தமனகன் சொல்லிற்று: காலத்தில் பெய்தமழையால் ஒரு விதையிலிருந்து மற்ற விதைகள் முளைப்பதுபோல் வார்த்தைக்குக் கிடைக்கும் பதிலிலிருந்து மற்ற பேச்சுக்களும் முளைக்கின்றன. நேர்மையுள்ள அறிவாளி அபாயத்தை யறிந்து அபாயத்தையும், உபாயத்தை அறிந்து காரியசித்திக்கு வழியையும் வெளிப்படையாகக் காட்டுகிறான். சபையில் நல்லோரால் புகழப்படுகிற குணவான்…