குரான் – ஞானப் புகழ்ச்சி மொழிபெயர்ப்பின் அரசியல்

This entry is part 43 of 48 in the series 11 டிசம்பர் 2011

ஹெச்.ஜி.ரசூல்

 

ஞானப்புகழ்ச்சி இறைவேதத்திற்கு ஒப்பாகுமா என்பது குறித்த கட்டுரையின் பின்னூட்டங்கள் தொடர்பாகவும் அவற்றில் முன்வைக்கப்பட்ட நண்பர்கள் குளச்சல் மு.யூசுப்,சுவனப்பிரியன்,ஓ.நூருல் அமீன்,காவ்யா,தங்கமணியின் இப்பொருள்தொடர்பான விவாதங்களுக்கு மட்டும் எனது சில நிலைபாடுகளை முன்வைக்கவிரும்புகிறேன்.

 

1)இணையத்தில் நிகழ்த்தப்பட்ட விவாத தலைப்பின் முதன்மை பீர்முகமது அப்பாவின் ஞானப்புகழ்ச்சி பாடல்கள் இறைவேதத்திற்கு ஒப்பாகுமா என்பதாக இருந்தது. எனவேதான் பீர்முகமது அப்பாவின் ஞானப்புகழ்ச்சி பாடல்கள் இஸ்லாத்தைப் பேசுகிறா,இறைவேதத்தின் சாரம் அதில் உள்ளதா இல்லையா என்பது பற்றி விவாதம் தொடர நேரிட்டது.

 

2) இறைவேதத்தின் சாரமான சூரத்துல் பாத்திஹாவை முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலில் தமிழில் ஞானப்புகழ்ச்சியின் துஆஇரப்பாக சொல்லித்தந்தது சூபிஞானி பீர்முகமது அப்பா. அவூது பில்லாஹி எனத்துவங்கி பிறகுமத்திக்க யா அறுஹமற் றாகிமீன் எனமுடியும் 225 பாடல்களின் 2206 வரிகள்- இது உள்ளடக்க ஒத்திசைவு இணைகாணல் முறை மொழிபெயர்ப்பாகும். பின்னர் ஞானியார்சாகிபு,வேதபுராணம் எழுதிய நூஹுலெப்பை என இந்த  மரபு தொடர்கிறது.

 

3) முப்பதாண்டுகளுக்குமேல் உழைத்து குரான் முப்பது ஜுசுவையும் தமிழில் மொழியாக்கம் செய்தவர் ஆ.கா.அப்துல்ஹமீது பாகவி. இது 1948ல்தான் சாத்தியமாகியது.

இங்கு இந்த மொழிமாற்றம் குறித்த ஒரு ஒப்பீட்டை கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.

அரபுமூலம்- குரானின் சூரத்துல் இக்லாஸ்

குல்ஹுவல்லாஹ் அஹது அல்லஹுஸ் ஸமது

லம் யலிது வலம் யூலது

வலம் ய்க்குன்லஹ் குபுவன் அஹது

உரைநடை மொழியாக்கம்

இதற்கு  சொல்லுக்கு சொல் வரிக்கு வரி..

(இது உருவ ஒத்திசைவு மொழியாக்க முறை..)

அல்லாஹ் ஒருவன் எனக் கூறுவீராக.

அல்லாஹ் தேவையற்றவன்

யாரையும் அவன் பெறவுமில்லை

யாருக்கும் அவன் பிறக்கவும் இல்லை.

அவனுக்கு நிகராக யாருமில்லை.

 

பீர்முகமது அப்பாவின் கவிதை மொழிபெயர்ப்பு..

 தந்தையிலி தாரமிலி தானவனும் நீயே

தன்மை கொடெவர்க்குமொரு தாபரமும் நீயே..

மைந்தரிலி அன்னையிலி மன்னவனும் நீயே

மண்ணிலடியார்க் கிரணம் வழங்குவது நீயே..

….

தன்னையன்றி தனக்கு நிகர் தானிலியும் நீயே

தண்மை கொடெனக்கு உனவு தருபவனும் நீயே….

…..

அல்லா ஒருவனென்றும் அஹமதவன் தூதரென்றும்

சொல்லால் உவந்து தொழுதிரந்தால்

 

அரபு மூல குரானின் வசனப் பிரதியும் சூரத்துல் இக்லாஸ்தானே..உரைநடைதமிழில் சொல்லுக்கு சொல் பாகவியால் மொழிபெயர்க்கப்பட்ட அப்பிரதியும்  இறைவேதத்தின் சூரத்துல் இக்லாஸ்தானே.. முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு கவிதைத் தமிழில் உணர்ச்சி மேலிட மொழியாக்கம் செய்யப்பட்ட பீர்முகமது அப்பாவின் கவிதைப்பிரதியும் சூரத்துல் இக்லாஸ்தானே..

மொழிவடிவ வேறுபாடுஇருப்பினும்உள்ளடக்கத்தால்,கருப்பொருளால் இவை ஒன்றாகத்தானே இருக்கின்றன.தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதால் இவை குரானின் சூரத்துல் இக்லாஸ் இல்லை என்று ஆகிவிடுமா..நண்பர்கள்தான் விளக்கவேண்டும்

3)குரானில் சில குறிப்பிட்ட வசனங்களை நாம் வாசித்துப் பார்த்தால் புரிந்து கொள்ளலாம். சந்தேகமே ஏற்படாது. பொருள் விளங்கிக் கொள்ளலாம். ஆனால் அந்த வசனத்தை மட்டும் கொண்டு கருத்துக்களை விளக்க முடியுமா என்ன..

மாதிரிக்கு திருமறைக் குரானின் ஒரு வசனத்தை காண்போம்.

பேரீச்சை,திராட்சை பழங்களிலிருந்து மதுவையும் சத்துள்ள ஆகாரங்களையும் நீங்கள் செய்கின்றீர்கள். நிச்சயமாக இதிலும் அறிவுடைய மக்களுக்கு ஒரு அத்தாட்சி இருக்கிறது(அத்தியாயம் அந் நஹல்16:67)

இந்த வசனத்திலிருந்து மட்டும் நீங்கள் என்ன விளங்கிக் கொள்ள முடியும்..

மது குறித்த குரான் சிந்தனையை அறிய வேண்டுமெனில் குரானை முழுவதும் வாசித்து மது தொடர்பான குரானின் பிற வசனங்களையும் தொகுத்து பகுத்து பொருள் அறிய வேண்டும் என்பதுதானே சரியான முறை.

 

இதே முறையியலைத்தான் (Methodology) பீர்முகமது அப்பாவின் ஞானப் புகழ்ச்சிவாசிப்பிற்கும் கூறியிருந்தேன். நீயே உனக்கு ஸுஜுது செய்தாய்.. நீயே புவிக்குள் றசூலாக வந்தவன்  இரண்டு வரிகளும் மெய்ப் பொருளுண்மையை விளக்கும் வரிகள். இதை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டுமானால் அல்லாஹ் குறித்து பீர்முகமது அப்பா எழுதியிருக்கும் 1 முதல் 117 பாடல்களையும் ஏன் பிற பாடல்களையும் வாசித்து பொருளுணர வேண்டி இருக்கிறது..

.4)ஒரு திருமறை வசனம் இவ்வாறு உள்ளது

அவர்கள் மஆரிபில் கட்டியிருந்த மகத்தான அரிம் அனையை உடைக்கக் கூடிய பெரும் வெள்ளத்தை அவர்கள் மீது அனுப்பிவைத்தோம். (அத்தியாயம் 34:16)

குரானிய ஆய்வுமுறையில் ஒரு வசனத்திற்கு இன்னொரு வசனம் மூலமும் அல்லது ஹதீஸ்களின் மூலமும் அல்லது வரலாற்றியல் சமூக மானுடவியல் சார்ந்துவிளக்கம் கூறும் முறையியலும் இருந்துள்ளது.இதுவே தப்சீர் விளக்கங்களாகவும் அமையப் பெற்றுள்ளன எனவே

இவ் வசனத்தை  தப்சீர்விளக்கங்களோ , சமூக வரலாற்றியல்,மானுடவியல் விளக்கங்களின் துணையோ இன்றி குரான் –ஹதீஸின் துணை கொண்டு மட்டும் எவ்வாறு விளக்கித் தருவீர்கள் ஏனெனில் பீர்முகமது அப்பாவின் பாடல்பிரதிகளின் ஆழத்தை கண்டுணர  குரான் ஹதீஸ் மற்றும் பிற மொழியியல் வரலாற்றியல்  சமயவியல் உள்ளிட்ட பல  ஆய்வியல் முறைகளையும் கவனித்தில் கொள்ள வேண்டும் என்ற கருத்தை மறுப்பதால்தான் இதைக் கேட்கிறேன்.

 

5)) தொழுகை என்று தமிழில் குறிப்பிடுவதை சமணமரபின் திருவள்ளுவர் தெய்வம்தொழாஅள் என்பதாகவே பயன்படுத்தினார்.சைவமரபில் இது அடி தொழுதலாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. சமணர்களும், சைவர்களும் பயன்படுத்தியதால் முஸ்லிம்கள் தொழுகை என்ற சொல்லை பயன்படுத்தாமல் விட்டுவிடவில்லை...

 

6) மொழியின் தோற்றமோ , சொல்லின் உருவாக்கமோ சுத்த சுயம்புவாக எங்கிருந்தோ அந்தரத்திலிருந்து குதித்து விழுவதல்ல. அது எந்தெந்த பகுதியில் எந்தெந்த மக்கள் வாழுகிறார்களோ அந்த மக்களின் கலாச்சாரத்தோடும் மண்ணின் பண்புகளோடும் நடத்தைகளோடுமே உருவாகின்றன.அரபுமொழியில் குரான் இறக்கப்பட்டதற்கு அல்லாஹ் கூறும் காரணமே அது அம்மொழிபேசும் மக்கள் எளிதில் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.எனவே தமிழ்சூழலின் சமயமொழி இன்னொரு அர்த்தத்தில் ஒரு படைப்பில் கலந்திருப்பது என்பது தவிர்க்க முடியாதது..

 

7) அரபுலகச் சூழலில் அல்லாஹ்வின் திருமறையிலும், திருநாமங்களிலும் கூட அரபுஅல்லாத பண்பாட்டிலும் மொழியிலும் பயன்படுத்தப்பட்ட சொற்கள் இடம் பெற்றிருக்கிறதே.இதை எவ்வாறு அணுகுவது..

 

8) பதினேழாம் நூற்றாண்டில் பெரும்பகுதியும் முஸ்லிம்கள் அல்லாதவர்கள் மத்தியில்தான் இஸ்லாத்தை சூபிஞானிகளும், பீர்முகமது அப்பாவும் கொண்டு சென்றார்கள். எனவே இதன் அடிப்படையில் கேட்கிறேன்.. தமிழ் பண்பாட்டுச் சூழலில் சமண சைவ பண்பாட்டைக் குறிக்கும் சொற்களை  ஒரு குறியீட்டு மொழியாக்கி (symbolic language)பிற சமய மக்களுக்கு புரியும் வகையில் இஸ்லாத்தை பரப்புரை செய்யக் கூடாது என்பதற்கு குரானில் ஏதேனும் தடை இருக்கிறதா..

 

9)பீர்முகமது அப்பாவின் கவிதையில் இடம் பெறும் இருமொழிகலப்பும்,கலாச்சார இணைப்பும் இன்னொரு தளத்தில் அல்லாஹ்வை சர்வகுருவாய் சர்வசமயவடிவாய் கண்டு களிக்கிறது.

எனவேதான் தமிழ்முஸ்லிம்கள்மட்டுமல்ல  தமிழர்களும் பீர்முகமது அப்பாவை ஒரு சூபியாய் நேசிக்கிறார்கள்

Series Navigationஅக்கினிக்குஞ்சைத் தேடுகின்றோம்அணுமின்னுலைக் கதிரியக்கக் கழிவுகள் கண்காணிப்பும், நீண்டகாலப் புதைப்பும் -1
author

ஹெச்.ஜி.ரசூல்

Similar Posts

7 Comments

  1. Avatar
    தக்கலை கவுஸ் முகம்மது says:

    அருமை சகோதரர் H .G ரசூலுடைய பதில் மீண்டும் அவருக்கே உரித்தான பாணியில் அதாவது தமிழ் சார்ந்த சூழலில், எண்ணங்கள் சார்ந்த அடிப்படையில், பீரப்பாவின் மீது மரியாதையின் நிமித்தமாக ஏற்படும் உணர்வுகளின் சாரலில், நியாயப்படுத்துதலில் அமைந்த உந்துதலில் , ஞானப்பாடல்களின் மொழியாக்கத்தின் யதார்த்தத்தில் ……. ………………. இப்படிப்பட்ட பல விதவிதமான தாக்கங்களால் ஏற்பட்ட சொல்லாடல்களை கையாண்டு மனதில் உதித்த கருத்துக்களுடன் ( multiple sentimental expressions ) இங்கே பதிவு செய்திருப்பதால் முறையான மறுப்புரைகள் ( Refutations ) உரிய ஆதாரங்களுடன் ( குர்ஆன் மற்றும் சாஹீஹான ஹதீஸ்கள் அடிப்படையில் ) எழுதி H .G ரசூல் தன்னுடைய கருத்துக்களுக்கு வலு சேர்க்கவோ அல்லது நிரூபிக்கவோ முடியாமற் போனதில் படிப்பவர்களில் அநேகம் பேருக்கு ஆச்சரியம் இருக்காது என்றே நான் நினைக்கிறேன். – சுருக்கமாக சொல்லப் போனால் HG ரசூலின் தற்போதைய பதில் – All his perceptions are derived from either inward (or ) outward sentimental expressions , which has NO relevant ( Qura’an & Sunnah) proofs at all to justify his simple comments on the subject matters , as we mentioned in our previous two mails . .

    நான் ஏற்கனவே அனுப்பியிருந்த என்னுடைய பதில் மெயில்களில் கீழ்காணும் கருத்துக்களை ( விபரங்களுடன் ) தெரிவித்து இருந்தேன் இதில் எதற்குமே பதில்கள் தற்போதைய உங்கள் பதில் மெயிலில் இல்லை என்பது மிக தெளிவாகியிருக்கிறது நீங்களே உங்கள் பதிலை ஒருதடவை படித்து பாருங்கள் புரியும் எனவே மீண்டும் அதே சாராம்ச கருத்துக்களை இங்கே மீள் பதிவு செய்து முறையான ஆதாரங்களுடன் பதில் உங்கள் பதிலை எதிர்பார்ர்கிறேன்.

    இறைநேசர்கள் யார் என்பதையோ அல்லது ஒருவரை நல்லவரென்றோ உலகத்தில் தீர்மானிக்க முடியுமா?
    தர்ஹாக்களில் நடந்து வரும் கலாச்சார அனாச்சார சீரழிவுகள் இஸ்லாத்தில் உள்ளதா ?
    ஒருவர் இறைவனை புகழ்ந்து பாடிவிட்டார் என்பதற்காக அவரை அவ்லியாக ஆக்கிவிடலாமா ?
    ஞானப்பாட்டுக்களையெல்லாம் கற்கவில்லையெனில் ஒரு முஸ்லிமுக்கு எவ்வித பிரச்சினையுமில்லை மேலும் சிக்கான வரிகள் மற்றும்
    இஸ்லாமிய விரோத கொள்கைகள் கொண்ட பாட்டுக்களை படிப்பதால் நன்மையா ? தீமையா ?
    ஞானப்புகழ்ச்சியின் 118 வது பாட்டுக்களுக்கு அர்த்தம் எங்கே ? என தரமுடியவில்லை ?
    ஞானப்புகழ்ச்சிக்கு ஏன் இன்னும் விளக்கவுரை எழுதப்படவேயில்லை ?
    ஞானப்புகழ்ச்சி ஒன்றும் குர்ஆன் இல்லையே… பொருள் தெரியாமல் படித்துக் கொண்டாலும் நன்மைதான் கிடைக்கும் என்று நம்புவதற்கு ?
    மாற்று மதங்களை மிகத் தெளிவாக குறிக்கும் அல்லது அவர்களின் வணக்க வழிபாடுகளை மட்டுமே குறிக்கும் குறிப்பிட்ட வார்த்தைகளை கொண்டு நம் இறைவன் அல்லாஹ்வை பீரப்பாவோ அல்லது மற்றவர்களோ புகழவோ அல்லது பாட்டு பாடவோ செய்வதை இஸ்லாம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது
    மாற்று மதத்தவர் ஒருவர் நமது இஸ்லாத்தை எப்படி புரிந்து வைத்திருக்கிறார் என்பதை இந்த சுட்டியை http://haiderghouse.blogspot.com/2011/09/blog-post_7945.html சொடுக்கி நீங்கள் அறிந்து கொள்ளலாம். அனவே முதலில் நாம் சரியாக வேண்டும் அபோதுதான் முறையாக மற்றவர்களுக்கு நமது மார்கத்தை எத்தி வைக்க முடியும் , அதற்குரிய ஏற்பாட்டை நாம் நமது ஜமாத்துக்களில் முறையாக செய்வோமானால் நீங்கள் குறிப்பிட்டுள்ள பிரச்சினைக்கு உரிய தீர்வு வெகு தீவிரமாக நடைபெறும்
    ஒற்றுமை பற்றி பேசும் நல்லெண்ணம் கொண்ட அன்பு சகோதரர்களே நாம் எதில் ஒற்றுமையை காண வேண்டும் ? இஸ்லாத்திற்கு உகந்த செயல்களிலா அல்லது இஸ்லாத்திற்கு எதிரான செயல்களிலா ? இல்லை வெறுமனே நம் சமுதாய ஒற்றுமை என்கிற பெயரில் இஸ்லாத்திற்கு எதிரான எந்த ஒரு செயல்களையும் கண்டும் காணாமல் இருந்து ஒற்றுமையாக இருக்க வேண்டுமா ?

    ஒரு முக்கியமான விஷயத்தை இங்கே நாம் கண்டிப்பாக கடை பிடித்தாக வேண்டும் அதாவது இஸ்லாமிய மார்க்க சம்மந்தபட்ட விஷயங்களை பற்றி விவாதிக்கும் போது. நமது கருத்துக்கள் யாவும் குர்ஆன் மற்றும் சஹீஹான ஹதீஸ்கள் அடிப்படையிலேயே , ஆதரங்களுடன் அமைய வேண்டும். இதை தவிர்த்துள்ள கருத்துக்கள் யாவும் விவாதத்திற்கு உதவாது மட்டுமல்ல இப்படிப்பட்ட விவாதங்கள் படிக்கிற யாருக்கும் பயனளிக்கவும் செய்யாது. காரணம் இங்கே நாம் வாதத் திறமையை பறை சாற்றுவது நமது எண்ணமில்லை நம்மை எதிர்ப்பவர்களுக்காகவோ அல்லது ஆதரிப்பவர்களுக்காகவோ நிச்சயமாக நாம் இங்கே விவாதம் செய்ய முற்படவில்லை மாறாக நடுநிலை மனதுடன் , நல்ல எண்ணங்களுடன் படித்து உண்மைகளை அறிந்து கொள்ள ஆர்வப்படும் சகோதரர்களுக்கும், எது சரி ? எது தவறு ? என நாம் கொடுக்கும் முறையான ஆதாரங்களை கொண்டு கொஞ்சம் சிந்தித்து பார்ப்பதற்கும் அது சரியாக இருக்கும் பட்சத்தில் பின்னர் அதன்படி நல் அமல்களை செய்து கொள்வதற்கும் , இப்படிப்பட்ட ஒரு சில விவாதங்களை மக்கள் மத்தியிலே நன்மையை ஏவி தீமையை தடுக்க வேண்டும் என்கிற உன்னதமான எண்ணத்தில் அல்லாஹ் மற்றும் அவனது தூதர் நபி (ஸல்) அவர்களின் கட்டளைப்படி முன் வைக்கிறோம் இதுவே நமது நோக்கம்.

    இந்த விளக்கத்தை நான் கழிந்த இரண்டு மின்னஞ்சல்களில் முறையாக பதிவு செய்திருந்தேன் ஆனால் அதை சகோதரர் H .G ரசூல் அவர்கள் கடை பிடிக்காமல் போனதில் நான் ஆச்சரியப்படவில்லை காரணம் அவர் இஸ்லாம் சம்மந்தப்பட்ட விஷயங்களை எப்படியெல்லாம் எந்தெந்த முறைகளில் அணுகினார் என பலருக்கும் தெரிந்ததுதான்.. ( இந்த விவாதத்திற்குள் நான் செல்லவில்லை இது நமது குறிக்கோளும் இல்லை ) இருந்தாலும் நாளுக்கு நாள் சில விளக்கங்கள் , உண்மைகள் , ஆதாரங்கள் கிடைக்கும் போது எழுத்துக்களும் , கருத்துக்களும் , தவறுகளும் நன்மை கருதி மாறுவதற்கு மனிதர்களுக்கு எல்லா வாய்ப்புகளும் உண்டு என்கிற அடிப்படை யதார்த்தத்தில் நானும் விவாதத்தை தொடர்ந்தேன் என்துதான் உண்மை ஆனால் அதே நிலைதான் அவரிடம் இன்னும் தொடருகிறது என்று அவரின் பதில்கள் நிரூபிக்கிறது என்பதை அவரின் பதில்கள் மூலம் நமக்கு தெரிய வருகிறது. எனவே நமது நிலையை கழிந்த என்னுடைய இரண்டு மின்னஞ்சல்களின் அடிப்படையில் மீண்டும் இங்கே எடுத்து வைக்கிறோம்.

    நமது விவாதங்களில் மிக முக்கியமான Core Issue க்களில் இந்த அவ்லியா விஷயம் முதன்மையானது ,இதற்கு அடுத்தாற்போல் உள்ளது அவரின் பாட்டுக்களில் காணப்படும் ஷிர்க்கான வார்த்தைகளும், வரிகளும் , மாற்று மத தத்துவங்களும் அதாவது வஹதத்துல் வுஜூது, மற்றும் இதன் படிப்படையில் அமைந்த அஹம்பிரம்மாஸ்மி – மக்கள் பீரப்பா அவ்லியாதான் என்று தீர்மானமாகவே நினைத்து விட்டதாலேயே அவருடைய ஞானப்பாட்டுக்களும் புனிதம் பெற்றிருக்கிறது. காரணம் நாகூர் EM ஹனீபாவின் பாட்டுக்கள் , அதை எழுதிக் கொடுத்த கவிஞர்கள், மேலும் அல்லாஹ்வை புகழ்ந்து பாட்டு பாடியவர்கள் , இப்படி எத்தனையோ பேர்கள் இருக்கிறார்கள் ஆனாலும் யாருக்குமே இல்லாத ஒரு புனிதம் ஏன் மக்கள் இந்த இந்த பீரப்பாவின் பாட்டுக்களுக்கு கொடுக்கிறார்கள் ? முதன் முதலில் மொழி பெயர்த்ததாலா ? அல்லாஹ்வை புகழ்ந்து பாடியதாலா ? இல்லை சகோதரரே !…….. பீரப்பாவை அவ்லியா ?! என்று மக்கள் ஏக மனதாக தீர்மானித்ததால் ?! வந்த விளைவுதான் இந்த நிலைமை. எனவே பீஜே, ஜமாலி போன்றவருக்குத்தான் இது விபரம் தெரியும் , நாம் இதில் தலையிட வேண்டாம் என நாம் ஒதுங்க வேண்டிய ஒரு அவசியமுமில்லை எனபது அன்பான கருத்து.

    அன்பு சகோதரரே ! நீங்கள் ஒரு கருத்தை சொல்லியிருக்கிறீர்களே அதாவது இறை நேசர் என்பவர் இறை நேசத்துக்குரிய செயலை செய்பவர். பிறரால் செய்யமுடியாத இறைநேசத்துக்குரிய செயல்களை பீர்முகமது அப்பா செய்ததால் இறைநேசராகிறார்.இதில் என்ன சந்தேகம்… என கேட்டிருக்கிறீர்கள்… இது நான் ஏற்கனவே இந்த மின்னஞ்சலின் முதல் பாராவில் குறிப்பிடிருந்தேனே ! அந்த அடிப்படையில் அமைந்திருக்கிறது. குர்ஆன் சொல்லும் விளக்கத்தை அதன் வசனங்களுடன் மேலும் பல ஆதாரங்களுடன் ( அவ்லியாக்கள் யார் என்ற கட்டுரையில்) நான் தெளிவாக தெரிவித்திருந்தேன்.. ஆனால் நீங்களோ மீண்டும் ஒரே வாசிப்பை தொடர்ந்து வாசிக்கிறீர்கள்…இது இஸ்லாத்தில் இல்லாத வாசிப்பு ! என்பதை இனியும் நீங்கள் உணர்ந்து கொள்ளாதது இந்த விஷயத்தில் உங்கள் மன ஓட்டத்தையே துல்லியமாக காட்டுகிறது. இல்லையென்றால் அவ்லியா பற்றியும் , தர்ஹா மற்றும் அதன் கலாச்சார, அனாச்சார சீரழிவுகள் பற்றியுள்ள உண்மை செய்திகளை எழுதியிருந்தேனே , உங்களுக்கு கிடைத்த அறிவின் படி, தகவல்படி ஆதாரங்களுடன் பதில் தந்திருக்கலாமே !…. ஆனால் நீங்களோ பீஜே, ஜமாலி, களியிக்காவிளை என ரொம்ப நாசூக்காய் ஒதுங்குகிறீர்கள் இது விவாதத்திற்கு உகந்த முறையில்லை… ஒரு விஷயத்தை நாம் விவாதிக்கும் போது அது சார்ந்த மிக முக்கியமான விவாகாரங்களையும்தானே விவாதித்தாக வேண்டும் ? பீரப்பா அவ்லியாவா ? இல்லையா ? என்பது மிக முக்கியமானது என்பதால், இதிலிருந்து ஒதுங்காமல் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பீஜே, ஜமாலி வாதங்களையாவது கேட்டு நீங்கள் ஏற்கும் கருத்தை ஆதாரங்களுடன் முன் வைக்கலாமே..!

    இன்னும் ஒன்றை சொல்லியாக வேண்டும்… உங்கள் பதிலில் நான் குறிப்பிட்ட கொடிய விஷம் வஹதத்துல் வுஜூது, மற்றும் இதன் படிப்படையில் அமைந்த அஹம்பிரம்மாஸ்மி – அடங்கிய அந்த இரண்டு வரிகளின் அர்த்தங்களை நீங்கள் கடைசி வரை சொல்லவேயில்லை ( இதுவரையிலும் யாரும் சொல்ல முன்வரவில்லை ) ஏன் ஞானப்புகழ்ச்சிக்கு இதுவரையிலும் விளக்கவுரையில்லை ? இதற்கும் இன்னும் விடை தெரிந்தடாடில்லை !.. அப்படியானால் அது வில்லங்கமான இஸ்லாமிய விரோதமான வரிகள்தான் என நீங்களும் மறைமுகமாக சொல்கிறீர்களோ என்னவோ ? சரி…. இனி அந்த இரண்டு வரிகளில் ( நீயே உனக்கு ஸுஜூது செய்தாய்,நீயே புவிக்குள் றசூலாக வந்தவன் ) – நான் புரிந்து கொண்ட விதத்தை எத்தனை தடவைதான் எழுதுவது ? இதோ மீண்டும் எழுதுகிறேன் வஹதத்துல் வுஜூது, (இயல்வன யாவும் இறையுருவே) மற்றும் இதன் படிப்படையில் அமைந்த அஹம்பிரம்மாஸ்மி என்ற சூபி கோட்பாடுகள் -இது இஸ்லாமிய அகீதா ( கொள்கைக்கு) வுக்கு ஏற்புடைய கொள்கை இல்லை, இஸ்லாமில் இல்லை , நபி வழியில் இல்லை எனவேதான் கொடிய விஷம் என்றேன் … இல்லை அது பால் என்கிறீர்கள் , அது பால்தான் (இஸ்லாமிய அகீதா ( கொள்கைக்கு) வுக்கு ஏற்புடைய கொள்கைதான் ) என நீங்கள் தான் இனி நிரூபிக்க வேண்டும்… அடுத்த பதிலிலாவது மேற்கொண்டு இதற்கான விளக்கம் முறையான ஆதாரங்களுடன் கிடைக்கும் என நம்புகிறேன். சரியாக இருக்குமானால் எனக்கு ஏற்றுக் கொள்வதில் எந்த பிரச்சினையுமில்லை , சந்தேகம் வருவது இயற்கைதானே ! அது போல் அதை தீர்த்து வைப்பதும் முறைதானே ! இதில் ஏன் வீண் வாசி பிடிக்க வேண்டும் ? காலம் காலமாக இந்த பிரச்சினை இருந்து வருவதாகவே நான் அறிந்தேன் இப்போதாவது உங்கள் மூலம் தெளிவு கிடைக்குமானால் நல்லதுதானே நமது மக்கள் அனைவரும் இது பற்றி உண்மையிலேயே அறிய மிகுந்த ஆவலாக இருக்கிறார்கள். ஒரு முக்கிய விஷயம் … இந்த இரண்டு வரிகள்தான் பிரச்சினை என்று நினைக்காதீர்கள் இன்னும் நிறைய வரிகளும் வார்த்தைகளும், கோட்பாடுகளும் இஸ்லாமிய விரோதமாகவே பீரப்பாவின் பாடல்களில் இருக்கிறது என்பதனை நான் ஏற்கனவே உங்களுக்கும் தெரிவித்திருக்கிறேன்.

    அன்பு சகோதரரே !,, என்னுடைய முதல் இரண்டு மெயில்களையும் மீண்டும் ஒரு தடவை படித்து புரிந்து கொள்வது மிக்க அவசியம் என கருதுகிறேன். காரணம் நாம் எடுத்து வைத்த எந்த ஒரு வாதத்திற்கும் உரிய பதில்களை உங்கள் பதிலில் காண முடியவில்லை மாறாக ஒவ்வொன்றையும் உங்களுக்கே உரித்தான பாணியில் நியாயப்படுத்தியிருக்கிரீர்கள் …. நாம் எடுத்து வைத்த பிரச்சினைகளுக்கு முறையான ஆதாரங்களுடன் பதில் வேண்டும் என்பதே நாம் எதிர்பார்ப்பது.

    ஆக எங்களுடைய நிலை மிக தெளிவானது அதை ஏற்கனவே தொகுத்து பதிவு செய்திருந்தேன் … இதோ மீண்டும் உங்கள் நினைவுக்கு கொண்டு வருகிறேன்…. நீங்கள் விரும்பினால் வசதி கருதி இந்த விஷயங்களை ஒவ்வொன்றாகவும் விவாதிக்க தயாராக இருக்கிறேன்.

    1) பீரப்பா என்கிறவர் தமிழ்ப்புலமை வாய்ந்த ஒரு சூபி புலவர் – சித்தர்களில் ஒருவராகவும் இருக்கலாம்

    2) பீரப்பா அவ்லியாவா ? இல்லையா ? என நமக்கு ( மனிதர்களுக்கு) தெரியாது நிச்சயமாக அல்லாஹ் மட்டுமே அறிந்தவன்

    3) பீரப்பா துறவறம் மேற்கொண்டவர், இஸ்லாம் இதை அனுமதிக்கவில்லை, இது நபி வழியும் இல்லை ,

    4) பீரப்பா தானே குழிக்குள் சென்று சமாதியான செயல் ( வாய்வழி வாரலாறு உண்மையென்றால் ) தற்கொலைக்கு ஒப்பானது இஸ்லாத்தில் இது பாவ செயல்

    5) பீரப்பா தன்னுடைய பாட்டுக்களில் இறைவனை புகழ்ந்து பாடியிருப்பதோடு இஸ்லாத்திற்கு விரோதமான சூபி தத்துவங்களையும் , மாற்றுமத தத்துவங்களையும் சொல்லியிருக்கிறார் என்பதனை ஆதாரங்களுடன் நிரூபணமாகியிருக்கிறது . பீரப்பா உள்பட எந்த ஒரு கவிஞர்களின் பாடல்களுக்கும் புனிதம் கிடையாது

    6) பீரப்பா பாடிய பாட்டுக்களின் தத்துவங்களுக்கு அவரே முழு பொறுப்பும், இதன் நன்மை தீமைகள் பற்றி அல்லாஹ்வே தீர்ப்பு அளிப்பான் இடையில் நாம் யார் ? அதனை நன்மைதான் என தீர்மானித்து புனிதம் கொடுத்து அல்லாஹ்விடத்தில் நன்மை நாடி பக்தியுடன் படிப்பதற்கு ? இது போன்ற பாடல்களை எல்லாம் கைவிட்டுவிட வேண்டும். மக்கள் தான் நன்மை என்றும் புனிதம்தான் என நம்பி விடிய விடிய படிக்க துவங்கியதால்தான் தான் நாமும் இது விஷயத்தில் களமிறங்க வேண்டியதாயிற்று இல்லையெனில் நமது வாதங்கள் அனைத்தும் அவ்லியா, தர்ஹா கலாச்சாரம் பற்றியே இருந்திருக்கும். இஸ்லாத்தில் நன்மை தீமைகள் ஏற்கனவே 1400 வருடங்களுக்கு முன்னால் தெளிவாக வரையறுக்கப்பட்டு பூரணமாக்கப்பட்டுவிட்டது என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் நினைவில் கொண்டாக வேண்டும்.

    7) ஒரு முஸ்லிம் இந்த மாதிரியான பாட்டுக்களை படிக்காவிட்டால் அவனுக்கு என்ன தீமை சேரப்போகிறது ? அல்லது படித்தால் நன்மைதான் என எந்த ஆதாரத்தில் மனிதர்கள் தீர்மானித்தார்கள் ? இதை படிக்காவிட்டால் அல்லாஹ் நாளை மறுமையில் நம்மிடம் ஏன் படிக்கவில்லை என கேள்வி கேட்பானா ? இல்லை பீரப்பா அல்லாஹ்விடம் சொல்லி , சிபாரிசு செய்து தண்டனையை வாங்கி தருவாரா ? ஏன் நம் மனம் சிந்திக்க தயங்குகிறது ?

    8) பீரப்பா இறைவனோடு கலந்து விட்டவர் என்று நம்புவது இஸ்லாமிய அகீதா ( கொள்கைக்கு) விரோதமானது என ஏன் தெரியவில்லை ?

    9) தர்ஹா கட்டுவதும் , கப்ருக்களை கட்டுவதும் , அலங்கரிப்பதும் , ஆதாரதனை செய்வதும், விழா கொண்டாடுவதும், பலி கொடுப்பதும் அதனை சுற்றி நடக்கும் அத்தனை கலாச்சார அனாச்சார சீரழிவுகளும் இஸ்லாத்திற்கு எதிரானது, நபி வழியில் இல்லாதது, ,மன்னிப்புகள் இல்லாத ஷிற்குல் அக்பர் எனும் மிகப் கொடிய பாவமானது , பித் அத்தானது, நரக நெருப்புக்குரிய செயல்களானது. முஸ்லிம்கள் கண்டிப்பாக தவிர்த்துக் கொள்ளவேண்டியது

    10) அல்லாஹ்வுடைய கட்டளையான, ரசூல் (ஸல்) அவர்களின் போதனைகளான நன்மையை ஏவி தீமை தடுப்பது – அதாவது மக்கள் இந்த அவ்லியா, தர்ஹா வழிபாடு மற்றும் ஷிர்கான , பித்அத்தான அனைத்து காரியங்களையும் அறவே கை விட்டு அறிவுகேற்ற மார்கமான தூய இஸ்லாத்தில் அல்லாஹ் நமக்கு அருளிய வேதமான அல் குர்ஆன், மற்றும் சஹீஹான ஹதீஸ்களை முறையாக அறிந்து கொண்டு, அதன்படி அன்றாட வாழ்க்கையில் படிப்படியாக நடை முறைப்படுத்தி இம்மைக்கும், மறுமைக்குமான வெற்றிகளை அடைந்து கொள்வது

    11) மேற்காணப்படும் தர்கா கலாச்சார அனாச்சாரங்களையெல்லாம் பின்பற்றாத மக்களிடம் அல்லது இதெல்லாம் தவறு என முறையான ஆதாரங்களுடன் எடுத்துரைக்கும் மக்களிடம் ஏன் நமது ஜமாத்துகள் ஊர் நடவடிக்கை என்ற பெயரில் ஊர் விலக்கம் செய்கிறார்கள் ? இவர்கள் பின்பற்றுவதாக ?! சொல்லிக் கொள்ளும் சுன்னத்துல் ஜமாஅத் கொள்கைகளைத்தான் பின்பற்ற வேண்டும் என மக்களை இவர்கள் எப்படி நிர்பந்திக்கலாம் ? இதற்கு நமது மார்கத்தில் இடம் உண்டா ? வக்பு வாரியம் என்ற அரசாங்க அமைப்பில்தான் செயல்படுகிறோம் ஆனால் அதன் சட்ட திட்டங்களை நாங்கள் மதிக்க மாட்டோம் ?! என தக்கலை அ பீ மு அ ஜமாஅத் நிர்வாகம் தொடர்ந்து எதேச்சையாக , அடாவடித்தனமாக செயல்பட்டு வருகிறதே !… இது என்ன நியாயம் …. ?.. இது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட செயலா ? .. இஸ்லாத்தை சரியான முறையில் எத்தி வைக்க வேண்டிய, தவறுகளை சுட்டிக் காட்டவேண்டிய மிகப் பெரிய பொறுப்பில் இருக்கும் தக்கலை அ பீ மு அ ஜமாஅத் ஆலிம் என்பவர் இதற்கெல்லாம் உடந்தையாகவே இருக்கிறாரா? அல்லது இவரை தக்கலை அ பீ மு அ ஜமாஅத் நிர்வாகம் மதிப்பதில்லையா ? தொடர்ந்து தவறுகள் நடந்து கொண்டேதான் இருக்கிறதே !……. என்றுதான் தக்கலை அ பீ மு அ ஜமாஅத் மக்களுக்கு விடிவுகாலம்…………..????????????

    அருமை நண்பர் HG ரசூலுக்கு எனது அன்பான சீரியசான வேண்டுகோள் : குர்ஆன் மற்றும் சஹீஹான ஹதீஸ்களின் அடிப்படைகளை கொஞ்சம் தெரிந்து கொண்டு இவ்விஷயங்களை விவாதிக்க முன் வருவீர்களேயானால் நமது விவாதங்களை படிக்கும் சகோதரர்களுக்கு கொஞ்சம் உபயோகோகமாவது இருக்கும் அதை விடுத்து முறையான இஸ்லாமிய அடிப்படை ஆதாரங்கள் இல்லாத வாதங்கள் , தமிழ் பண்பாடுகள் , இலக்கியங்கள் , மொழியாக்கங்கள் , கவிதை சொல்லாடல்கள் , முன்னோர் மரபியல்கள் , விவாத முறையியல்கள் , பகுத்தறிவு வாதங்கள் , உணர்ச்சிகளின் வெளிப்பாடுகள் இப்படி இன்னும் சொல்லக் கொண்டே போகலாம் …. இந்த வகைகளில் நாம் விவாதம் நடத்த முற்பட்டோமானால் யாருக்கும் உபயோகமில்லாமல் போய்விடும் என்பதை மனதில் கொண்டு உங்கள் பதிலை எழுதினால் நல்லது என அன்புடனே அறிவுறுத்திக் கொள்கிறேன்.

    A simple Note : இஸ்லாமிய மார்கத்தில் குர்ஆன், மற்றும் சஹீஹான ஹதீஸ்களுக்கு, அகீதாவுக்கு முரண்படாத ,மொழியாக்கங்களோ, பாட்டுக்களோ , ஞானப்பாட்டுக்களோ ( இசைக்கருவிகளுடன் இசையாக பாடாதவரை) கவிதைகளோ , விவாதங்களோ, கருத்துக்களோ பிரச்சினையில்லை என்பதை நாம் ஒவ்வொருவரும் தெளிவாக விளங்க வேண்டும் இது பீரப்பாவின் ஞானப்புகழ்ச்சிக்கும் மற்றுமுள்ள அவரின் எல்லா பாடல்களுக்கும் மிக நன்றாகவே பொருந்தும், இப்படி விளங்கிக்கொண்டால் நண்பர் H G ரசூலும் இது பற்றி கூடுதலாக மீண்டும் மீண்டும் எழுத வேண்டிய அவசியமிருக்காது என்றே நான் கருதுகிறேன்

    இன்ஷா அல்லாஹ் நமது விவாதங்களை இறை அச்சத்துடன் தொடரலாம் அது மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கட்டும் என்கிற நம்பிக்கைகளுடனும் , மிக்க அன்புடனும் , சலாத்துடனும் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். நம் எல்லோருடைய நற்காரியங்களையும், நற்செயல்களையும், நற்கருத்துக்களையும், நல்ல அமல்களையும் அல்லாஹ் பொருந்திக் கொள்ளட்டும் எனவும் துஆ செய்து கொள்வோம்…. ஆமீன் … ஆமீன்….. யாரப்பில் ஆலமீன். கீழ்காணும் துஆவுடன் நிறைவு செய்கிறேன்

    59:10………….“எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்” ……………………

    வஸ்ஸலாம்

    சிந்திக்க தூண்டும் உங்கள் சகோதரன் …………

    தக்கலை கவுஸ் முஹம்மது – பஹ்ரைன்

    Blog: http://haiderghouse.blogspot.com/

    * குறைகள் என்னை சாரும், நிறைகள் ஏக இறைவனை சாரும் …………..

    * படைக்கப்பட்டவர்களை விட்டு, விட்டு படைத்தவனை மட்டுமே நாம் வணங்குவோம் !

    * குர்ஆனை பொருளுணர்ந்து முறையாக ஓதுவோம் ! அதனை சிந்தித்து செயல்படுவோம் !

    * அல்லாஹ்வும் அவனது ரசூல் (ஸல்) அவர்களும் காட்டித்தந்த நேர்வழியை பின்பற்றுவோம் !

  2. Avatar
    ஒ.நூருல் அமீன் says:

    சகோதரர் தக்கலை கௌஸ் முஹம்மது உங்கள் எழுத்து நடை வசீகரமாய் என்னை கவர்ந்திழுத்தது. உங்கள் கருத்துகளை அருமையாக முன்வைக்கின்றீர்கள். ஒரு சின்ன கோரிக்கை.
    H.G.ரசூல் சொல்வது சரியா, தவறா என்பது இருக்கட்டும்.
    பீரப்பா என்ன சொல்கின்றார்கள் என்பது நமக்கு விளங்காவிட்டாலும் போகட்டும்.
    //குர்ஆனை பொருளுணர்ந்து முறையாக ஓதுவோம் ! அதனை சிந்தித்து செயல்படுவோம் !
    அல்லாஹ்வும் அவனது ரசூல் (ஸல்) அவர்களும் காட்டித்தந்த நேர்வழியை பின்பற்றுவோம் !// என எழுதியிருந்தீர்கள். ஆமீன்.

    இன்னும் குர்ஆன், ஹதீஸில் நாம் விளங்க வேண்டிய விசயங்கள் எத்தனையோ இருக்கலாம் அல்லவா? திறந்த மனதுடன் என் பின் வரும் சுட்டியினை பார்வையிட உங்களை பணிவன்புடன் அழைக்கின்றேன்:
    http://onameen.blogspot.com/2011/12/blog-post_11.html

    அல் குர்ஆனின் ஒளியில் அகப்பார்வை மற்றும் அந்த சுட்டியின் உள்ளே இருக்கும் யார் அந்த விநோத மனிதர் கட்டுரையையும் பார்வையிடுங்கள்.

    அன்புடன்,
    ஒ.நூருல் அமீன்

  3. Avatar
    தக்கலை கௌஸ் முஹம்மது says:

    நூருல் அமீன் அவர்களே !… உங்களின் கனிவான வார்த்தைகளுக்கு … நன்றி … Jazaakkallaah khair …. நீங்கள் குறிப்பிட்ட சுட்டியை பார்வையிட்டேன் இது விஷயமாக பிறிதொரு தடவை நான் உங்களை onoorulameen@gmail.com ல் தொடர்பு கொள்கிறேன். இப்போதைக்கு நான் இங்கே எடுத்து வைத்திருக்கும் கருத்துக்கள் அல்லது கேள்விகள் , மேலும் இதற்கு முந்தைய பதிவாகிய ஞானப்புகழ்ச்சி இறைவேதத்திற்கு ஒப்பாகுமா ?! என்பதற்கும் எனது பின்னூட்டத்தை பதிவு செய்திருந்தேன் இவைகள் சம்மந்தமாக உங்களின் தெளிவான நிலை என்ன ? என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.

  4. Avatar
    ஒ.நூருல் அமீன் says:

    அன்பு சகோதரரே!
    நீங்கள் என் சுட்டியினை பார்வையிட்டதற்கு நன்றி!. அல்ஹம்துலில்லாஹ்.

    உங்கள் கேள்விக்கு என் பதில். நான் ஏற்கனவே கூறியது தான்.
    குர்ஆனின் மொழிபெயர்ப்பே குர்ஆனுக்கு ஒப்பாகாது எனும் போது ஞானப்புகழ்ச்சி இறைவேதத்திற்கு ஒப்பாகுமா என்பதில் விவாதிக்க என்ன இருக்கின்றது?

    யாருடைய கருத்தும் குர்ஆன், ஹதீசுக்கு முரணாக இருந்தால் பின் பற்ற வேண்டியதில்லை.

    அதே நேரத்தில் முரண்பாடு, உடன்பாடு என்பதில் தான் விவாதம் தொடர்கின்றது ஆகவே சில அடிப்படையான விசயங்கள் நம் சிந்தனைக்காக ஒரு எளிய உதாரணத்துடன் உங்கள் பார்வைக்கு:

    இறைவனைத் தவிர யாரும் லாபமோ, நஷ்டமோ அனுவளவும் பிறருக்கு செய்ய முடியாது என்பது என்/நம் நம்பிக்கை.

    அதே நேரத்தில் சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பது நாமறிந்த இன்னொரு உண்மை.

    துரும்பின் மூலம் பல்குத்தும் உதவியையும் செய்வது இறைவன் என்பது தவ்ஹீத் எனும் ஏகத்துவம். இந்த மகத்தான உண்மையை அடையா விட்டால் மேற் கூறிய இரண்டில் ஒரு கூற்று பொய்யென்றாகி விடும்.

    அதே நேரத்தில் சிருஷ்டியை இறைவன் என்றோ
    இறைவனை சிருஷ்டி என்றோ சொல்வதல்ல தவ்ஹீது.

    ஆகவே, தவ்ஹீது என்றால் என்ன? ஷிர்க் என்றால் என்ன? என்பதில் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் சரியான வரையறை (Definition) அளவு கோள்கள்கள் (yard stick) மற்றும் அவற்றில் முடிந்தவரை கருத்தொறுமை அடைய வேண்டியது முதல் தேவை.

    அப்படி செய்யாதவரை இது ஷிர்க், இது பித்அத் எனபதில் அதிலும் குறிப்பாக ஷிர்கே கஃபி எனும் மறைமுகமான ஷிர்க்கின் விசயத்தில் கருத்து வேறுபாடு என்பது தவிர்க்கவே முடியாதது.

    அன்புடன்,
    ஒ.நூருல் அமீன்

  5. Avatar
    அஹமது முத்தலீப் says:

    சூஃபி பாரம்பரியத்துக்கு எதிராக வஹாபிகள் வைக்கும் அனைத்து விமர்சனங்களும் இன்று பீர் அப்பா மீதும் வைக்கப்ப்டுகின்றன என்பதை தாண்டி இங்கே சொல்ல ஏதுமில்லை.
    என்னதான் இறுக்கமான கட்டுக்களை ஏகாதிபத்திய மதங்களான இஸ்லாமும் கிறிஸ்துவமும் உருவாக்கினாலும், மனித மனம் என்றென்றும் விடுதலையை நோக்கி நெகிழ்ந்து உண்மையான ஆன்மீகத்தை அடைந்துவிடும் என்பதற்கு இஸ்லாமிய பாரம்பரியத்தில் சூஃபிகளும், கிறிஸ்துவ பாரம்பரியத்தில் க்னாஸ்டிக்குகளும் இருந்துவந்தே இருக்கிறார்கள்.

    வஹாபிஸம் இஸ்லாமை ஒரு அரசியல் கட்சியாக பார்க்கிறது.
    சூஃபியிஸம் இஸ்லாமை மனிதனது ஆன்மீகத்தேடலில் முதல் படியாக பார்க்கிறது.

    உருவ வழிபாட்டை எதிர்ப்பதாக கூறிக்கொள்ளும், இஸ்லாமே “இஸ்லாம்”, “மெக்கா”, “நபிகள் நாயகம்”, “அல்லாஹ்”, “குரான்”, “ஹதீஸ்’ போன்ற வார்த்தை பிரதிமைகளிலும், உருவங்களிலும் சிக்கிகொள்கிறது. குரானை எரிப்பது பெரும் பிரச்னையாக பார்க்கப்படுகிறது.

    ஆனால், இஸ்லாம் திட்டும் இந்துக்களோ, விக்கிரகங்களையும் மூர்த்திகளையும் வைத்துகொண்டே, அந்த உருவ வழிபாட்டை எளிதில் கடந்து மேலே சென்றுவிடுகிறார்கள்.

    தனி நபரான முகம்மதின் குறுகிய பார்வையை முழுக்க முழுக்க தன் மீது போட்டுகொண்டிருக்கிற வஹாபிய முஸ்லீம்களை சூஃபியிஸம் சற்றே விடுதலை செய்ய முனைகிறது. வார்த்தைகளுக்குள் சிக்காமல் வார்த்தைகளை தாண்டி இறையுணர்வை பெற இஸ்லாமியர்களை அழைக்கிறது.

    1. Avatar
      சூபி முஸ்லிம் says:

      அன்பு அஹமது முத்தலீப் , இந்த மத அரசியல் வெறியர்களுக்கு ஞானபார்வை இல்லை, இவர்களுக்கு தேவை இஸ்லாம் என்ற அரசியல்,ராணுவ,போர் அமைப்பு , நமக்கு தேவை இஸ்லாம் என்ற ஞான,அருள் நிறை, இறைஉணர் உன்னத நிலை.
      இவர்களின் இஸ்லாம் இந்துத்வதுக்கு நல்ல எதிரியாக இருக்கலாமே தவிர, இது என்றும் மனிதன் இறைவனை அடைய பயன் படாது!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *