ஓரு பார்வையில்

0 minutes, 2 seconds Read
This entry is part 31 of 46 in the series 5 ஜூன் 2011
கிறுக்கலற்ற வெண்தாளை கண்டதும்
வரைய தோணுவதை போல ..

.
கறைகளற்ற அடுப்பறையை கண்டதும்
சமைக்க தோணுவதை போல ..

.
பறக்க தோன்றவில்லை,
களங்கமற்ற வானத்தை கண்டதும் !

.
ஏனோ தெரியவில்லை!!
அக்கணத்தில் , அவ்வொரு பார்வையில் ..
சிலிர்க்க வைக்கும்
மத்தாப்பு பூக்கள்
தெரித்தது உடலெங்கும்..

.
தெரித்தது தளும்ப தொடங்க ..
மொட்டை மாடியிலிருந்து தடதடவென்று  கீழிறங்கி
குழந்தையை கட்டி முத்தமிட்டு
நிலை பற்றாமல் சுற்றினேன்
அங்குமிங்கும்..

.
ஏனோ தெரியவில்லை!!
ஜன்னல் வழியே - மீண்டும்
வானத்தை , கண்கள் விரிய கண்டு
என்னையறியாமல் சிரிக்க தொடங்கியிருந்ததும்..

.
தளும்பியது -
திண்டு திரசலில்லாமல்
விரவ தொடங்கியிருந்தது
விரிந்த அந்நீலவானம் போல...

- சித்ரா (k_chithra@yahoo.com)

 

Series Navigationகுடிமகன்அம்மாவின் நடிகைத் தோழி
author

சித்ரா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *