கலித்தொகையின் தலைவி தோழி உரையாடலில் திருமணம்

This entry is part 37 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

காதல் வாழ்விலும் இல்லற வாழ்விலும் தலைவன் தலைவிக்குச் சமபங்கு உண்டு. உடலும் உயிருமாகவும் இரு கண்களாகவும் திகழ்பவர்கள்; இவர்கள். ஒருவரைவிட்டு ஒருவரை உயர்த்திக்காண இயலாது. தராசின் இரு தட்டுகள் போன்றவர்கள். இவர்கள் இணைந்திருக்கும்போதுதான் இல்லறம் சிறக்கும். தலைவன் தலைவியின் களவிலும் கற்பிலும் உறுதுணையாகத் திகழ்பவள் தோழியாவாள். வழிகாட்டியாகஇ ஆறுதல் கூறுபவளாக கண்டிப்பவளாகத் தோழி இருக்கிறாள்.

“ஒருத்தி ஒருவனுடன் வாழ்தலாவதுஇ தனக்குரிய மற்றொரு பாதியை தன்னுடன் பொருத்துவதாகும். அவ்வொருபாதி எத்தகையதாயிருத்தல் வேண்டும். அது பொருந்தியதாய் இருத்தல் வேண்டும். பொருந்திய பாதியைத் தேடிப் பிடித்தல் எளிதன்று. அரிதின் முயன்றேனும் பெண் மகள் தனக்குரிய ஒருவனைப் பெற முயல்வது அவளது கடமை. உடல்-மனம்-அறிவு என்னும் மூன்றானும் பொருத்தம் நல்கும் இருபாதிஇ அன்பால் பிணைக்கப்பட்டுஇ இருமை கெட ஒருமை இன்பங்கூட்டி வாழ்வதற்குக் கால்கொள்வது திருமணம்.”1

உறவினர்கள் தலைவனுக்குத் தலைவியைத் தருவதற்கு மறுத்தனர். தோழிஇ செவிலித்தாயிடம் சென்றுஇ தலைவனுக்குத் தலைவியை மணம் முடிக்குமாறு வேண்டுகிறாள். செவிலித்தாய் இச்செய்தியை நற்றாயிடம் கூறுகிறாள். நற்றாய் தலைவியின் தந்தைக்கும்இ தமருக்கும் சொல்லி வற்புறுத்துகிறாள். அவர்கள் ஒருவாறு இசைவு தந்தனர். திருமணம் விரைவில் முடிய கன்னிப்பெண்கள் தெய்வத்தை வேண்டுகின்றனர். குரவை ஆடிப் போற்றுகின்றனர். அப்போது திருமணத்தில் நிகழப்போகும் காட்சிகளைத் தலைவியும்இ தோழியும் பேசி மகிழ்கின்றனர். தலைவி கூறுகிறாள்இ

நன்னாள் தலைவரும் எல்லைஇ நமர்மலைத்
தம்நாண்தாம் தாங்குவார்இ என்நோற்றனர் கொல்?
புனவேங்கைத் தாது உறைக்கும் பொன்னறை முன்றில்
நனவிற் புணர்ச்சி நடக்குமாம் அன்றோ?2

‘திருமணம் நடந்தவுடன் தலைவனும் நானும் கனவிலே உறவாடும் எண்ணத்தை விட்டுவிடுவோம்’ என்கிறாள். தோழி கூறுகிறாள்இ ‘வானத்தை முட்டும் மலை நாட்டானாகிய உன் தலைவனும் நீயும் மணநாளன்று எவ்விதம் நடந்துகொள்வீர்கள்? முன் பின் அறியாதவர் போல் நடந்து கொள்வீர்களா? அல்லது பழகியவர் போல் நடப்பீர்களா? உங்களின் காதலை அறிந்த நான் அதை மறைக்க முடியுமோ? மேலும்இ உங்கள் மணக்கோலத்தை காணாத கண்களால் என்ன பயன்.?’ இதைஇ
விண்தொய் கல்நாடனும் நீயும் வதுவையுள்
பண்டு அறியாதீர்போல் படர்கிற்பீர் மன்கொலோ?
பண்டு அறியாதீர்போல் படர்ந்தீர் பழங்கேண்மை
கண்டறியா தேன்போல் கரக்கிற்பெண் மன்கொலோ?
மைதவழ் வெற்பன் மணஅணி காணாமல்இ
கையால் புதைபெறூஉம் கண்களும் கண்களே!17

என்னும் வரிகளால் அறியலாம்.

சுற்றத்தார் வேறொருவனுக்குத் தலைவியை மணம் முடிக்க ஏற்பாடு செய்கின்றனர். அது கண்டு பொறுக்காத தலைவிஇ தன் காதலனிடம் தோழியைத் தூது அனுப்புகிறாள். இப்போது கைவிட்டால் தலைவன் தன்னை அடைய முடியாது எனத் தலைவி பொருமுகிறாள். அப்போது தலைவிக்கும்இ தோழிக்கும் இடையே உரையாடல் நிகழ்கிறது. தலைவிஇ ‘என்னைக் காதலிக்கத் தெரிகிறது. ஆனால்இ என் பொற்றோரிடம் வந்து பெண் கேட்க மட்டும் தைரியமில்லாது கோழையாக இருக்கிறாயே என்று கேட்டுவாடி’ என்று தோழியிடம் உரைக்கின்றாள். இதைஇ
வாரி நெறிப்பட்டு இரும்புறம் தாழ்ந்த
ஒரிப் புதல்வன் அழுதனன் என்பவோ
புதுவமலர் தைஇ எமர் என்பெயரால்
வதுவை அயர்வாரைக் கண்டும் மதியறியா
ஏழையை என்று அகல் நக்கு வந்தீயாய் நீ3

என்ற வரிகள் உணர்த்துகின்றன. அதற்குத் தோழிஇ

அவனுழைச் சென்று
சென்று யான் அறிவேன் ; கூறுகஇ மற்றுஇனி.4

எனக் கேட்கிறாள். அதற்குத் தலைவிஃ

‘சொல் அறியாய் பேதை-மடமை!-மற்றும் எல்லா!
…………………………………………………………………….
……………………………………………………

தெருமரல் கைவிட் டிருக்கோ – அலர்ந்த
விரிநீர் உடுக்கை உலகம் பெறினும்
அருநெறி ஆயர் மகளிர்க்கு
இருமணம் கூடுதல் இல்இயல் பன்றே?5

என்கிறாள். இவ்வுரையாடலில் தலைவியின் மன உறுதி வெளிக்காட்டப்பட்டுள்ளது. தம் காதலனோடு மனத்தால் மணம் செய்து கொண்டதாகவும் பெற்றோர் ஏற்பாடு செய்தது இரண்டாவது திருமணம் என்று தலைவி கூறுவதிலிருந்து தலைவியின் ஆழமான அன்பு வெளிக்காட்டப்பட்டுள்ளது.

சான்றெண் குறிப்புகள்

1. திரு. வி. கலியாணசுந்தரனார் பெண்ணின் பெருமை பக். 214.
2. குறிஞ்சிக்கலி பா. 39 : 31-36.
3. முல்லைக்கலி பா. 114 : 1-5.
4. மேலது பா. 114 : 6-7.
5. மேலது பா. 114 : 8-21.

இரா. முத்துப்பாண்டி
முனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழவேள்; உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரி
தஞ்சாவூர்.

Series Navigationமகிழ்ச்சிக்கான இரகசியம் இரகசியம் : ரோண்டா பைரன் நூல் தமிழ் மொழிபெயர்ப்புபுத்தரின் பிறந்தநாளைக் கொண்டாடுவோம்
author

முனைவர் இரா. முத்துப்பாண்டி

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *