வைகையிலிருந்து காவிரி வரை

சங்ககால நினைவுகள் காயம்பட
தண்ணீர் மறந்து கிடந்தது
மதுரையின் வைகை.

மேல் கவிழ்ந்த கான்கிரிட் பாலத்தில்
புகைகக்கிப் பரிகசித்துப்போனது
சக்கர விசைகள்.

பிரிந்தும் சேர்ந்தும்
ஒட்டியும் விலகியும்
உறவுகள் போலப்
பாதைகள் கிளைக்க
ஈர்த்துச் சென்ற
சக்கரத் தடத்தில்
காலமற்றுக் கிடக்கும்
திருமோஹ¥ர்க் காற்றில்
நாராயணம் கமழ்ந்தது.

பரவசம் தணிந்து
வாழ்க்கைப் புழுதியில்
மீண்டும் உழன்று
சுழன்றது பயணம்.

கைகுலுக்கிப் பா¢மாறின
சிறு புன்னகைகளில்
மனம் ஒட்டாது
பிரியுமுன் காய்ந்தன
புதிய அறிமுகங்கள்.

சேர்ந்தும் கலைந்தும்
காற்று சொல்லும்
உருவங்கள் கொண்டு
நகர்ந்தது மேகம்

நடு நிசியில் முளைத்த
அரை நிலவின்
கலங்கிய ஒளியில்
மறைந்து கிடந்தது
பௌர்ணமி ஞாபகம்.

தூங்காது கரைந்த இரவு முழுதும்
எண்ணப் புதர்களில்
மலர்ந்திருந்த ஒற்றைப் பூவின் வாசம்
பதிலற்ற கேள்வியாய் நீடித்திருந்தது
அரங்கன் துயிலும் காவிரி வரும்வரை. — ரமணி

Series Navigationமாலை சூடஇலங்கையின் சித்திரவதைச் சட்டங்கள்