ஜெயலலிதா மீதான மக்களின் காழ்ப்புணர்ச்சி

This entry is part 25 of 47 in the series 31 ஜூலை 2011

கடந்த ஆட்சி மாற்றத்தை அடுத்து எல்லா பத்திரிக்கைகளிலும், மக்கள் புரட்சி! மக்கள் விழித்துக் கொண்டனர்! மக்கள் பாடம் கர்பித்துவிட்டனர்! என்றெல்லாம் பரபரப்பு கிளப்ப பட்டது. பீகார் மக்களை போல் தமிழ் நாட்டு மக்கள் இல்லை; அவர்கள் புத்திசாலிகள் என்று கூட பேசப் பட்டது. சரி தான். ஒரு பெரிய தவறு நிகழும் போது மக்கள் விழித்துக் கொள்ளத் தான் செய்கின்றனர். ஆனால், தமிழர்கள்,அரசியலை சரியாக புரிந்து கொண்டிருக்கின்றனரா என்ற கேள்வி, இருபது ஆடுகாலமாக எல்லோரின் மனதிலும் எழத் தான் செய்கிறது.
தி.மு.க-வின் லட்சணம் முழுவதுமாக விளிச்சத்திற்கு வரும் காலம் இது. இதற்கு முன்னரும் இது போன்ற நிலை இருந்திருக்கிறது. எம்.ஜி.ஆருக்கு பின் ஆ.தி.மு.க, தூய்மையான ஆட்சித் திறனை வெளிப்படுத்தவில்லை என்பது உண்மை என்றாலும்,திமுகவுக்கு ஆ.தி.மு.க எவ்வளவோ மேல் என்ற ரீதியில் தான் மக்களின் மனநிலை இருக்கிறது. ஆனாலும், கடந்த 20 ஆண்டுளில் நடந்த 5 தேர்தல்களிலும், தமிழக மக்கள் ஏன் இந்த இரு கட்சிகளுக்கும் மாறி மாறி வாக்களித்துள்ளனர் என்பது ஒரு முக்கியமான கேள்வி.
எம்.ஜி.ஆர் காலத்தில் தலை எடுக்க முடியாத தி.மு.க, அதற்குப் பின் போட்டியிட்ட ஐந்து தேர்தல்களில், 1996 இல் நடந்த தேர்தலில் மட்டும் தான் மாபெரும் வெற்றியை ருசித்தது. அந்த தேர்தலில் திமுக வின் வெற்றிக்கு காரணம், ஜெயலலிதா அரசின் ஊழல்,அவர் ஹிட்லரைப் போல் நடந்து கொள்கிறார் என்ற குற்றச் சாட்டு, சசிகலாவின் மறைமுக ஆட்சி,தத்துப் பிள்ளையின் ஆடம்பரக் கல்யாணம் போன்றவை.
இந்த தேர்தல் முடிவு ஒரு புறம் இருக்க,இருகட்சிகளும் நல்லாட்சி புரிந்து ஒரு முறையாவது வெற்றி பெற்றிருக்கிறதா என்ற கேள்வியை எழுப்ப விரும்புகிறேன். இந்த கேள்விக்கு விடையாக ‘இல்லை’ என்ற பதிலே உங்களிடமிருந்து வரும் என்று எனக்கு தெரியும். ஆனால், ஒரு முறை கூட நல்லாட்சி நடக்கவில்லையா என்ற கேள்விக்கு, ‘comparitively far more better’ என்ற வகையில் ஒரு நல்லாட்சி நடந்தது என்று பதிலளித்து அதை நிரூபிக்கவும் முடியும்.
அந்த ஆட்சி, 2001- 2006 இடைவெளியில் நடந்த ஆ.தி.மு.க வின் ஆட்சி. இங்கு நான் கூற விரும்பும் விஷயத்தை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். இந்த காலக் கட்டத்தில் முறைகேடுகளே நடக்கவில்லை என்று கூறுவதற்கு நான் ஒன்றும் ஜெயலலிதாவின், அதிமுகவின் ரசிகன் அல்ல. அரசு அலுவலர்களின் மேல் தாக்குதல் நடத்திய சம்பவம் ஜெயலலிதாவின் ‘ஹிட்லர் இமேஜுக்கு’ மேலும் வலு சேர்த்தது என்றே கூற வேண்டும். ஆனால், அதுவும், வேறு சில குறைகளையும் தவிர, ‘இவர்கள் சரியில்லை’ என்று கூறி மக்களின் மனதை மாற்ற திமுகவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதும் உண்மை.அதனால் தான் இலவசம் என்ற மாயவலையில் மக்களை மயக்கியது திமுக. அதை மீறியும், அதிமுகவால் அறுபதுக்கும் மேலான இடத்தை பிடிக்க முடிந்ததென்றால், அந்த ஆட்சின் மீது பெரிதாக எந்த குறையும் மக்களுக்கு இருக்கவில்லை என்றே நிரூபணம் ஆகிறது. மேலும், 1991-96 இல் நடந்த முறைகேடுகளை விசாரிக்க பல வழக்குகளை திமுக தொடுத்தது. ஜெயலலிதாவும் கைது செய்யப் பட்டிருக்கிறார். ஆனால், 2001-2006 ஆட்சியில் வழக்குகள் தொடரப் படவில்லை! காரணம் கேட்டதற்கு கருணாநிதி, முதலில் அந்த வழக்குகளுக்கு தீர்ப்பு வரட்டும் என்று கூறித் தப்பித்துக் கொண்டார். ஆனால், அவர் முன்பு தொடர்ந்த வழக்குகளில் பெரும்பாலானவற்றிற்கு தீர்ப்பு வந்த பிறகும், எந்த வழக்கும் ஆதிமுக மீது பாயவில்லை. முறைகேடுகள் இருந்தும் கருணாநிதி மறந்திருப்பாரா? கண்டிப்பாக இல்லை. அப்படியானால் முந்தைய ஆட்சியை விட ‘தேவலை’ என்று கூறும் அளவிற்காவது 2001-06 ஆட்சி அமைந்தது என்று தானே பொருள்? இது இப்படி இருக்க 2006 இல் நடந்த தேர்தலில் மக்கள் ஏன் தி.மு.கவை தேர்ந்தெடுத்தனர்? 30,000 கோடி வரை ஊழல் நடந்தாலும் திமுகவுக்கு கடந்த தேர்தலில் இருபதுக்கும் மேற்பட்ட இடங்கள் கிடைத்தன. ஆனால், அரசு ஊழியர்கள் தாக்குதல் போன்ற சில குறைகளுக்கு, ஆட்சியை விட்டே அகற்றும் அளவிற்கு ரோஷம் எப்படி வந்தது மக்களுக்கு? இந்த கேள்விக்கு அப்பட்டமான ஒரே பதில்,பெரும்பாலான மக்கள், நல்லாட்சியை கருத்தில் கொண்டு வாக்களிக்கவில்லை என்பதே! மக்கள் இலவசங்களை விரும்பி வாக்களிக்கின்றனர் என்பதை ஒரு காரணமாக எடுத்துக் கொண்டாலும், வேறொரு முக்கிய காரணம் இந்த வினோத முடிவுகளுக்கு மூலக்கூறாக இருக்கிறது. அது, அரசு நடவடிக்கை மீதான மக்களின் பொதுவான பார்வை! எது சரி, எது தவறு என்று மக்கள் முடிவெடுக்கத் திணறுகின்றனர். ஜெயலலிதா, அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பல நடவடிக்கை எடுத்தது மாற்றுக் கருத்தே இல்லாமல் ஒப்புக் கொள்ளவேண்டிய உண்மை. ஆனால், நியாயத்தின் பார்வையில் அந்த நடவடிக்கைகள் ஒப்புக் கொள்ளக் கூடியவையா இல்லையா என்பதை முடிவு செய்ய மக்கள் திணறுகின்றனர். உதாரணத்திற்கு பல விஷயங்கள் உள்ளன. க. கருணாநிதி கைது: ஜெயலலிதாவின் ஆட்சியில் கலைஞரை கைது செய்ததைப் போலவே, கலைஞர், அவர் ஆட்சியில் ஜெயலலிதாவை கைது செய்தார். இருவரும் தவறு செய்தனர் என்பது உண்மை. ஆனால், கலைஞர் கைதானதை மட்டும் ஏன் காழ்ப்புணர்ச்சி என்று பார்கின்றனர்? ஜெயலலிதா கைதான போது அவர் ஒத்துழைத்தார். இவர் ஒத்துழைக்காமல் குதித்தார். அதை பார்த்த மக்களுக்கு, ‘வயதான மனிதர். ஐயோ பாவம்’ என்று பட்டது. இது மக்களின் பார்வையில் உள்ள குறைபாடன்றி வேறென்ன? இருவரும் உள்ளே போக வேண்டியவர்கள் தான் என்று மக்கள் ஏன் நினைக்கத் தவறிவிட்டனர்? ௨. பல நேரங்களில் கலைஞர் தன் அரசின் மீது பழி விழுந்து விடக் கூடாது என்பதற்காக,மறைமுகமான தவறுகளை செய்துவிடுவார்.அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தியது இரண்டு தலைவர்கள் ஆட்சியிலும் நடந்திருக்கிறது. இருவரும் முதலில், உங்கள் கோரிக்கை சரியானதல்ல என்று எச்சரிக்கை விடுத்தனர். ஆனால், விஷயம் முற்றும் நேரத்தில், கருணாநிதியின் சாதுர்யம், ஜெயலலிதாவிடம் இல்லாமல் போய்விடுகிறது. உதாரணம்: நாளுக்கு 200 கோடி ரூபாய் இழப்பில் போக்குவரத்துத் துறை இயங்கிக் கொண்டிருக்க, ஊழியர்கள் போராட்டம் செய்து நெருக்கடி கொடுத்தனர் என்ற ஒரே காரணத்தால் ஊதிய உயர்வு அளித்து அவர்கள் வாயை மூடிவிட்டார் கலைஞர். ஆனால், இதே நிலையில் ஜெயலலிதா ஊழியர்களின் போராட்டத்தை அடக்கியவுடன், ‘ஒரு பெண்ணுக்கு இவ்வளவு திமிரா!” என்று எல்லோரும் கொதித்தெழுந்தனர்.நான் இங்கு அடக்குமுறையை நியாயப் படுத்தவில்லை. பேச்சுவார்த்தையில் தீர்வு கண்டிருக்க வேண்டிய விஷயத்தை விபரீதம் ஆக்கியது தவறு தான்.ஆனால் நோக்கம் சரி தானே? எல்லோரும் ‘தேவலை’ என்ற ரீதியில் ஓட்டளிக்கும் போது, கலைஞரின் தவறு தானே அதிகம் விமர்சிக்கப் படவேண்டியது? ௩. கனிமொழி கைது: கனிமொழி கைதாகி சிறை செல்லும் முன்பு, அவரை காப்பாற்ற திமுக தரப்பில் வைக்கப்பட்ட வாதங்களில் ஒன்று, அவர் பெண் என்பதால் கருணை காட்டவேண்டும் என்பது. இதே போல், கலைஞரை கைது செய்தபோது, ஒரு தியாகியை தூக்கில் போட்டதை போல, NDTV இல் ஜெயலலிதா வருத்தெடுக்கப் பட்டார். ஒரு வயதான மனிதரை இப்படியா இழுத்துச் செல்வீர்கள் என்று கேட்டதற்கு, அவர் தவறு செய்தார், கைது செய்தோம் என்று கூறினார் ஜெயலலிதா. இதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதே போல், கனிமொழி கைதான போது, கலைஞரையும் கூப்பிட்டு, நீங்கள் வைக்கும் வாதம் சரியா என்று ஏன் வருத்தெடுக்கவில்லை? ஜெயலலிதாவை கைது செய்தபோது கலைஞரிடம், ஒரு பெண் என்று இரக்கப் படாமல் இப்படி கைது செய்துவிட்டீர்களே என்று நேருக்கு நேராக ஏன் கேள்வி இல்லை? இது அடுத்த காரணம்! ஜெயலலிதா மட்டும் தான் காழ்ப்புணர்ச்சியில் இருக்கிறார் என்ற பொதுவான, தவறான ஒரு நினைப்பு, மக்கள் தொடர்பாளர்களான மீடியாவினரிடமும் இருக்கிறது. மக்களின் பார்வை இவர்களை பொறுத்தே அமையும் போது, சரியான முடிவு எப்படி ஏற்படும்?. ௪. இந்தியாவில், பொதுவாழ்க்கையும், தனிப்பட்ட வாழ்க்கையும் இணைத்தே பார்க்கப் படும். சில நேரங்களில், திறமை இல்லை என்றாலும், சொந்த வாழ்க்கையில் ஒழுக்கமாக இருந்துவிட்டால் அவரை கடவுள் ஆக்கக் கூட மக்கள் துணிந்துவிடுவர். முக்கியமாக, அந்த நபர் ஒரு பெண்ணாக இருந்தால், அழகு மட்டுமே போதும். கூகுளில் இந்த (PAK) மூன்றே எழுத்துக்களை இட்டுப் பாருங்கள். தேடல் ஆலோசனைகளில், ‘பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர்’ என்பது மூன்றாவதாக இருக்கும். காரணம், இப்போது தான் ஒரு அழகான பெண் அப்பதவியை ஏற்றிருக்கிறார். இப்படி அற்ப விஷயங்களுக்காக ஒருவரை பிரபலப் படுத்துவதும், தூற்றுவதும் இந்தியாவில் வழக்கம். ஜெயலலிதாவை வெறுக்கும் பெரும்பாலோனோருக்கு இப்படிப் பட்ட காரணங்கள் உண்டு. அவர் தனிப்பட்ட வாழ்கை எப்போது அரசியலை பாதிக்கிறதோ அப்போது அதை தூற்றுவோம் என்ற மனப் பக்குவம் மக்களுக்கு இல்லை. இந்த பக்குவமின்மை, அவர் நடவடிக்கைகளை கண்மூடித் தனமாக எதிர்க்க ஒரு காரணமாக இருக்கிறது.
௫. பழைய விஷயங்களை விடுவோம். இப்போது ‘ஹாட் நியூஸ்’ ஸ்டாலின் கைது. போன ஆட்சியில் குடும்ப ஆட்சியை எப்படியாவது ஒழித்தாக வேண்டும் என்று கூச்சல் இட்டவர்கள் எல்லோரும், இப்போது அராஜகம்! அராஜகம்! என்று கூவ ஆரம்பித்துவிட்டனர். உள்ளே போக வேண்டியவர் தானே போயிருக்கிறார்? இதில் ஜெயலலிதாவின் காழ்ப்புணர்ச்சி கலந்திருந்தாலும், அது மக்களுக்கு நன்மை தானே என்று யாரும் நினைப்பதில்லை.
இது எல்லா விஷயங்களிலும் தொடர்கிறது. சினிமா செட்டு போல் கட்டப் பட்ட தலைமை செயலகம் செயின்ட். ஜார்ஜ் கோட்டைக்கு மாறியதை எதிர்த்தது முதல், திமுகவின் திட்டங்களில் உள்ள தவறுகளை திருத்தினால் கூட காழ்ப்புணர்ச்சி என்று அழைப்பது வரை பல்வேறு கோணங்களில் மக்கள் தவறாக முடிவெடுக்கின்றனர்.
திமுக ஒவ்வொரு முறை ஆட்சிக்கு வரும் போதும் தமிழ் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைகிறது. இதை ஓரளவேனும் சமாளிக்க முடிகிறது என்றால் அதற்கு காரணம், அவர்களை விட குறைவாக சுரண்டும் ஒரு கட்சி, அடிக்கடி ஆட்சியை கைப்பற்றுவதால் தான். இதுவே நமக்கு கிடைத்த பெரும் பாக்கியம் என்று கூறத் தோன்றுகிறது. ஜெயலலிதாவை ஆட்சியை விட்டு நீக்கா விட்டால், அவருக்கு பயம் போய் விடும்; அடக்கு முறை அதிகமாகும் என்ற வாதத்தை ஏற்கும் நேரத்தில்,
ஒரு உண்மையான குடிமகனாக என்னுடைய விருப்பம், ‘பிரமை’ காட்டி வெல்லும் திமுக, ‘அடம் பிடிக்கும்’ அதிமுக இரண்டையும் ஆட்சியிலிருந்து தூக்கி எறியும் ஒரு வலிமையான மாற்று சக்தி உருவாக வேண்டும் என்பது தான் என்றாலும், இப்போதைக்கு, ஜெயலலிதாவின் மீது உங்களுக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சியை, திமுக திரும்பவும் எழாமல் தடுக்கவாவது கட்டுப் படுத்திக் கொள்ளுங்கள் என்று மக்களுக்கு ஆலோசிக்கத் தோன்றுகிறது.

Series Navigation361 டிகிரி – காலாண்டு சிற்றிதழ் – ஒரு அறிமுகம்பிணம் தற்கொலை செய்ததுமலைகூட மண்சுவர் ஆகும்
author

கண்ணன் ராமசாமி

Similar Posts

18 Comments

  1. Avatar
    paandiyan says:

    வியாபரா ரீதியாக கழக குடும்பத்தினருடன் அதாவது கருணாநிதி குடும்ப உறவு உள்ளவரை பல பத்திரிகைகள் அப்படிதான் ஆ தி மு க விற்கு எதிராக இங்கு செயல்படும். இன்றைய பல பத்திரிகைகள் சன் டிவி யில் தொடர்கள் தயாரித்து காசு பார்க்கின்றார்கள் . ஒரு பத்திரிகை “நில” உழலில் நேரடியாக தொடர்பு இருகின்றது சென்ற ஆட்சயில். இன்னொரு பத்திரிக்கை தன் மேலாளராய போலீஸ் இல் புகார் கொடுத்து நாடகம் நடத்தியது . இவர்கள் எல்லாம் இன்று எப்படி நேர்மையாக நடக்க முடியும் . வியாபாரம் விடுங்கள் , விசுவாசம் பலமானது அல்லவா!!!

  2. Avatar
    Paramasivam says:

    mudhalil arasiyal kazhppunarchiyai kattupaduthikondu indha arasu nallatchi vazhanga katturaiyaalar putthi sollattum indha katturaiyaalar thamizhnattilthaan irukkiraara samacheer kalvi vizhayatthil kularubadi seithu maanavargalai thavikkavittiruppadhu kazhppunarchi illaamal verenna?sivil case ellaam criminal case aavathan marmam enna?katturaiyaalarai thookatthilirundhu ezhuppividungal

  3. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    “ஆனால், 2001-2006 ஆட்சியில் வழக்குகள் தொடரப் படவில்லை! காரணம் கேட்டதற்கு கருணாநிதி, முதலில் அந்த வழக்குகளுக்கு தீர்ப்பு வரட்டும் என்று கூறித் தப்பித்துக் கொண்டார்”

    2006-2011 ஆட்சியில் என்று திருத்தி வாசிக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.

    இங்கே அதற்கான காரணமாக நான் நினைப்பது 2001-2006 ஜெ ஆட்சி ஓரளவு தேவலை என்று மு.க ஒத்துக்கொள்வதாக அர்த்தமில்லை. 91-96 ஜெ ஆட்சியில் நிகழ்ந்த அலங்கோலங்களுக்காக அவர் மீது வழக்குகள் பாய்ந்ததும், அவர் நீதிமன்ற படிக்கட்டுகளில் மாறி மாறி ஏறி இறங்கியதும் மக்கள் மனதில் என்ன எண்ணத்தை விதைத்தது ; சட்டரீதியான நடவடிக்கை எடுத்து ஜெ.கைது செய்யப்பட்டு விடுதலையுமான பின் 2001 தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு நகையுமின்றி “உங்கள் சகோதரி நீதி கேட்டு வந்திருக்கிறேன்” என்று மக்களிடம் நின்றபோது பொதுமக்களின் மனோநிலை எப்படி இருந்தது என வாசந்தி இதே திண்ணையில் எழுதியிருக்கிறார்.

    ஒரே வார்த்தை. “அனுதாபம்”

    ஒப்பாரிக்கு ஓட்டுப்போட்டே “வெளங்காம” போன தமிழ் மக்களின் அதே சராசரி மனோநிலையால்தான் மு.க தனது முந்தைய ஆட்சியில் ஜெ.மீது வழக்கு போட்டு அவருக்கு அனுதாபம் தேடித்தந்து தமது ஆட்சிக்கே குழிவெட்டிக்கொண்ட தவறை மறுபடியும் செய்ய துணியவில்லை.

    இங்கே தமது தலைமைக்கான தேர்தலில் “அனுதாபம்” போன்ற உணர்ச்சிகளை கலக்காது சற்றேனும் பகுத்தறிவுடன் சிந்தித்து வாக்களிக்கும் நிலையில் மக்களும் இல்லை, அந்தளவுக்கான முதிர்ச்சியை நமது ஜனநாயகம் இன்னும் அடையவுமில்லை.

    ‘மாறும். மாற்றம் தவிர மாறாதது எதுவுமில்லை’ என்று பெருமூச்சோடு நம்மை சமாதானப்படுத்திக்கொள்வது தவிர இப்போது வேறு மார்க்கமில்லை.

  4. Avatar
    Kannan says:

    பரமசிவன் அவர்களே. நீங்கள் இந்த கட்டுரையை சரியாக வாசிக்கவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. அரசியல் நடவடிக்கைகளை சரியாக புரிந்து கொள்ள முடியாத மக்கள், இந்த இருவரின் (ஜெயலலிதா, கருணாநிதி) தவறுகளை மனதில் கொண்டு தண்டனை வழங்க நினைத்திருந்தால், என்றோ நமக்கு ஒரு நல்லாட்சி கிடைத்திருக்கும். ஆனால் மாறி மாறி வாக்களித்து ஜெயலலிதாவின் காழ்ப்புணர்ச்சிக்கும் தீனி போடுவது யார்?? நானா? இல்லை எம் மக்களா? இந்த கட்டுரையா? இல்லை தேர்தலா? முதலில் மாறவேண்டியது மக்களின் மன நிலை. அது மாறிவிட்டால் இந்த காழ்ப்புணர்ச்சி தானாக அடங்கிவிடும். தவறு செய்யும் அரசியல்வாதிகள் திருந்த வேண்டும் என்றே எதிர் பார்க்கும் நீங்கள், தவறு செய்யாத அரசியல் வாதிகளை தேர்ந்தெடுக்கும் ஆலோசனையை மக்களுக்கு குடுக்க ஏன் மறுக்கின்றீர்? காரணம், மக்களை திருத்த முடியாது என்ற ஒரு எண்ணம் தானே? பின் ஜெயலலிதா மட்டும் எப்படி திருந்துவார்? இப்படி மக்களும் திருந்த மாட்டார்கள்; அரசியலும் திருந்தாது என்னும் நிலையில், கருணாநிதியின் கொடுமையை விட ஜெயலலிதாவின் கொடுமை சகித்துக் கொள்ளக் கூடியதே என்று தானே என்னால் கூற முடியும்? மக்களை திருத்த முடிந்தால் சொல்லுங்கள், உங்களுடன் இணைத்து பணியாற்ற நானும் வருகிறேன்.அது முடியாது என்று எல்லோருக்கும் தெரியும். திரும்பவும் கருணாநிதி எதையாவது செய்வார், திரும்பவும் 2G போல 4G ஊழல் நடக்கும்.இதற்கு இப்போதைய வழி இது தான்.

  5. Avatar
    Kannan says:

    நண்பர் பொன் முத்துக் குமார் அவர்களுக்கு. என் கருத்தை மேலும் தெளிவாக பதிவு செய்தமைக்கு நன்றி. உங்களின் இந்த வரிகளுக்கு நான் பதில் கூற நினைக்கிறேன்.
    “இங்கே அதற்கான காரணமாக நான் நினைப்பது 2001-2006 ஜெ ஆட்சி ஓரளவு தேவலை என்று மு.க ஒத்துக்கொள்வதாக அர்த்தமில்லை.”
    2001-06 அரசு ஜெயலலிதாவின் முந்தைய அரசு அளவுக்கு மோசமாக இல்லை என்பதற்கு மு.க வின் வழக்குகள் மட்டும் சாட்சியம் என்று நான் கூறவில்லை.
    “அதை மீறியும், அதிமுகவால் அறுபதுக்கும் மேலான இடத்தை பிடிக்க முடிந்ததென்றால், அந்த ஆட்சின் மீது பெரிதாக எந்த குறையும் மக்களுக்கு இருக்கவில்லை என்றே நிரூபணம் ஆகிறது.”
    இதுவும் ஒரு காரணம். இலவசம் என்று மு.க அறிவித்ததும் தானும் பல இலவசங்களை கொடுப்பதாய் ஒப்புக்கொண்டு மக்களை தன் பக்கம் திருப்பப் பார்க்கிறார் என்ற அப்போதே சில அவதூறுகள் ஜெ மீது பாய்ந்தன. இலவசம், அவதூறு, காழ்ப்புணர்ச்சி இவை எல்லாவற்றையும் மீறி தி.மு.க வின் பலமான கூட்டணி இவரை அழுத்த முடியாமல் போனதற்கு ‘தேவலை’ என்ற வார்த்தை தானே காரணாமாக இருக்க முடியும்? தவிர,
    திரும்பவும் அனுதாபத்தை கொண்டு வந்து மக்களிடம் வாக்கு கேட்டால், அவர்கள் அதை நம்ப மாட்டார்கள் என்று மு.க விற்கு தோன்றாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை.எம்.ஜி.ஆர் உடல் நிலை பாதிக்கப் பட்ட நேரத்தில், என்னை தேர்ந்துடுங்கள்; பின்னால் எம்.ஜி.ஆர் இடமே ஆட்சியை ஒப்படைக்கிறேன் என்றெல்லாம் கூறியவர் மு.க. அப்படிப் பேசியவர், இந்த தேர்தலிலும் அனுதாபத்தை நாடியிருக்க வேண்டுமே! செய்யவில்லையே ஏன்?
    அதே நேரத்தில், மு.க தன்னிடம் வழக்குகள் இருந்தால் அதை இன்று வரை பிரயோகிக்காமல் இருக்க காரணமே கிடையாது.திமுகவுக்கு தேர்தல் நேரத்தில் இருந்த நெருக்கடியில்,எதிரணியை அழுத்த ஏதாவது கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருக்கும் வேளையில், அப்படிப் பட்ட வழக்குகள் இருந்தால் வெல்லக் கட்டியைப் போல அல்லவா இருந்திருக்கும்? அவரிடம் ஏதும் இல்லை என்பதே என் கணிப்பு.

  6. Avatar
    Paramasivam says:

    makkalai media unmaiyaana seithi veliyittaal nichayam thirutthamudiyum ahai seivatharku media thayaaraa illaiye? ore oru uthaaranam 2006il aatchiyai vittu pona ADMK arasu vittupona kadan sumai 57000 kodi idhai therthal samayatthil maraithu 100000kodi kadan sumaiyum DMK arasuthaan sumathiyadhu endrum atthana thogayaium kalaignar kudumbame sappittuvittadhaagavum seyyappatta poiprachaaratthai ella patthirikaigalum potti pottu veliyittadhu

  7. Avatar
    அக்னிப்புத்திரன் says:

    கட்டுரையாளர் ஒருபக்கம் சார்புடையவர் என்பதை மறைக்க முயன்று அதிமுகவையும் செல்வி ஜெயலலிதாவையும் சாடுவதாக சில இடங்களில் நடிக்கிறார். செல்வி ஜெயலலிதா ஆட்சிக்காலங்கள் எவ்வளவு மோசமான ஆட்சிக்காலம் என்பதை அப்போது வந்த பத்திரிக்கைகைள எடுத்துப் படித்தாலே போதுமானது. இந்தியா டூடே பத்திரிக்கை சிறந்த முதல்வர் பட்டியல் தயாரித்தபோது ஆக மோசமான முதல்வர் என ஜெயலலிதா குறிப்பிடப்பட்டு கடைசி நிலைக்கு தள்ளப்பட்டு இருந்ததை கட்டுரையாளர் சாமர்த்தியமாக மறைக்க முயலுகிறார். ஏதோ அவ்வப்போது திமுக ஆட்சிப்பீடம் ஏறுவதால்தான் தமிழ்நாடு ஓரளவு முன்னேற்றம் காண்கின்றது. நன்றாக ஆராய்ந்து பார்த்தால் திமுக காலங்களில்தான் அடிப்படை கட்டுமான சாலைவசதி தொழிற் வளர்ச்சி மக்கள் வாழ்க்கைத்தரம் உயர்வு தெரிய வரும். எப்போது எல்லாம் அதிமுக ஆட்சிக்கு வருகிறதோ (எம்ஜிஆர் காலம் உட்பட) அப்போது எலலாம் தமிழ்நாட்டிற்கு வளர்ச்சியில் பின்னடைவுதான்.

  8. Avatar
    Aavesan says:

    agniputhran avargale mikka nandri 2006-11 atchiyaipola oru nallatchiyai kalaignare ninaitthaalum meendum kodukkamudiyaadhu enbathai manasatchi ulla endha thamizhanum marakkamudiyaadhu.etthanai etthanai puridhunarvu oppanthangal kaiyezhutthaagi etthanai etthanai thozhirchaalaigal thuvakkappattana atthanai thozhirchaalai vandhadhaalthaan minpatraakurai erpattathu min thittangalum kadantha atchiyilthaan thuvakkappattana min urpathiyil 2012-13 il nichayam thamizhnaadu thanniraivu perum manasaatchiyatra mediakkallalthaan DMK thotradhu kadantha atchiyil chennai petra asura valarchithaan Hillaryai ingu varavazhaitthadhu Hillaryin Anna Noolaga varugaiyum avar noolagathai sarvadesa tharatthil iruppadhaaga sonna paraatu mozhigalum thittamittu iruttadippu seyyapattadhu Arasu sariyaaga seyalpattalthaan matru anikku kazhppunarchi varum ippodhu kazhppunarchi vara vaippillai Ford motorin pudhiya thozhirchaalai ingu ulla minpatraakurayaalthaan gujarathukku sendruvittadhu arasu erkaneve thuvakkappatta min thittangalai viraivil mudikkavendum

  9. Avatar
    Kannan says:

    அக்னிபுத்திரன்.. திமுகவை ஆதரிக்கும் எல்லோரும், நடுநிலையாளர்களை நடிகர்கள் என்று கூறுவது வழக்கம் தான். இது பெரிதாக என்னை பாதித்துவிடாது. உங்கள் விமர்சனத்திற்கு நன்றி.

  10. Avatar
    Kannan says:

    பரமசிவன்.. நீங்கள் கூறுவது உண்மையே. ஜெயலலிதா ஒன்றும் ‘கிளீன் ஸ்லேட்’ கிடையாது தான். ஆனால்,சுமார் 25000 கோடி கடன் சுமையை ஐந்து ஆண்டுகளில் ஜெயலலிதா சுமத்தினார்; அதே ஐந்து ஆண்டுகாலத்தில் 50000 கோடி கடன் சுமையை இரட்டிப்பாக்கினார் கலைஞர். இப்போதும், தன் இலவசத்தை ஜெயிக்க நினைக்கும் எந்த கட்சியினரும் தவிற்க முடியாத நிலைக்கு தமிழ் நாட்டை தள்ளிவிட்டார். குஜராத் மக்களை போல் நம் மக்கள் தூய்மையானவர்கள் இல்லை என்று சரியாக கணித்துவிட்டார். அடுத்த ஐந்து வருடத்திலும் இந்த இலவச பேயால் ஜெயலலிதாவும் இதையே தான் செய்யப் போகிறார். அவர், உண்மையாகவே மக்களின் நலன் பற்றிக் கருதினால் மோடியைப் போல் முடிவெடுத்திருக்க வேண்டும் தான். ஆனால், ஜெயலலிதாவிற்கு ஆட்சிப் பொறுப்பை ஏற்கவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இவர்கள் இருவருக்கும் பெரிதாக எந்த வித்யாசமும் இல்லை. அவர்களை பிரிக்கும் ஒரே விஷயம், கலைஞருக்கு சுரண்ட குடும்பம் என்ற பெரிய வட்டம் உள்ளது. ஜெயலலிதாவுக்கு அவரும், சசிகலாவும் மட்டும் தான். இந்த ரீதியில் தான் ஜெயலலிதா அரசு, கருணாநிதி அரசை விட குறைவாக சுரண்டுகிறது என்று கூறுகிறேன்.

  11. Avatar
    paandiyan says:

    இந்தியா டூடே பத்திரிக்கை கருத்து கணிப்பு “வாங்கி” இருக்கலாம் ஆனால் அதை அன்று பண்ணவில்லை . நீர ரடிய க்கு பிறகு பத்திரிக்கை வியபாரம் வெட்ட வெளிச்சம் ஆன பின்பும் அந்த பத்திரிகை அன்று சொன்னத என்று சொல்ல்வது எல்லாம் நம்மை நாமா ஏமாறி கொள்ளும் செயல் . ஹிந்து எப்படி PAID நியூஸ் பண்ணியது ராஜா விசயத்தில் , அம்பானி interview எப்படி டைரக்ட் பண்ணப்பட்டது என்பது எல்லாம் ஆதாரம் உடன் இணய தளத்தில் கொட்டி கிடக்கும் இந்த காலத்தில் யாரும் பத்திரிகை அதரம் ஒரு பொருட்டாக மதிக்க மாட்டார்கள் . அப்படியா இந்திய டுடே சொல்லி இருந்தல்லும் அந்த பத்த்ரிகை லட்சணம் ஏன்னா???

  12. Avatar
    smitha says:

    It is a known fact that not mu.ka, but annadurai before hin who institutionalised corruption. Mu.Ka keeps the press in good humour & so he is always portrayed in good light.

    Only this time, he is at the receiving end.

    I am surprised by agniputhran’s comment that tamilnadu prospers only when DMK comes to power. Giving license to a few industries does not mean that a state has developed.

    Mu.Ka has spoilt the poeple by giving freebies. He increased the salary of EB employess by 30% even while admitting that EB is running on loss. Whose money is it?

    He hiked the salary of govt employess who do not work at all.

    He spent 240 crores to conduct semmozhi maanadu, is it of any use? he could have utilised that money to improve the power situation in the state.

    He did nothing when lakhs of tamils were dying in sri lanka. He simply wrote letters to the PM. But for the sake of getting ministerial posts for his family members, he frequent went to delhi.

    Mu.Ka asked ” Is Rama an engineer? Which engg college did he study in?” when sethusamudram project was stopped.

    Dasaratha died of “puthra sogam” after Lord Rama went to the forest.

    Mu.ka is now in a similar situation. His favourite daughter is in jail & he can do nothing about it. He can only shed tears.

    Murpagal seyyum pirpaghal vilayaum.

  13. Avatar
    Paramasivam says:

    theruvodu pogiravan maadhiri katturaiyaalar pesakkoodathu surandal endru koorrukiraare kurippittu sollamudiyumaa kalaignar kudumbatthinmel theerpu varumvarai ellaarum nirabaraathithaan jayavai pola

  14. Avatar
    Paramasivam says:

    Smitha says that Anna institutionalised corruption.Let her quote specific instances.During last regime, many industries were started by multinationals around Chennai.Let Smitha go out on Tambaram-Wlajabad Road,GST Road and Bangalore Highway and see for herself.Only because of many power projects started during last regime,TN will be power surplus by 2012-13.What is Smitha”s comment about freebies announced in yesterday”s budget?In a federal set-up whatever could be done,Kalaignar has don in SriLankan issue.Perhaps Smitha would have been happy if only he resigned.By the way things are going now,even his resignation would not have solved the issue.Has Smitha read Manmohan”s reply to Vaiko.A well conceived Sethusamudram project was abandoned on the basis of puranas..

  15. Avatar
    paandiyan says:

    இன்றைய அவலகளுக்கு அண்ணாவை குறை சொல்லாமல் யாரை குறை சொல்வது . என்னவோ MNC க்கு சொந்தகார்க்ல் இவர்கள் தான் போல பேசுகின்றார்கள் . பெங்களூர் இல் உள்ள MNC க்கு யாரு சொந்தம் மற்றும் ஹைதராபர்ட் ,புன க்கு எல்லாம் யாரு சொந்தம். உருபடியிலாத வாதம் வைத்து வார்த்தை ஜாலம் போட்டு ஊரை எமருவத்தில் கழகம் சாதனை மகத்தானது . Sethusamudram project க்கு மாற்று தீர்வு இருகின்றது அதை நிறைவேற்றுவதில் என்ன பிரச்னை . ? ராமர் த்மிரு பேச்சு க்கு தான் இன்றைய தமிழன் நாக்கை புடுங்கி கொள்ளும் மாதரி கேட்கின்றான் – திருட்டு கழகம் ஆ தீகார் கழகமா என்று எல்லாம் . ஒரு organized ஆ குடும்ப கொள்ளைக்கு உலகிற்க்க கருணாநிதி ஒரு பாடம் . இந்த உழலை சகித்து கொண்ட காங்கிரஸ் முதல் துரோகி இது அன்றைய இந்திரா காந்தி க்கும் பொருந்தும்

  16. Avatar
    knvijayan says:

    அண்ணாதுரை என்ற நாலாந்தர அரசியல்வாதிதான் இன்றைய தமிழ்நாட்டின் அவலத்திற்கு காரணம்.ராஜாஜி,ஓமந்தூரார்,காமராஜ் ,கக்கன் போன்ற தியாக செம்மல்கள் இருந்த பூமியில் இந்த சினிமாகார பயல்கள் வந்து நாட்டை குட்டிசுவராக்கிவிட்டனர்.அண்ணாதுரை,கருணாநிதி,mgr ,ஜெயலலிதா போன்ற அரிதார அரசியல்வாதிகளுடன் ராஜாஜி,இந்திரா போன்றவர்கள் தங்கள் ஈகோ பிரச்சனையால் கூட்டு சேர்ந்ததால் தமிழனுக்கு வந்தது மோசம்.

  17. Avatar
    Paramasivam says:

    The MNCs quoted by me are manufacturing industries and not IT companies.When there are arguments, why Mr.Pandiyan is loosing his cool.For all ills of Congress party of today,will he blame Gandhiji? Let law take its own course.I am against the media trial only.No alternatives are discussed for Sethusamudram project for the past 4 years.

  18. Avatar
    Paramasivam says:

    If Mr.Vijayan proves that Anna is fourth rated politician,then we can place our arguments.Similarly,if Mr.Pandiyan gives a list of credible magazines,newspapers and TV channels,we can counter the arguments.Only then,it will be a healthy debate.If they are arguing on the basis of prejudices and bias,no one can go further.Indira and Rajaji also had some shortcomings.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *