விளையாட்டு

பார்வையாளர்கள் குறித்த
பதட்டங்கள் ஏதுமின்றி
ஒரு விளையாட்டு துவங்கியது
கேள்விப்பட்டிடாது புதிதாக இருக்க
எல்லோர் நாவுகளிலும் பற்றிய தீ
வரைபடங்களில் மிளிரும்
நாடுகள் மீதும் நகரத் துவங்கியது
தேச நலனுக்கு பெரும் குந்தகம் வந்ததென
கமிட்டிகளை நியமித்தது அரசு
புத்தி ஜீவிகள்
கணிப்புகளை மேற்கோள்களின் நிழலில் வைத்தனர்
குறிசொல்லி சாமியாடிகளும்
அவிழ்க்கத் துவங்கினர் பொய் மூட்டைகளை
சமூக அறிஞர்கள் சந்தோசங்களை பகிர்ந்தனர்
வேப்ப மரத்தில் பால் ஒழுகுகிறதெனும் செய்தியென
அசட்டையாக இருந்த என்னுள்ளும்
ஆவல் பற்றிக்கொள்ள ஓடினேன்
துளி அடையாளமற்று போக்கிடச் செய்யும்
அனுபவம் தேறிய வேட்டையர்கள்
வேறு வேறு உபகரணங்களால்
வெற்றிகொள்ள துடித்தபடியிருக்க
தகர்க்க இயலாதவாறு தப்பிக்கொண்டிருந்தது பாறை
பறவையாகி…

Series Navigationஅரிமா விருதுகள் 2012புதுப்புனல் விருது 2012 ஏற்புரை – நானும் என் ஸ்குரூ டிரைவரும்