வினா ….

இருளை உள்ளடக்கியே பரவிக்கொண்டிருக்கின்றன வெளிச்சக் கீற்றுக்கள் எங்கும் துளை போட இயலாமல் காற்றுவெளியில் இறுகி கோளங்களாய் உருண்டு வீசப்படாத எரிபந்துகளாய் அந்தக் கோள்கள்... வழி எனும் விடை தெரிந்தோ தெரியாமலோ திசை எங்கிலும் விரவிக் கொண்டே தனித்தொரு பாதையமைத்து எதிலும் படாமல்…
சனி மூலையில் தான் நானும்

சனி மூலையில் தான் நானும்

சனி மூலை என்று தன் கன்னி எழுத்து முயற்சியை அடையாளப் படுத்துவார்களா? பொதுவாக நம் தமிழர்களுக்கு இதைக் கேலி செய்யத் தோன்றலாம். ஆனால் அப்படி ஒருவர் கிடைத் திருப்பதும், சனி மூலை ஒரு புத்தகமாக உருவாவதும் நல்ல விஷயங்கள் தான். நமக்கு…

(71) – நினைவுகளின் சுவட்டில்

சீனுவாசன் மாத்திரமில்லை.எனக்கு ஒரு பரந்த உலகம் வெளியே விரிந்து கிடப்பதைக் காட்டியவர்கள். மற்றவர்களைப் பற்றி அவ்வப்போது சொல்கிறேன். சீனுவாசன் என் அறையில் வசித்த காலத்தில். வெளியூரில் வேலை பார்த்திருந்த காலத்திலும் அவர் அவ்வப்போது வந்து போவார். அவருடைய பாதிப்பு என்னை மாத்திரமல்ல.…

நானுமொரு கருவண்டாகி சுழன்றேன்.

தலையால் நடந்து கொண்டிருக்கும் ஒரு வினோத பட்சியின் பின்னே துரத்தப்பட்டு அலைக்கழிக்கப் படுகிறேன் கைகால் முளைத்த மரங்கள் ரத்தம் சிதறும் நரம்புகளின் வேதனையை பூமியில் வரைந்து செல்கிறது எனக்கென தென்பட்ட திசையெங்கும் வருடிப் புணர்ந்த கனவின் துளிகள் ஒன்றின் மேல் மற்றொன்றாகி…

புழுக்கம்

உடம்பு பூராவும் ரத்தத்துக்குப் பதிலாக அந்த விஷச் சொற்கள் ஓடுவது போல ரத்னாவுக்குத் தோன்றியது. என்ன ஒரு கேடு கெட்ட நிலைமை. அவளுக்கு அருவருப்பாக இருந்தது. மனம் குன்றுவது போலிருந்தது. இந்த உணர்ச்சிகள் எல்லாம் ஒரு சேர எழுந்து அவளைக் கவ்வி…

புறமுகம்.

என்றுமே தோன்றிடாத பல புன்னகையை இன்று இக்கணம் சுமக்கிறேன் . இது எவ்வளவு மிகைமை உடையவையாக இருந்தும் இன்னுமும் சிரிக்கப்படுகிறது. மீண்டுமொரு தடவை இந்த நிகழ்வு வராமல் போகவும் கூடும் அதன் பொருட்டே ஏற்று கொள்கிறது புறமுகம். புன்னகையின் சிதறல் வெளியே…

சமன் விதி

பிடிகள் தேடி கைகளும் ஆதாரங்கள் தேடி கால்களும் அலையும். உயிர்வளிக்காய் பிதற்றும் நுரையீரல்கள்... வெள்ளி மறைந்து நாளை குறித்த ஐயங்கள் முளைக்கையில் எங்கோ தூரத்தில் ஓர் ஊர் குருவி தனக்கான கூட்டை கட்டி முடித்திருக்கும். பெருவேதனைக்குப் பின்னே பிரசவித்த மகவு கண்டு…

ஓர் இரவின் கீழ் சில நிலாக்கள்..

வானெங்கும் கருந்திரள்கள் நிறைத்திடும் இரவொன்றின் நேர்க்கோட்டில் அசையும் வளைவுகளென நெளிகின்றன இதயத்துடிப்புகள்.. நெற்றி வகிடின் இறுக்கத்தினில் செவ்வானம் ஒன்றை எழுதிடச் சொல்லி நிற்கையிலே அறைமுழுதும் வெளிர்மஞ்சள் ஒளியில் சிறகு விரிக்கின்றன வண்ணத்துப்பூச்சிகள் சில.. வானவில்லின் நீளத்தில் பேசி தீர்க்க ஆயிரம் இருப்பினும்…

காற்றும் நானும்

ஆழ்ந்த உறக்கத்தினிடையே அடித்த காற்றில் வெளியே பறந்த தெருத்தூசுகளோடு அடித்து கொண்டிருந்த சன்னல் கதவின் அகண்ட வெளிகளோடு தொலைந்து போயிற்று தூக்கமும். விழிகளை அடைத்து இருண்ட வெளியில் புரண்டு புரண்டு காற்றோடு மிதந்து போன தூக்கத்தை இமைகளின் முடிகளால் கட்டி இழுக்க…
ஜே. ஜே சில குறிப்புகள் – ஒரு வாசக அனுபவம்

ஜே. ஜே சில குறிப்புகள் – ஒரு வாசக அனுபவம்

ஜே. ஜே. எனும் தமிழ் படத்தில் நாயகன் நாயகி கைகளில் தவழும் ஒரு நாவல், எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் படைப்புகளில் அதிகம் பேசப்பட்ட நாவல், காலச்சுவட்டின் கிளாசிக் வரிசையில் வருகிற நாவல் என்பது தாண்டி நாவல் பற்றிய எந்த விமர்சனக் குறிப்பும்…