விழிப்பு

சந்தங்கள் மாறித்
துடிக்கும்
இருதயம்
தினமும் புதிதாய்
இங்கே –

ஆயிரம் காதை
சொல்கிறது
பௌதிகம் தாண்டிய
திசைகளில்…

வெயிலோ பட்டெரிக்கும்
வெந்தீ சுட்டு எரிக்கும்
வார்த்தை
பட்டு உடையும் இதயம்
படாத பாடு படும்…
யாதும் தொடாமலே
எண்ணங்கள்
இடமாறலாமா…?

நிலவு கந்தளானால்
அது
உன் பிறை நுதல் என்பேன்.,
இருள் கந்தளானால்
அது
உன் விழி வீசும் சுடர் என்பேன்.,
கனவே கந்தளானால்
அதைத் தான் யாது என்க..?,
பூவுலகில்
துயில் கலைந்தது என்கவா..??!

ஜுமானா ஜுனைட், இலங்கை.

Series Navigationதூரிகையின் முத்தம்.ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 8