கூறியிருக்கவில்லை

This entry is part 39 of 47 in the series 31 ஜூலை 2011

இன்று இருப்பதை
கவனமாக
பரிசோதித்து
கொள்கிறேன்

ஒவ்வொன்று
செயலும்
காலத்தின்
பிரதிபலிப்பை
காட்டி கொடுத்து
விட கூடும் .

முன்பு இருந்தவையை
விட அதிக
எச்சரிக்கை
தேவைப்படுகிறது
என் மனதின்
மவுனத்திற்கு

தீவிரப்படுத்தும் கருத்தை
நொடியின் மீதே
கடந்து விடுகிறது
என் ஒவ்வொரு
செயலும் .

விளைகின்ற யாவும்
மற்றவர்களை போல
என்னை சேராமல்
இருக்க கடவுது.

இவை அனைத்தும்
என்றேனும் ஒன்றை
உங்களிடம்
கூறியிருப்பதை
ஏற்றுகொண்டிருக்கக் கூடும்
மறுத்திருக்கவும் செயலாம்
அதை விட
மிகவும் எளிதானது
நான் எதுவும்
கூறியிருக்கவில்லை
என்பது தான் .
-வளத்தூர் தி .ராஜேஷ்

Series Navigationசுவீகாரம்நினைவுகளின் சுவட்டில் – (73)
author

வளத்தூர் தி .ராஜேஷ்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *