பெண்களுக்கு அரசியல் அவசியம் “ திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2014 ”

This entry is part 5 of 33 in the series 4 ஜனவரி 2015

பெண்களுக்கு அரசியல் அவசியம்
“ திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2014 ”
மத்திய அரிமா சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் “ அரிமா விருதுகள் ” வழங்கும் (குறும்பட விருது, ஆவணப்பட விருது, பெண் எழுத்தாளர்களுக்கான “சக்தி விருது “ ) , இவ்வாண்டு நிகழ்ச்சி 25/12/14 சிறப்பாக நடைபெற்றது.
.. மத்திய அரிமா சங்கத் தலைவர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார். பேரா.. செல்வி துவக்க உரை நிகழ்த்தினார்.பரிசுகள் பெற்ற 30 படைப்பாளிகளின் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. பரிசு பெற்றவர்களில் சிலரின் பேச்சு:
* விஜயலட்சுமி சுந்தர்ராஜன் –கோவை ( 1000 பக்க நாவல் “ ஆலமரம் “) எழுதியவர்:
அரசாங்கப்பதவிகளில் இருந்து விட்டு ஓய்வு பெற்று நகர வாழ்க்கை வெறுத்துப் போய் முதியோர் இல்லத்தில் சக வயதினருடன் வாழ்ந்து வருகிறேன். முதுமை வரம் என்றே உணர்கிறேன்.ஓய்வு நேரத்தை எழுதுவதிலும், படிப்பதிலும் கழிக்கிறேன். வாசிப்பு எல்லோருக்கும் அவசியம் மன இறுக்கத்தை தளர்த்த வாசிப்பு உதவுகிறது.
*சுஜாதா செல்வராஜ் – பெங்களூர் – இளம் கவிஞர்
பெண் சமையலறையில்தான் பாராட்டைப் பெறுகிறாள். சமையலறையை விட்டு வெளியே வரும் வாய்ப்புகளை பெண்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அரசியல் உணர்வும் அக்கறையும் பெண்ணுக்குத் தேவை. நடைமுறை வாழ்க்கையில் அரசியலை எதிர் கொள்பவளும் அவள்தான். பெண்களுக்கு அரசியல் அவசியம்
* கவுரி கிருபானந்தம்-ஹைதராபாத் –தெலுங்கு மொழிபெயர்ப்பாளர்
நம்மை நாமே செழுமையாக்கிக் கொள்ள இலக்கியம் அவசியம். எழுத்தாளன் சொல்லாதையும் புரிந்து கொள்பவனே நல்ல வாசகன். மொழிபெயர்ப்பு என்பது இன்னொரு வகை படைப்பாக்கமே.

1
* இடைமருதூர் மஞ்சுளா –சென்னை : நாவலாசிரியை, பத்திரிக்கையாளர்
பத்திரிக்கைத்துறையில் பெண்களின் அனுபவம் குறைந்ததல்ல. பல வீச்சுகளை காட்டியிரூகிறார்கள். ஊடகங்களில் பெண்கள் தீவிரமாக இயங்கி வரும் ஆரோக்கியமான காலம் இது.
படைப்புகளை தேர்வு செய்த எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் பேசுகையில் “ இரண்டாயிரம் ஆண்டுக்கும் மேற்பட்ட தமிழ் இலக்கிய பாரம்பரியத்தில் பெண்கள் பங்கு கடந்த இருபது ஆண்டுகளீல் குறிப்பிடத்தக்கது. அவ்வையார், ஆண்டாளுக்குப்பின் நல்ல கவிஞர்கள், எழுத்தாளர்கள் இல்லை என்ற வசவு இந்த்த் தலைமுறை பெண் எழுத்தாளர்களால் நீங்கியிருக்கிறது. த்லித்தியம், பெண்ணியம், உடல்மொழி,பெண்களின் பிரத்யேக அனுபவங்களை சொல்லும் படைப்புகளை உயர்ந்த தரத்தில் படைத்து வருகிறார்கள் “ என்றார். கவிஞர்கள் ஜோதி, மதுராந்தகன், பாண்டியன், சு.பழனிச்சாமி , பைரவராஜா உள்ளிட்டோர் கவிதைகள் வாசித்தனர்.
பொருளாளர் அரிமா கோபால் நன்றியுரை வழங்கினார்.
“ திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2014 ”
* அரிமா குறும்பட/ ஆவணப்பட விருது :
1. சாரோன், சென்னை( பட்டுக்கோட்டைகல்யாணசுந்தரம் பற்றிய ஆவணப்படம் )
2. யுகபாரதி புதுவை( தீதும் நன்று பிறர்தர வாரா )
3. நம்மூர் கோபிநாத், சென்னை( why why )
4.மதரா , திருனெல்வேலி ( கதவு )
5. கே.பி.ரவிச்சந்திரன் கரூர் ( “ விழிகள்” )
* சிறப்புப் பரிசு : திருப்பூர் குறும்படப் படைப்பாளிகளுக்கு
1.சபரீஸ்வரன், 2. சி.கோபிநாத் 3. பைரவராஜா
*. அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கானது )
1. .விஜயலட்சுமி சுந்தர்ராஜன் ( நாவல் ). கோவை 2. சுபாஷிணி, சென்னை, (கட்டுரை) . 3.இடைமருதூர் கி.மஞ்சுளா, சென்னை ( நாவல் ). 4.இந்திராபாய், சென்னை ( பெங்களூர் ) 5 .கவுரி கிருபானந்தம் ஹைதராபாத் ( மொழிபெயர்ப்பு ), 6..ஸ்ரீஜாவெங்கடேஷ், சென்னை( நாவல் ). .,7. கமலா இந்திரஜித்., திருவாரூர்(சிறுகதை ) 8.சாந்தாதத் ஹைதராபாத்) மொழிபெயர்ப்பு 9.தேனம்மை லட்சுமணன் (ஹைதராபாத்)-கவிதை 10. பாலசுந்தரி, திருவாரூர்(சிறுகதை ) 11. எம் எஸ் லட்சுமி, சிங்கப்பூர்(கட்டுரை) 12. மாதாங்கி , சிங்கப்பூர்- கவிதை. 13. ஈஸ்வரி, கோவை (கட்டுரை) 14 கவுதமி, கோவை -கவிதை 15. சவுதாமினி , தாராபுரம் (கட்டுரை) 16. ராஜேஸ்வரி கோதண்டம், ராஜபாளையம் (மொழிபெயர்ப்பு ) 17. ஜெயஸ்ரீ சங்கர்(ஹைதராபாத்) நாவல்,18.மைதிலி சம்பத் (ஹைதராபாத்), நாவல் 20.வனஜா டேவிட் , பெங்களூர் நாவல் 21. ராமலட்சுமி , பெங்களூர், – சிறுகதை 22.சுஜாதா செல்வராஜ் , பெங்களூர் –கவிதை. 22.அகிலா கோவை ( கவிதை )

Series Navigationகலவரக் கறைகள்வேழம்
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *