மேலதிகாரிகள்

உறங்கத் தாமதமாகும் ஒவ்வொரு இரவும் சுமந்து வருகிறது உழைப்பின் களைப்பை அலுவலகம் உறிஞ்சிச் சுவைத்த நேரத்தை பார்களில் அமர்ந்து பீராக உறிஞ்சியபடி அதிக வேலை பற்றியும் அதிகப்படியாயோ குறைந்தோ கிடைத்த போனஸ் பற்றியும் கடுகடுத்த மேலதிகாரியை கிண்டலடித்தபடியும் சக ஊழியனை ஜால்ராக்காரனாகவும்…
விளிம்பு நிலை மனிதர்களும் விடலைப்பையன்களும் (அவன் இவன்)- திரைவிமர்சனம்

விளிம்பு நிலை மனிதர்களும் விடலைப்பையன்களும் (அவன் இவன்)- திரைவிமர்சனம்

ஆர்ப்பாட்டமான இசையுடன் தொடங்குகிறது திரைப்படம்.'எவளாவது இந்த மீசை விஷயத்த வெளிய சொன்னீங்க அப்பறம் இருக்கு சேதி' என்று ஜமீன் கூறுவதுடன்.ஒட்டு மீசையை மறைப்பது போல் அவருக்குள் மறைந்து கிடக்கும் பல விஷயங்களுடன் நகர்கிறது அவன்-இவன் திரைப்படம். விஷால் வாழ்ந்திருக்கிறார் படத்தில் ஜி.எம்.குமாருடன்.விளையாட்டு…

அலைவுறும் உறக்கமோடு ஒரு கடிதம்

திலகபாமா அன்புள்ள நிஷாந்த் நீ நலமாயில்லை அல்லது நலமாயிருப்பதாய் நம்புவதாய் எழுதிய கடிதத்திலிருந்து எனது பதில் துவங்குகின்றது. உன் எழுத்துக்கள் நடுங்குவதைக் கண்ணுற்ற நான் அதைத் தவிர்க்கவே இக்கடித்தை எழுதுகின்றேன். எல்லாரும் குழந்தைகளை யசோதைக்கு கண்ணன்போல் கடவுளே வாய்த்தாலும் நாகரீகத்திற்கு துல்லிய…

காகித முரண்

ஒரு மரம் விடவில்லை ஒரு சுவர் விடவில்லை ஊரெல்லாம் விழா பற்றி ”காகித” போஸ்டர்ஸ் முதல்வர் கலந்து கொள்கிறாராம் ஊரே விழாக்கோலம் பூண்டது சிறுவன் படித்துக்கொண்டிருந்தான் காகிதம் மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது விழாவின் பெயர் ஏதோ “மரம் நடுவிழாவாம்”. அ.லெட்சுமணன்.

சின்னப்பயல் கவிதைகள்

ஆள்காட்டி மழை ஜன்னல் கம்பிகளில் தொற்றிக்கொண்டிருந்த மழை நீரை ஆள்காட்டி விரல் கொண்டு ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை அழுத்தி வடித்து விட்டேன். மறு நாள் மழை வரவில்லை. ஆள்காட்டி விரல் காரணமாயிருக்குமோ ? அஞ்சறைப்பெட்டி அஞ்சறைப்பெட்டியில் அம்மா போட்டு வைத்த…
ஒரு புளியமரத்தின் கதை: திரு.சுந்தர ராமசாமி

ஒரு புளியமரத்தின் கதை: திரு.சுந்தர ராமசாமி

நாகர்கோவில் பகுதி மக்களின் வட்டார வழக்கு தமிழை இவ்வளவு சுவையாக எழுதி இதற்கு முன் நான் படித்ததில்லை. ஒரு புளிய மரம், அதை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் - நகரும் கதைகள். ஒரு மரம் எங்கும் நகர்ந்து போவதில்லை. ஆனால் அது…

காட்சியும் தரிசனமும்

பூகோள வரைபடங்கள் இல்லாமல் திசையை அவதானித்து தேசங்களைக் கடப்பதாய் பறந்தும் மிதந்தும் மின்னல் வேக இறக்கத்தில் ஒரு மீனைக் கொத்திச் செல்வதாய் வளாகங்களின் சாளர மேற்புறத்து வெயில் மறைப்புகளில் ஒடுங்கிப் பெருகுவதாய் மலரினுள் நுழைந்து தேனெடுத்து மரத்தைக் கொத்தி இரை தேடி…

ப.மதியழகன் கவிதைகள்

மணல் வீடு   வானக்கூரையை தொட்டுக் கொண்டு நிற்கும் கலங்கரை விளக்கம் படகுகளைத் தாலாட்டும் கடலலைகள் கடலில் நீந்தும் மீன்கள் வலையில் அகப்பட்டால் பாத்திரத்தில் பதார்த்தமாய் கிடக்கும் கடலின் ஆழத்தில் பனித்துளி முத்தாக உருமாறும் கடலலைகள் எழுப்பும் ஓசை ஆர்மோனியத்திலிருந்து வெளிவரும்…

காலம் – பொன்

பொன்னை துரத்தும் பந்தயம் காலம்-நான்-பொன் ஒருவர் பின் ஒருவர் துரத்தியபடி . ஓடினால் அள்ள முடியாதென குதிரை மேல் சவாரி . ஏறியதும் தெரிந்தது - இது பொன் இடும் குதிரை மட்டுமல்ல பொன் தேடும் குதிரையும் கூட . தலை…

பிறந்த மண்

மணல் குன்றில் விளையாடுகின்றன குழந்தைகள். மலை ஏற்ற வீரர்களைப்போல் அதன் உச்சியில் ஏற நெகிழ்ந்து மண் சரிய சிரிக்கின்றன . மணலில் மலை செய்து அதில் குகைகளைக்குடைந்து கூழாங்கற்களை வாசலுக்குப்பதிக்கின்றன மணலில் சித்திரங்களை,பெயர்களை வரைந்து அழிக்கின்றன. மணலில் செடியை நட்டு நீர்…