கறை

நேற்று உன்னை சந்தித்துவிட்டு வந்த பிறகு வேலை ஓடவில்லை பார்க்கப்படவேண்டிய கோப்புகளெல்லாம் என்னைப் பார்த்துச் சிரித்தன சதா வண்டு ஒன்று மனதைக் குடைந்து கொண்டிருந்தது வீட்டுக்கும் அலுவலகத்துக்கும் இடையே எப்படிப் பயணிக்கிறேன் எனக்கே தெரியவில்லை மைதானத்தில் உதைபடும் பந்தாய் ஏன் நானிருக்கிறேன்…

மூன்றாமவர்

புத்தி செய்திகள் படிக்கிறது மனம் அங்கலாயிக்கிறது கேட்டபடி.. எனது வரவேற்பு அறையில். நான் இருவரையும் பார்த்தபடி, தேநீருக்கும் வழியில்லாத விருந்தாளி போல கண்கள் மூடினால் ஓய்கிறார்கள் திறந்தால் மறுபடியும் கூச்சல் ஏதொரு செய்தியுடன் ,விடாமல் !! தெரிந்தவர்களிடம் கேட்டேன்,சொன்னார்கள் - இருவரையும்…

ஒரு வர்க்கத்தின் நிதர்சன சூடுகள்

மேசைமீது ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கப்பட்டிருந்த புத்தகங்களில் ஊர்ந்தேறிக் கொண்டிருந்தது வெயில் நுகருமொரு சொற்ப மரநிழல்.. நிழல் துப்பிய குளிருணர்வில் புத்தகங்கள் ஒன்றொன்றும் காந்தப்பிணைப்புடன் இறுக்கமடைய, கிழிசல்கள் வழி எழுத்துக்கள் சில வெப்பமொழியில் ஏதேதோ பிதற்றத் துவங்கின.. என் விரல் நீவிய புத்தகமொன்று…

பறவைகளை வரைந்து பார்த்த ஒரு கார்ட்டூன் சித்திரக்காரன்

நீந்திச் செல்லும் பறவையொன்று அகால வெளியின் எல்லைகளினூடே சிறிதும் களைப்பற்று காற்று எழுதிச் செல்லும் வரிகளைக் கேட்டு மிதந்து திரும்பவும் சிறகாகும் இதயம். விரல்கள் எழுதிய ஓவியம் திரைமீறும் எதிரில்வந்து பேசியது ஓவியப் பறவை நிஜம் எதுவென அறியாத கணங்களில் குழம்பித்தவித்த…

ஆட்டுவிக்கும் மனம்

மண்ணில்  மீண்டும் முளைக்க  புதைத்த பற்கள் விண்ணில் மிளிரும்  வின்மின்களாய்  ஒளிருது உன்னிடம் கதையாய்  சொன்ன என்மனம் மண்ணில் உன்னை புதைத்து விட்டு விண்ணில் தேட அறிவு  மறுக்குது இன்பங்கள்  கனமாகின்றன துன்பங்கள் எளிதாகின்றன ஏழு வயதில்  மறைந்த பெண்ணை இருபது வயதில்   வரைய வண்ணமில்லை தடைபட்ட கனவுகள் எப்படி தொடர்ந்திருக்கும் ஊகிக்க …

தி ஜானகிராமனின் அம்மா வந்தாள்

இன்றைய தமிழ் இலக்கியத்தில் தி.ஜானகிராமன் ஒரு தனித்த, விதிவிலக்கான நிகழ்வு.. அவர் ஒரு முதல் தர இலக்கியத் தரமான எழுத்தாளர் அதே சமயம் மிகப் பிரபலமான எல்லோரும் விரும்பி வாசிக்கும் எழுத்தாளரும் கூட. இவரைப் போன்று இலக்கியத் தரமும் பிராபல்யமும் ஒருங்கே…

செய்யும் தொழிலே தெய்வம்

1 உமாசங்கரின் தொலைபேசியில் ஒரு எடுக்கத் தவறிய அழைப்பு. பித்தானைப் பிதுக்கிப் பார்த்தார் உமாசங்கர். அவருடைய நண்பர் பூபதி கோலாலம்பூரிலிருந்து அழைத்திருக்கிறார். உடனே பூபதியை அழைத்தார் உமா. உமா பூபதி நட்பைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். முப்பது ஆண்டுகளுக்கு…

கொ.மா.கோ.இளங்கோ கவிதைகள்

திருந்த செய் பிழைகளெல்லாம் பழைய பித்தளை பாத்திர துளைகள் திருத்தங்கள் ளெனும் ஈயம் பார்த்து அடைத்தல் சிஷ்டம் முலாம் பூசி மறைத்தல் கஷ்டம்   அம்மா மழை கொட்டி மலை சொட்டும் அருவியாய் நிலம் தொட்டு கடலெட்டும் நதிகளாய் கடன் பட்டும்…

தமிழ் படுத்துதல்

வலையுலக தமிழ்ப்பயனாளிகள் தமிழ்ப்படுத்துகிறேன் பேர்வழி என்று கிளம்பி தமிழைப் படுத்தி எடுக்கும் கொடுமை எந்த அபத்த எல்லைக்கு சென்று, என்று நிற்குமோ தெரியவில்லை. நம் மொழியில் கலைச்சொற்களை உருவாக்கப் பாடுபடுகிறோமோ இல்லையோ, வெகு தயாராக  ஆளின் பெயர், இடப்பெயர், நிறுவனப்பெயர், வியாபார …

கடன் அன்பை வளர்க்கும்

‘வேறு எந்தக் கடனும் இப்போது இல்லை.’ புதுக் கடனுக்கு விண்ணப்பிக்க வந்த இடத்தில் வங்கி மேலாளர் கேட்கும் முன்னரே சொன்னான். முந்தைய கடன்களை காலத்தே அடைத்ததற்கான நற்சான்றிதழ்களை பெருமையுடன் முன் வைத்தான். சிணுங்கியது அலைபேசி ‘அப்பா எனக்கு நீ பத்து ரூவா தரணும்’ அறிவித்தாள் அன்பு மகள்.. முன்…