அபியும் அப்பாவும்

This entry is part 22 of 38 in the series 10 ஜூலை 2011

சிகரெட் பிடிப்பதில்லை

மது அருந்தும் பழக்கம் இல்லை

பிற கெட்ட பழக்கங்கள் இல்லை

– இவன் வேண்டாம்

 

வெள்ளி செவ்வாய் தவறாது

கோவிலுக்கு போவான்

இறைவழி நடப்பதில் தான் விருப்பம்

வம்புதும்புக்கு போய் பார்த்ததில்லை

– இவன் வேண்டாம்

 

அரட்டை அடித்துக்கொண்டே இருப்பான்

தன்னோடு இருப்பவரை மகிழவைப்பதில் வல்லவன்

சிரித்து மயக்கும் கலையில் எம்டன்

– இவன் வேண்டாம்

 

உம்மணாமூஞ்சியாய் இருப்பான்

தேவையற்ற வார்த்தைகள் பேசமாட்டான்

தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பான்

– இவன் வேண்டாம்

 

பெண்கள் என்றாலே ஒதுங்கிச்செல்வான்

பிற பெண்களைத் தமக்கையாகப்பார்ப்பான்

காதல் கத்திரிக்காயை வெறுப்பான்

– இவன் வேண்டாம்

 

எடுத்ததிற்கெல்லாம் சரி என்பான்

அதிகம் யோசிக்க மாட்டான்

எதிர்த்து பேசவும் அஞ்சுவான்

– இவன் வேண்டாம்

 

“பிறகு எவன் தான் வேண்டும்”

என சலிப்போடு கேட்டார்

என்றார் அப்பா

“திருமணத்திற்குப்பிறகு

மேற்சொன்ன அனைத்துமாக

உள்ளவன் தான் வேண்டும்

கண்டுபிடித்துக்கொடு”

என்றாள் அபி.

 

 

– சின்னப்பயல்

– chinnappayal@gmail.com

Series Navigation2011 ஜப்பான் சுனாமியில் நேர்ந்த புகுஷிமா விபத்துகள் போல் கூடங்குள ரஷ்ய அணு உலையில் நிகழுமா ? கட்டுரை 7எனது இலக்கிய அனுபவங்கள் – 6 பத்திரிகை சந்தா
author

சின்னப்பயல்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *