ஒரிகமி

ஒரிகமி

காகிதத்தில் கற்பனை மடிப்புகள் விரிந்து புதுப்புது உருவங்கள் பார்வையாளர் உள்ளத்தில் மிதக்கும். ஒரிகமி கலைஞனின் மெல்லிய விரலழுத்தத்தில் குதித்தெழுகின்றன குதிரைகளும், பறவைகளும். ஒரே தாளில் தோன்றுகின்ற வியத்தகு உருவங்களை உள்ளத்தில் கசங்காமல் பதித்துக் கொண்ட மக்களின் கரகோஷம் அரங்கைக் குலுக்கியது.  …
மனவழிச் சாலை

மனவழிச் சாலை

கவலைகள் அவ்வப்போது கடுகாகவும் கடுஞ்சீற்றத்துடனும் வரும்...   அதன் வருகையின் அடையாளமாய் மனதில் சிறு குழிகளும் பெருங்குண்டுகளுமாய் இருக்கும்...   எதிரே வருபவர்களெல்லாம் அதில் தடுக்கி விழலாம். குழிகளையும் சாலையையும் பொறுத்து காயங்களும் ஏற்படலாம்.   மிகச் சிலரே அதில் தண்ணீர்…

சதுரங்கம்

நாட்கள் நத்தை போல் நகர்கிறது கணக்குச் சூத்திரம் போல வாழ்க்கை வெகு சிக்கலாக இருக்கிறது தாழப் பறந்து கொண்டுள்ளதால் உயரே பறப்பவர்களின் எச்சம் என் மீது விழுகிறது சிலந்தி வலையில் சிக்கிக் கொண்டதைப் போல வாழ்க்கை சங்கிலிகளால் என்னைப் பிணைத்துள்ளது நினைத்தபடி…
ஊரில் மழையாமே?!

ஊரில் மழையாமே?!

மற்றொரு மழை நாளில்... மடித்துக் கட்டிய லுங்கியும் மடக்குக் குடையுமாய் தெருவில் நடந்த தினங்கள்...   கச்சலில் கட்டிய புத்தக மூட்டையும்.. "அடை மழை காரணமாக பள்ளி இன்று விடுமுறை"யென- தேனாய் இனித்த கரும்பலகையும்...   சற்றே ஓய்ந்த மழை வரைந்த…

நிகழ்வுகள் மூன்று

பதிவு - சு.குணேஸ்வரன் 1.         சிறந்த நூல்களுக்கான பரிசளிப்பு விழா   யாழ் இலக்கிய வட்டம் - இலங்கை இலங்கைப் பேரவை நடாத்தும் 2008-2009 இல் வெளிவந்த நூல்களுக்கான பரிசளிப்பு விழா எதிர்வரும் 12.06.2011 ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.00 மணிக்கு நல்லை…

காட்சி மயக்கம்

பளிங்கு நீர் சிலை நாரை அழகு அலகு உற்று உற்றுப்பார்க்கிறது சிறு நொடியில் இரையாகப்போகிற செம்மீனொன்று. ரவி உதயன். raviuthayan@gmail.com
ஜெயகாந்தன் என்றொரு மனிதர்

ஜெயகாந்தன் என்றொரு மனிதர்

(ஆனந்த் முருகானந்தம் தொகுத்து, எனிஇந்தியன் பதிப்பகம் வெளியிட்ட “அமெரிக்காவில் ஜெயகாந்தன்” நூலில் வெளியான கட்டுரை. திண்ணை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.) 2000-ஆம் வருடத்தய ஜெயகாந்தனின் அமெரிக்க வருகைக்கு முன்னர் தன் நண்பரின் மகனாகவே என்னை அவர் அறிவார். தனக்கு மீசை…
இந்த வாரம் அப்படி: அல்லது ராமதேவின் போராட்டமும் காங்கிரஸின் சர்க்கசும்

இந்த வாரம் அப்படி: அல்லது ராமதேவின் போராட்டமும் காங்கிரஸின் சர்க்கசும்

முதுகுக்குப் பின்னே கத்தி திமுக என்ற கட்சியையே குழிதோண்டி புதைக்கும் வேலையில் காங்கிரஸ் ஈடுபட்டிருக்கிறது என்றுதான் தோன்றுகிறது. முதலில் ராஜா, பிறகு கனிமொழி, இப்போது மாறன் சகோதரர்கள். அடுத்து என்ன முக அழகிரியா ஸ்டாலினா என்றுதான் கேட்க வேண்டும். ஆனால், திமுகவினர்…
இற்றைத் திங்கள் – பாபா ராம்தேவ் , அன்னா ஹஸாரே போராட்டங்கள்

இற்றைத் திங்கள் – பாபா ராம்தேவ் , அன்னா ஹஸாரே போராட்டங்கள்

அன்னா ஹசாரே தொடங்கிய போராட்டம் இந்தியாவில் ஒரு ஆரோக்கியமான போராட்ட அரசியலைத் தொடங்கியுள்ளது. அந்தப் போராட்டத்தில் பாபா ராம்தேவ் கலந்து கொண்டதும், தொடர்ந்து நடத்துவதும் இந்தியாவின் பொது மக்கள் ஜன நாயகத்தில் பங்கு பெறுவதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது. பொது மக்கள்…
(68) – நினைவுகளின் சுவட்டில்

(68) – நினைவுகளின் சுவட்டில்

சுமார் ஆறு மாத காலம் இருக்கும். கிருஷ்ணமூர்த்தியின் குடும்பம் என் வீட்டில் தங்கியிருந்தது. குழந்தைகள் என்னிடம் மிகுந்த பாசத்துடன் ஒட்டிக்கொண்டிருந்தன. இப்போது அவர்கள் இல்லை. வீடு வெறிச்சோடிக்கிடந்தது. ஆனால் சுகமோ துக்கமோ இம்மாதிரியான மனச்சலனங்கள் அதிக நாட்கள் நீடிப்பதில்லை   .வீடு…