புதிதாய்ப் பிறத்தல்!

பாலர் பள்ளியிலிருந்து திரும்பி வந்தது முதல் மல்லி சோர்வாக இருந்தாள். சாப்பாடும் தயங்கித் தயங்கித்தான் இறங்கிற்று. பாதி முடிந்ததும் கொஞ்சம் “வேக்” என்று குமட்டினாள். “சரி, போதும் யாத்தி! விடு!” என்று சோறு ஊட்டிக்கொண்டிருந்த பணிப்பெண்ணைத் தடுத்தேன். எப்போதும் என்னிடம் கதையளப்பவள்…

பெயரிடாத நட்சத்திரங்கள்

பெயரிடாத நட்சத்திரங்கள்", "Mit dem Wind fliehen" ஆகிய இரு நூல்களினது அறிமுகமும் -தமிழ் சிங்கள மொழியில்- கலந்துரையாடலும் சுவிஸ் சூரிச் இல் இடம்பெற இருக்கிறது.

டிசம்பர் 11 பாரதி பிறந்த நாள் சிறுகதை: வாடாமல்லிகை

மாங்கொட்டைச் சாமிக்குப் பேச்சு வராது என்றுதான் ரொம்பப் பேருக்கு எண்ணம். ஆனால் அது சரியல்ல. சாமி ஆள் பார்த்து, அளந்துதான் பேசும். பெரும்பாலும் மவுனத்தையே வல்லமை மிக்க மொழியாகக் கருத்துத் தெரிவிக்கப் பயன்படுத்திக் கொள்ளும். பிறர் பேச்சுக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்…

பழமொழிகளில் தொழிற்சொற்கள்

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com ‘‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’’ என்பர் தொல்காப்பியர். தமிழில் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு பொருள் உண்டு. காலத்திற்கேற்ப சூழல், இடத்திற்கேற்ப அச்சொற்களுக்குப் பொருள் உண்டு. ஒரே சொல்…

நானும் ஜெயகாந்தனும்

‘ அவன் அந்த ஊருக்குள் நுழைந்த போது அந்த ஊரே நாற்றமடித்தது ‘ ஜெயகாந்தனின் இந்த முதல் வரிகள் கதை நாயகனைப் பற்றிய முழுமையான ஒரு உருவத்தை வாசகர்களின் மனதில் தோற்றுவித்துவிடும். அதுதான் ஜெ கேயின் மொழி ஆளுமை, கதை சொல்லும்…

கு.ப.ரா. சிறுகதைகள் – ஒரு பார்வை

முனைவர் சுபாசு சந்திரபோசு தொகுத்த கு.ப.ராஜகோபாலனின் 15 சிறுகதைகளைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படித்தவுடன் எனக்குத் தோன்றியது இவர் காலத்துக்கு ஏற்ற கதைகளை எழுதவில்லை. அக்காலத்தையும் தாண்டி எழுதி இருக்கிறார் என்பதே. புத்தகச் சந்தையில் புதுமைப்பித்தனின் பெண்ணியச் சிறுகதைகள் எனும் நூலை…

மலைபேச்சு – – செஞ்சி சொல்லும் கதை – 3

"அநேகமாக சுப்புபாட்டி சொன்ன சங்கதியாக இருக்கலாம். அவள்தான், கோவிந்தராஜ பெருமாளுக்கென தனியாக சன்னிதிக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும், சீரங்கத்திலிருந்து கல்தச்சர்களை அதன் பொருட்டு வந்திருப்பதாகவும் தெரிவித்தாள்." 4. நான்கு நாட்களுக்கு முன்பு திடீரென்று தில்லையில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை கொட்டியது.…

நினைவுகளின் சுவட்டில் – (82)

ஹிராகுட்டில் எனக்குப் பரிச்சயமான உலகம், அந்த அணைக்கட்டின் தாற்காலிக முகாமில் கிடைத்திருக்கக் கூடிய பரிச்சயங்கள் தான் என்று சொல்ல முடியாது. ஆனால் நேரில் எதிர்ப்படும் விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற முனைப்பு இருந்தால் அந்த முனைப்பு ஏற்படுத்தும் பரிச்சயங்கள் சாதாரணமாக…

விசித்திரம்

மார்கழி பனிப் புயலில் மெழுகுவர்த்திகள் அணைந்து போகின்றன… எங்கும் குளிர் எதிலும் இருள் அங்கு – மின்னல் கீறுகள்தான் மாயமான வெளிச்சங்கள்.. சுவாச மூச்சுக்கள் தான் சூடான போர்வைகள்.. வீதி விளக்குகளும் விகடமாமக் கோபித்துக் கொள்கின்றன.. மின் விசிறிகளும் சொல்லாமலே அணைந்து…

எங்கே போக விருப்பம்?

அமெரிக்காவில் ஒரு முக்கிய நகரம். முச்சந்தியில் பெருங்கூட்டம் கூடியிருந்தது. மேடையில் ஒரு பேச்சாளர் முழங்கிக் கொண்டிருந்தார். “சீமான்களே! சீமாட்டிகளே! எனக்கு நீங்கள் வாக்களிப்பீர்களேயானால், அது உங்களை நீங்களே பெருமைப்படுத்திக் கொண்டதாகும். நான் சார்ந்திருக்கிற கட்சி அத்தனை செல்வாக்கு வாய்ந்ததாகும்! எங்கள் கட்சி…