ஜென் ஒரு புரிதல் -17

"நெஞ்சுக்குள்ளே இருக்குது உப்புக்கண்டம்; நெருப்புக் கண்ட இடத்திலே சுட்டுத் தின்னு". இது தென் தமிழ் நாட்டில் உள்ள சொலவடைகளில் ஒன்று. இங்கே உப்புக் கண்டம் என்பது உணவுப் பொருள் அல்ல. ஒரு படிமம். "ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம் உள்ளே இருக்குமாம் ஈரும்…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மீட்டெழுச்சி நாள் (The Resurrection Day)) (கவிதை -51 பாகம் -4)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா மரணம் வந்திடும் பொழுது விடிவது போல் ! புன்முறுவ லுடன் நீ எழுந்த ருள்வாய் உனது துயராய்க் கருதி ! கனவு இதுவாய் இருக்க வேறு காரணம்…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மீட்டெழுச்சி நாள் (The Resurrection Day)) (கவிதை -51 பாகம் -3)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா மீட்டெழுச்சி நாளில் உனது மேனி உனக் கெதிராய்ச் சாட்சி சொல்லும் ! "களவாடி னேன்", என்று உனது கரங்கள் கூறும் ! "இழிவு செய்தேன்" என்று உன்வாய்…
“மூவர் உலா”  (நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள்)

“மூவர் உலா” (நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள்)

நேஷ‌ன‌ல் ஜேக்ர‌ஃபி யின் 12 அக்டோப‌ர் 2011 இத‌ழில் ஜே.ரிச்சார்டு காட்ட் த‌ன் க‌ட்டுரையில் 2011ன் இய‌ற்பிய‌லுக்கு அளிக்க‌ப்ப‌ட்ட‌ நோப‌ல் ப‌ரிசு பெற்ற இய‌ற்பிய‌ல் சார‌ம் ப‌ற்றி குறிப்பிடுகிறார். இப்ப‌ரிசு ஆட‌ம்ரீஸ் ,ப்ரிய‌ன் ஸ்மிட் ம‌ற்றும் சால் பெர்ல்முட்டர் ஆகிய விண்வெளி…

துளித்துளி

சிலந்தி வலையில் சிதறித்தெளித்த மழைத்துளி சிறைப்பட்டுக்கிடந்த சிலந்தியின் கால்களையும் நனைத்திருந்தது ஈரம். குடித்துவிட்டுக்கீழே வைத்த உள்ளிருப்பவை வெளித்தெரியும் கண்ணாடிக்குவளையில் அடியிலிருந்து மேலே வந்த மீதமுள்ள நீர் சிறு பாசிமணிகள் போல் அதன் சுவரில் ஒட்டிக்கொண்டிருந்தது கண்ணாடிக்குள்ளும் ஈரம். அடித்துப்பெய்த மழையின் சாரல்கள்…
பிரான்சு    தமிழ் கண்ணதாசன்  கழகம் கொண்டாடிய காந்தி விழா

பிரான்சு தமிழ் கண்ணதாசன் கழகம் கொண்டாடிய காந்தி விழா

கண்ணதாசன் கழகம்? கண்ணதாசனுக்குக் கழகமா? எங்கே தமிழகத்திலா? சிங்கப்பூர், மலேசியாவிலா? அமெரிக்கா? ஐரோப்பா ? ஆம், ஐரோப்பாவில், பிரான்சு நாட்டில்தான். பரி நகருக்கு ( Paris - பிரஞ்சு ஒலிப்பு 'பரி' ) 50 கி .மீ தொலைவில் உள்ள 'மோ'…

நிர்மால்ய‌ம்

அந்த நேற்றைய ப‌வ‌ள‌ம‌ல்லிப்பூக்க‌ள் வீட்டு வாசல் த‌ரையில் சிவ‌ப்புக்கால்க‌ள் கொண்டு ந‌ட்ச‌த்திர‌க்கூட்ட‌ங்க‌ளாய் ப‌டுத்துக்கிட‌க்கின்ற‌ன‌. எந்த‌ குருவாயூர‌ப்ப‌னையாவ‌து நேற்று பூராவும் அப்பிக்கிட‌ந்த‌ பின் க‌ளைத்துக் கால் நீட்டிக்கிட‌க்கின்ற‌ன‌. வீட்டுக்குள்ளிருந்து அந்த‌ ப‌வ‌ள‌ம‌ல்லி ம‌ர‌ம் த‌ன் கிளையை கார்ப்ப‌ரேஷ‌னுக்கு அறிவிக்காம‌ல் விதி மீறி வெளியே…

மழை

புலிக்குட்டிகளாய் உருண்டு புரள்கிறது மாநகரச் சாலைப்பள்ளத்தில் மழைநீர். குளித்த எருமைகளாய் அடர்கருப்பில் கார்பார்க்கிங்கில் கட்டிக்கிடக்கின்றன வண்டிகள். சிறிதாய்ப் பெய்த மழையில் மிதக்கும் நகரம் ஆகிறது மாநகரம். கார் வைத்திருப்பவர்களைக் கப்பல் வைத்திருப்பவர்களாகவும்., வண்டி வைத்திருப்பவர்களை ஓடக்காரர்களாகவும் ஆக்குகிறது மழை. அடித்து அடித்து…

தமிழ் இலக்கியங்களில் மகளிர் விளையாட்டுக்கள்

முனைவர்சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com விளையாட்டு என்பது வெளித்தூண்டல்களின்றி மகிழ்ச்சியூட்டும் செயல்களில் இயற்கையாக ஈடுபடுவதாகும். இவ்விளையாட்டை மனகிழ்ச்சி ஊட்டும் செயல் என்பர். அவ்விளையாட்டில் பொழுதுபோக்கு மட்டுமின்றி உடல், உள நலச் செயல்களும் இடம்பெற்றுள்ளன. மேலும்…

எது உயர்ந்தது?

அது ஒரு நூறு அடுக்கு மாடிக் கட்டிடம். அந்த நகரத்தில் மட்டுமல்லாமல், அந்த நாட்டிலேயே அது தான் உயர்ந்த கட்டிடம். கட்டிடக் கலைக்கே பெருமையும் புகழும் தேடித் தரத்தக்க அவ்வளவு அழகான கட்டிடம்! வந்தவரைப் பிரமிக்க வைக்கும் வரவேற்பு அறை! வழவழக்கும்…