Posted in

கிறீச்சிடும் பறவை

This entry is part 10 of 34 in the series 17 ஜூலை 2011

 

நாள் தவறாமல்

வந்து என் ஜன்னல்

கம்பிகளில் அமர்ந்து

ஒரு சிறு பறவை

கிறீச்சிடுகிறது

என் கவனத்தைக்கவர.

 

எதை ஞாபகப்படுத்த ?

மறந்துபோன

இயற்கையுடனான

நட்பையா ?

அல்லது கடந்து சென்ற

காலங்களை

மீள் நினைவூட்டவா ?

 

எனினும்

நாளையும் வரும்

என்ற எதிர்பார்ப்பை

என்னில்

ஏற்படுத்துவதைத்தவிர.

அது வேறொன்றும்

செய்வதில்லை.

 

மேலும் அது

ஒரு இறகையும்

உதிர்த்துச்செல்வதில்லை

எனக்கென.

 

சின்னப்பயல்

– chinnappayal@gmail.com

Series Navigationஅழுகையின் உருவகத்தில்..!பிரயாண இலக்கியம் – தி ஜானகிராமனும் மற்றோரும் – இரண்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *