பிரியாவிடை:

பிரியா விடைகளும் பிள்ளைகளுக்கு முத்தங்களும் என வாழ்ந்து கொண்டிருந்தது விமான நிலையம் எட்டிய உயரத்தில் கிட்டிய நெஞ்சில் மகனை முகர்ந்தது மூதாட்டி உம்மா கடவுச் சீட்டு அடங்கிய கைப்பை முழங்கையில் தொங்க கடைக்குட்டியை கைகளில் ஏந்தி வாப்பா பயணம் சொல்ல குழந்தை…

அந்த ஒருவன்…

உன்னைப் போலவே தான் நானும் பிரமிக்கின்றேன் எதிர்பாரா தருணத்தில் எப்படியோ என்னுள் நுழைந்திருந்தாய் இனிதாய் நகர்ந்தவென் பொழுதுகளில் -உன் ஒற்றைத் தலைவலியையும் இணைத்துக் கொண்டாய் பழகியதைப் போலவே ஏதோ ஒரு நொடியில் பிரிந்தும் சென்றாய் ஏன் பழகினாய் ஏன் பிரிந்தாய் எதுவுமறியாமல்…

என்னைச் சுற்றிப் பெண்கள்: நூல் அறிமுகம்

ஆண்கள் சார்ந்த உலகில் ஒரு பெண் பிரதமரும்., முதல்வரும் எவ்வளவு பிரச்சனைகளை., எள்ளல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. பெண்களுக்கு சம உரிமை என்று பேசினாலும் கூட நம் இந்தியக் குடும்ப உறவு முறைகளில் வெளிப்படாத சிக்கல்கள் ஏராளம். தன் வாழ்வில் எதிர்நீச்சல்கள் போட்டு…

மூன்று கன்னங்களில், மூன்று விரல்கள்

"என்னய்யா கேசு?", இடுப்பில் நிக்காத காக்கி கால் சட்டையை மேலே இழுத்தபடி உள்ளே நுழைந்தார் துணை ஆய்வாளர். நாள் முழுவதும் அமைச்சரின் 'மது, புகையிலை விலக்குப் பேரணியில்' விறைப்பாக சல்யூட் அடித்துவிட்டு களைத்துப் போய் வந்திருந்தவருக்கு, குடுவையிலிருந்து தேநீர் கொடுத்தார் ஏட்டு.…

தூசு தட்டப் படுகிறது!

படிந்துறைந்த பாசிப் படலத்தின் பச்சைப் பசேல் பளிங்கு நிறமற்ற மனதின் பதிவுகளில் ஆசுவாசப் பட்டுக் கொள்ள முடிகிறதெனினும்.. வழுக்கல்கள் நிறைந்த அனுபவ படிகளில் அடிக்கடி எச்சரிக்கை எழுப்பும் பாதங்களின் ஏற்ற இறக்க தொனியில்.. யாரோ ஒருவரின் இருப்பு - தூசு தட்டப் படுகிறது..! கரையான்…

தாய் மனசு

“அம்மா அவசரமா ஒரு முன்னூறு ரூபா வேண்டியிருக்கு. வர்ற மாச சம்பளத்துல புடிச்சுக்குங்க.” “எதுக்கு முன்னூறு. பிடிக்கதுக்கு அங்க என்ன மிச்சமிருக்கு. மொத்தமா வாங்குனது, நடுவுல வாங்குனது எல்லாம் போக இந்த முன்னூறும்னா என்னத்த கைக்கு வரும்?” கோதை மறுக்க மாட்டாள்…

பெண்பால் ஒவ்வாமை

பசுவுக்குப் பூஜை பெண்சிசுவுக்கு கள்ளிப்பால் தொல்காப்பியன் அறியாத பால்வேற்றுமை என்று 11 வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கவிதை இப்போது நினைவுக்கு  வருகிறது. 26 ஜூன் 2011 ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான  பெண்பால் அழித்தல், பால் மாற்று அறுவைச்சிகிக்சை…

“கானுறை வேங்கை” விமர்சனம்

கடமா தொலைச்சிய கானுறை வேங்கை இடம்வீழ்ந்தது உண்ணாது இறக்கும் - இடமுடைய வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர் மானம் அழுங்க வரின் என்ற நாலடியார் பாட்டில் இருந்து பெறப்பட்ட தலைப்பு "கானுறை வேங்கை". ஆங்கிலத்தில் கே.உல்லாஸ் காரந்த் எழுதிய "The Way…

வேடிக்கை

வீதியின் வழியே சென்ற பிச்சைக்காரனின் தேவை உணவாய் இருந்தது வழிப்போக்கனின் தேவை முகவரியாய் இருந்தது கடந்து சென்ற மாணவர்களின் கண்கள் மிரட்சியுடன் இருந்தது குறிசொல்பவள் தேடினாள் தனது பேச்சுக்குத் தலையாட்டும் ஒருத்தியை சோப்பு விற்பவள் யோசித்துக் கொண்டே வந்தாள் இன்று யார்…

பயணம்

ஹபீபுல்லா கிளம்பிக் கொண்டிருந்தார். பாத்திமுத்துவும் அவரோடு சேர்ந்து பொருட்களைப் பெட்டியில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். அதை எடுத்து வச்சியா, இத வச்சியா என்று கேட்டுக் கொண்டே, மகனின் கனமான மௌனத்தையும் கவனிக்கத் தவறவில்லை. மகன் சலீமும் பேப்பர் படிப்பது போல இருந்தாலும்,…