Posted inகவிதைகள்
குளம்
பற்களான படிக்கட்டுக்களோடு பாசம் புதையக் காத்திருந்தது குளம். தட்டுச் சுற்றான வேட்டியுடன் தலை குப்புறப் பார்த்தபடி இருந்தான் அவன். விரால் மீன்களாய் விழுந்து துள்ளியபடி இருந்தார்கள் சிறுவர்கள். இரவுக்குள் ஒளிய நினைத்து கருக்கத் துவங்கியது தண்ணீர். மொழியற்றவனைப் பார்த்து நாவசைத்துப் பாடத்துவங்கியது…