உறைந்திடும் துளி ரத்தம்..

0 minutes, 0 seconds Read
This entry is part 8 of 46 in the series 5 ஜூன் 2011

* உன்
துயரத்தின் சாயலை
நகலெடுத்துக் கொள்ளும்படி
உத்தரவிடுகிறாய்

பிடி நழுவும் குறுவாளின்
கூர் முனையில் உறைந்திடும் துளி ரத்தம்..

ஊடுருவி மீண்ட
துரோகக் கணத்தின் சாட்சியென துருப்பிடித்துக் காத்திருக்கிறது

உன்
வரவுக்காக

*******
–இளங்கோ

Series Navigationஈழத்து அமர எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு.ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 13
author

இளங்கோ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *