காக்காப்பொண்ணு

This entry is part 11 of 41 in the series 13 நவம்பர் 2011

 

காளியம்மாவின் இந்த முடிவு யாரும் எதிர்பாராததுதான்,முத்துவும் கூட.

நேற்று மாலைக் கருக்கலிலேயே ஊரை விட்டு போய் விட்டாளாம்.வயதான அம்மா,அப்பா, தம்பி, தங்கையுடன் மாமா ஊருக்கு.

அக்காவைக்கட்டிக்கொடுத்தஇடம்.மாமாவுக்குபனியன்கம்பெனியியில் வேலை.

அங்கு போய் அப்படியே பிழைப்பை ஓட்டிக் கொள்ளலாம் என திட்டம்.ஆனால் முத்துவிடம்கூடஒருவார்த்தைசொல்லவில்லை.

இரண்டு பேருக்கும் ஒரே இடத்தில்தான் வேலை.முத்து நிமிந்தாள்.காளியம்மா சித்தாள்.” அக்காவவிட தம்பிக்கு சம்பளம் ஜாஸ்தி” சாப்பாடு நேரத்தில் காளியம்மா ஆதங்கமாய் கேலி செய்தாள்.

முத்துவுக்கும் காளியம்மாவிற்கும் இரண்டு வருடங்கள் வித்தியாசமிருக்கும்.ஓங்கு தாங்காகஇருப்பாள்.கருப்பிலும்கலப்பில்லை.புதுநிறத்திலும் சேர்த்தியில்லை.

ஒழுங்கற்றது மாதிரி ஒழுங்காய் இருக்கும் காளியம்மாவை முத்துவுக்கு ரொம்பத்தான் பிடிக்கும்.

அது எப்படியோ தெரியவில்லை. என்னமும் ராசிதானோ என்னவோ? முத்துவும்,

காளியம்மாவும் வேலை பார்க்கும் இடங்கள் பெரும்பாலும் ஒன்றாக அமைந்து போகும்.

களைஎடுக்கையில்,கதிரருக்கையில்,பருப்புநடுகையில்,களத்துமேட்டு வேலைகளில்

………..இப்படி இரண்டு பேரின் தலையும் ஒன்றாகத் தெரியும்.”அப்பிடி என்னதான் ராசியோ,அக்கா,தம்பிக்குள்ள,பேசி வச்ச மாதிரி ரெண்டு பேரும் ஒண்ணா நிக்குறாங்களே/” “ஆத்தாடி ரெண்டு பேரும் அக்கா தம்பிதானா”முத்துவின் சைடில் ஆண்களும்,காளியம்மாவின் சைடில் பெண்களும் கலகலப்பார்கள்.

இத்தனைக்கும் இருவரும் ஒரே ஊர்.ஒண்ணுக்குள் ஒண்ணுஎன்கிற மாதிரியெல்லாம் இல்லை.பிழைப்புதேடிசொந்த்ஊர்களை விட்டு இங்கு வந்து வேர் விட்டவர்கள்.பரஸ்பரம் இருவரின் பழக்க வழக்கங்கள்,பேச்சு வார்த்தைகள்,நடை முறைகள் இருவருக்கும் புரிபட்டு,பிடித்துப்போக………… காளியம்மாவின் மீது முத்துவிற்கு ஈர்ப்பு ஏற்படச் செய்திருக்கிறது.

இன்று காலையில் கூட இரண்டு பேரும் ஒன்றாகத்தான் வந்தார்கள்.பஸ் வரவில்லை என முத்துவுடன் சைக்கிளில்தான் வந்தாள்.அப்போது கூட ஒன்றும் மூச்சுவிட்டவில்லை.அஞ்சுகிலோமீட்டர்தூரம்.எவ்வளவுபேசியிருக்கலாம்,எவ்வளவு சொல்லியிருக்கலாம்.எவ்வளவுகேட்டிருக்கலாம்.

தார்ரோட்டையும்காட்டுகம்பந்தட்டைகளையும்,சீமக்கருவேலையையும் வெறிச்சு,

வெறிச்சு பாத்ததுதான் மிச்சம்.

அங்கன விட்டாக்கூட தினமும் கூடுற காப்பிக் கடமுக்கு, வேலபாக்குற யெடம்,

சாப்பாட்டு நேரம் இப்பிடி எத்தன யெடம்?முச்சு விடவில்லையே/

இந்த ஒரு மாதமாக அவளது பேச்சும் செயலும்,அவ்வளவு ஒட்டுதலாக இல்லை.என்னஎன்றால் என்ன?மண்ணுக்கும் அவளுக்கும் என்னதான் உறவோ,நாளில் பேர்பாதி நேரம் தரையையே வெறித்துக்கொண்டு………/

கேட்டால் விட்டேத்தியாய் சிரித்தாள்.முன்பெல்லாம் அவர்களது கலகலப்பில் அடுத்தவர்களது மனது பொறாமையில் இடறியிருக்கிறது.

முத்து வீட்டிலும் சரி.காளியம்மாவின் வீட்டிலும் சரி விலகிப்பழகச்சொல்லி எச்சரிக்கையும்,திட்டுகளும்வராமல்இல்லை.ஊரும்,சுற்றமும்பேசாத பேச்சுக்களும்,

சொல்லாதசொல்லும் இல்லை.

முத்துவும்,காளியம்மாவும் அதை கணக்கில் எடுக்காமலும் இல்லை.இருந்தாலும் பக்கத்து,பக்கத்து மரங்களின் கைநீட்டலை,ஒன்றின் மீது,ஒன்றான பூச்செறிதலை எப்படிதடுக்க/எந்தசுவர்எழுப்பிமறைக்க?புறஞ்ச்சொல்லலும்,சுவர்எழுப்பலும்……….ம்ஹீம்/

ஆறு மாதத்திற்கு முன்பு ஊரில் வேலைகள் மத்துவமானபோது டவுனில் போய் விசாரித்து சித்தாள் வேலைக்கு தாக்கல் சொன்னவன் முத்துதான்.

ஊரில் காடு கரைகள் மாதிரியே இங்கும் ஒரே கட்டித்தில் வேலைகள் அமைந்தது.அவர்கள் ஒரே இடத்தில் சேர்ந்து வேலை செய்யும் போது இருந்த வேகம்,தனித்தனியாக வேலை செய்யும்போது இல்லை.

அதை அறிந்தது போலவே மேஸ்திரியும் அவர்களை ஒரே இடத்தில் வேலைக்கு அனுப்பினார்.வேலைக்கு வேலையும்,கலகலப்புக்கு கலகலப்புமாய் அந்த இடமே அமளி துமளிப்படும்இருவராலும்/

அப்படித்தான் ஒரு நாள் ஊரில் கதிரடித்துக் கொண்டிருக்கும்போது களத்தையே புரட்டிப் போட்டுக் கொண்டிருந்திருக்கிறார்கள் காளியம்மாவும், முத்துவும்/அந்த உம்மனாக்காரமூஞ்சிமுதலாளி“என்னஇதுவேலைசெய்யுற யெடமா,

வெளையாட்டுத்தளமாஎன சத்தம் போட்டிருக்கிறார் காளியம்மாவிடம்.

“உம்முனு வேலை செஞ்சா விடுற அனல் மூச்சுல நெல்லு கருகிப்போகும்ல மொதலாளி”என்றிருக்கிறாள் காளியம்மா.அவளது அந்த வெள்ளந்தித்தனத்தில் முதலாளியே சிரித்து விட்டாராம்.

ஊரெல்லாம் வேலைதளங்களில் இதை ஒரு அதிசயமாகவே பேசிகொண்டார்கள். அந்தக் காளியம்மாள்தான் முத்துவிடம் ஒருமாதமாய் சரியாக பேசவில்லை.

முத்துவின் கெஜ கர்ணமெல்லாம் காளியம்மாவின் முன் தோற்றுப்போனது.ஆழ்ந்த ஒரு பார்வை,விட்டேத்தியாய் ஒரு சிரிப்பு.அவ்வளவுதான் மிஞ்சிப்போனால் என்ன என்றால் என்ன?

நேற்றும் வேலைத்தளத்தில் அந்த ரீதியாய் பார்த்தவள்தான்.இன்று ஊரில் இல்லை. “எனக்குன்னு சொத்து சேத்து வச்சிருந்த மாதிரி செல பழக்கவழக்கங்க வச்சிருந்தேன்.அதெல்லாம் மருகி,மருகி துப்பரவா காணாம போச்சு இப்ப.எப்பப்பாரு சாந்து சட்டி,செங்காமட்டி, கொத்தன், மேஸ்த்திரி, அவனுக பேசுற கவுச்சு………இதுதான் மனசவட்டம் போடுது.அதெல்லாம் கூட பரவாயில்லை,அந்த முத்துத்தம்பியவே வேறாமாதிரி நெனைச்சுப்பாக்குற அளவுக்கு பொச கெட்டுப்போச்சு மனசு.”இனி நா இருந்தாதேவலையா?செத்தா தேவலையா,,,,,,,,,,,?

பக்கத்துவீட்டு வெள்ளையம்மாளிடம் நிறைய சொல்லி அழுதிருக்கிறாள்.இரண்டு நாட்களுக்கு முன்.இப்பொழுது முத்து யோசிக்கிறான்.

காளியம்மா போன ஊருக்கே நாமும் போய்விட்டால் என்ன?
———–

Series Navigationஅகாலம் கேட்கிற கேள்விகவிதைகள் : பயணக்குறிப்புகள்
author

விமலன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *