குற்றங்கள்

This entry is part 7 of 32 in the series 24 ஜூலை 2011

குற்றத்தினை கையாள்வது
மிகவும் அசாதரமானது
ஆனாலும்
அனைவரும் எளிதாக
கடந்து விட கூடிய
இயல்பாகி விட்டது .

குற்றங்கள் எப்பொழுதும்
தனித்து விடப்பட்ட
தன்மையை
பெற்றிருப்பதால்
அதனை
நீங்களும் நானும்
அறிந்திருக்க வாய்ப்பில்லை .

எந்தன் குற்றத்தினை
உங்களின் குற்றங்களுடன்
இப்பொழுது
சேர்த்து கொள்கிறேன்
நீங்கள் எதுவுமே
கேட்கப்போவதில்லை
அதற்கான அவசியம்
என்றுமே
இருக்கப்போவதில்லை .

உணர்த்துவதற்கு என்று
படைக்கப்பட்ட மனம்
தொலைந்து விட்டதை
குற்றங்கள் மட்டுமே
அறிந்திருக்கிறது .

நானும் நீங்களும்
ஒன்றிணைப்பது
மனித உயிரினத்தால்
அல்ல
குற்றங்களினால் .
-வளத்தூர் தி.ராஜேஷ் .

Series Navigationஈழத்து அமர எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு.நீங்களும் எழுதலாம்.வாய்ப்பு:-
author

வளத்தூர் தி .ராஜேஷ்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *