அந்த இடைவெளி…

இரைதேடச் செல்லும் பறவை இரையாகிப்போகிறது எங்கோ.. இறைதேடிச் செல்பவன் இறையாகிவிடுகிறான் இறந்து.. தொடங்கிடும் பயணமெல்லாம் தொடுவதில்லை இலக்கை.. தெடக்கத்திற்கும் முடிவுக்குமுள்ள இடைவெளிதான் இயற்கையோ- இறையோ...! -செண்பக ஜெகதீசன்...

ஜீ வி த ம்

“தமிழு....தமிழு...” – பொழுது விடிந்தும் விடியாத வேளையில் படுக்கையில் இருந்தமேனிக்கே குரல் கொடுத்தான் மாரிச்சாமி. வாசலில் ‘சளப்...சளப்’ – எனத் தண்ணீர் தெளிக்கும் சத்தம். “ஏண்டா அதுக்குள்ளாறயும் தமிழு...தமிழுங்குறே...? ஒந்தங்கச்சி விடியங்காட்டி எப்டி வந்து உம்முன்னாடி நிக்கும்? சூரியன் உதிச்சு வெயிலு…

ஜயமுண்டு பயமில்லை

காற்றில் மிதந்து வருகிற மாதிரி பரவச நிலையில் வந்துகொண்டிருந்த கவிஞரை அவர்கள் எதிர்கொண்டனர். விடியிருளில் நிழலுருவாய்த்தான் அவரது வடிவம் புலப்பட்டது. ஆனால் அவரது நடை, உடை, பாவனைகள் வருவது அவர்களுடைய கவிஞர்தான் என்பத்தை வெகு எளிதாய்ப் புலப்படுத்திவிட்டது கவிஞர் அருகில் வந்த…

கைப்பேசி பேசினால்

”கவியன்பன்” கலாம் நான் செய்த புரட்சிகள்: தத்திச் சென்ற தந்தியை வென்றேன் குறுஞ்செய்தியால் குவலயம் ஆள்கின்றேன் ஆறாம் விரலாய் ஆட்கொண்டே ஆட்டுவிக்கின்றேன் கைக்குள் அடக்கமாய் ஹைக்கூ கவிதையாய் “நச்”சென்று பேச வைத்தேன் ஏபிசிடி தெரியாமலே ஏடேதும் படிக்காமலே மிஸ்டு கால் மெஸேஜ்…

பறவைகளின் தீபாவளி

குமரி எஸ். நீலகண்டன் தீபாவளிக் கோலாகலத்தில் புகை மூட்டமாய் வானம்... ஏவியவர்களின் உற்சாகங்கள் வானத்தில் ஒளிப் பொதிகளாய் வானத்தில் சிதறின... நிலத்திலிருந்து உருவான மின்னலும் இடியும் மேகத்தில் போய் விழுந்தன... நகரத்தின் ஒற்றை மரங்களில் கூடு கட்டியப் பறவைகள் பூகம்பமென்று கூட்டினை…

இதுவும் அதுவும் உதுவும் – 2

வேற்றுமொழிப் படைப்புகளுக்கு அறிமுகமும் விமர்சனமும் எழுதுவது எளிது. யாரையும் புருவத்தை உயர்த்த வைக்காமல், ‘This rambling novel by a defrocked gay French black priest about the intimacy of a bisexual revolutionary with his wife’s…

இரவில் நான் உன் குதிரை. சில தேசங்களின் சில கதைகள். நூல் விமர்சனம்

என்னை என்றும் ஆச்சர்யப்படவைப்பது மொழிபெயர்ப்பு நூல்கள். நாம் ஒன்றை எழுதி விடலாம்., கொஞ்சம் வாசிப்பு மற்றும் அனுபவ சேகரிப்பு போதும். ஆனால் மொழிபெயர்ப்பில் அந்த மொழி சிதைவுறாமல்., சொல்லவந்த கருத்துக்கள் பிழைபடாமல் சொல்வது கடினம். ஒரு மொழிபெயர்ப்பாளன் வாசகர்க்கும், அந்த நூலை…

கூடங்குளம்

வெளி நாட்டான் சமாச்சாரம் அநாச்சார‌ம் என்று உள் நாட்டு மாட்டு வண்டியையும் வில் அம்பு ஈட்டியையும் ந‌ம்பிக்கிட‌ந்தோம். மின்சார‌ம் என்றால் பேய் பிசாசு என்று ஓடி ஒளிந்து கிட‌ந்தோம். த‌ண்ணீரை குட‌ம் குட‌மாய் கொட்டி குட‌முழுக்கு செய்து புரியாத‌ இரைச்ச‌ல்க‌ளில் புல்ல‌ரித்துக்கிட‌ந்தோம்.…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் ! (கவிதை – 50 பாகம் -2)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "முதியோர் போதனையை நீ தேடிக் கேள். அவரது கண்கள் பல்லாண்டுகளின் முகத்தைக் கூர்ந்து நோக்கி வந்தவை. அவரது செவிகள் வாழ்க்கையின் குரல்களைக் கேட்டிருப்பவை. அவரது அறிவுரைகளை நீ…

அவர்களில் நான்

சண்டை நாட்களில் எதிரியும் காதல் நாட்களில் சகியும் தியாக நாட்களில் தாயும் ( கல்யாணத்திற்கு முன்) கேளிக்கை நிறைந்தவற்றில் நண்பர்களும் என அந்தந்த நாட்களில் நிறைந்தவர்களை நாட்குறிப்புகள் நிரப்பியிருந்தன. நான் நிரம்பிய நாட்கள் வெறும் வெற்றுத்தாள்தானோ என அயர்ந்தபோது அடுத்தவர் அடர்ந்தவற்றில்…