Posted in

வெறுமை

This entry is part 27 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

உச்சி வெயிலில்
வெற்றுடம்புடன்
மருள் பார்வையில்
மயங்கி புடவையின்
நுனி பற்றி இழுத்தும்
கவனம் கார் கண்ணாடியிலும்
சிக்னல் விளக்கிலும் …

கைசேர்த்த காசுகள்
ஒரு பாலாடை பாலுடன்
சிறிது மதுவும் ஊற்றி
மயக்கத்தை உறுதிபடுத்தி
வாகன ஊர்வலத்தில்
இடைசெருகி

மாலை நேர
கணக்கு முடித்து
கமிஷன் வாங்கி
சேயை அதன் தாயிடம்
சேர்க்கையில் கண்ணில்
நிழலாடியது தன்னை
விற்றுப்போன
தாயின் முகம் …..

– கவிப்ரியா பானு

Series Navigationஜெயந்தன் & ரங்கம்மாள் விருது பெற்றநாவல் “வெட்டுப்புலி” குறித்த கலந்துரையாடல்.எனது இலக்கிய அனுபவங்கள் – 11 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு – 3 (ஆர்வி)

One thought on “வெறுமை

  1. நடக்கிறதை அப்படியே சொல்லுவதை படித்ததும்

    தன்னை
    விற்றுப்போன
    தாயின் முகத்தின் நிழலோடு ..

    தலைப்புக்கேற்ற ”வெறுமை” படர்கிறது நம் மனதிலும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *