆடாமல் அசையாமல்!
பதுங்கி பாய்ந்து!
தாவிக்குதித்து!  தடம் பார்த்து!
தீவிரமாய் திட்டம் தீட்டி!
அடி மேல் அடி வைத்து!
கிளைக்கு கிளை தாவி!
இருட்டில் இப்படியும் அப்படியும்
இடைவிடாது அழையும் பூனை!
அரிதொன்றும் இல்லை
விடிந்தால் மறையும் விண்மீன் கண்டு
அரிதாரம் பூசி
ஆட்டம் காட்டும்
நட்சத்திர நாயகர்கள்-காண்!
அசட்டு ஆசாமிகள்காண்!
Series Navigationபயணத்தின் மஞ்சள் நிறம்..இரவின் அமைதியை அறுத்துப் பிளந்த பலி