திருப்பூர் படைப்பாளிகளின் ”பருத்திநகரம் ” நூல் வெளியீடு

This entry is part 21 of 42 in the series 29 ஜனவரி 2012

திருப்பூர் படைப்பாளிகளின் இலக்கியத் தொகுப்பான “பருத்திநகரம் ” செவ்வாயன்று திருப்பூர் காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில் வெளியிடப்பட்டது.

முத்தமிழ்ச்சங்கத்தலைவர் கேபிகே செல்வராஜ் தலைமை வகித்தார். . திருப்பூர் மாநகர துணை மேயர் குணசேகரன் “பருத்திநகரம் ” நூலை வெளியிட, சென்னை பத்திரிக்கையாளர் அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஸ்ணன்., சந்திரகாந்த் தேசய், எக்ஸ்லான் ராமசாமி, திருமகள் குமரேசன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். வழக்கறிஞர் சி.ரவி நூல் குறித்த அறிமுகம் உரை நிகழ்த்தினார்.. முன்னதாக திருப்பூரிலிருந்து வெளிவரும்
“ கனவு” இலக்கிய இதழுக்கு 25 ஆண்டுகள் ஆவதை ஒட்டி சுப்ரபாரதிமணியனுக்கு பாராட்டு நடைபெற்றது. பேராசிரியை புவனேசுவரி கனவின் செயப்பாடுகள் பற்றிப் பேசினார். முன்னதாக சுப்ரபாரதிமணியன் இரண்டு புதிய நூல்கள் “ நீர்த்துளி’ நாவல், வேட்டை “ சிறுகதைத்தொகுப்பு “ ( இரண்டும் வெளியீடு: உயிர்மைப்பதிப்பகம், சென்னை ) ஆகியவை வெளியிடப்பட்டன.வடஅமெரிக்க தமிழ்சங்கப்பேரவைதலைவர் முனைவர் பழனி சுந்தரம், ஒருங்கிணைப்பாளர் பாலகன் ஆறுமுகசாமி ஆகியோரும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். மு. வரதராசனார் நூற்றாண்டுக்கருத்தரங்கில் மு.வ.வின் ” இலட்சியவாதம்’ என்ற தலைப்பில் திருப்பூர் கிருஸ்ணனும், மு.வ. படைப்புகள் பற்றி சிவதாசன், நீறணிப்பவளக்குன்றன், சுப்ரபாரதிமணியன் ஆகியோரும் உரையாற்றினர். “பருத்தி நகரம் “ தொகுப்பில் சுப்ரபாரதிமணியன், சிவதாசன்.,சாமக்கோடாங்கி ரவி, மகுடேஸ்வரன், குழந்தைவேலு, தாண்டவக்கோன், உட்பட 30 படைப்பாளிகளின் படைப்புகள் இடம்பெற்றுள்ளன.. சபரி பரசுராம், சின்னராமலிங்கம், லிங்க் சவுகத் அலி, மக்கள் மாமன்றம் சுப்ரமணீயன் ,கம்பன் கழகம் செயலாளர் சோ.ராமகிருஸ்ணன் உட்படபலர் முன்னணி வகித்தனர். இறுதியாக ரவிக்குமாரின் பசி, ஜீரோ கி.மீ, தாண்டவக்கோனின் அமளி துமளி ஆகிய மூன்று குறும்படங்கள் வெளியிடப்பட்டன. “பருத்தி நகரம் “பிரதிகள் கனவு முகவரியில் கிடைக்கும்.பக்கங்கள் பக்கங்கள் 170 ரூ70 ( கனவு, 8/2635 பாண்டியன் நக்ர், திருப்பூர் 641602)

பருத்திநகரம் – திருப்பூர் படைப்பளிகளின் தொகுப்பு 2012 : பங்கு பெற்றப் படைப்பாளிகள்:

சிவதாசன்/ சுப்ரபரதிமணியன்/ சாமக்கோடங்கி ரவி/

மகுடேஸ்வரன்/ / குழந்தைவேலு/ இரத்தினமூர்த்தி/

தாண்டவக்கோன்/ சுகன்யா/ சுபமுகி/ வெங்குட்டுவன்/குணசேகர்,

கிரிஜா சுப்ரமணியம்/ / காட்டான் மூர்த்தி/ டாக்டர் செலவராஜ்/ டாக்டர் முத்துசாமி/நாதன்ரகுநாதன்/ சி.சுப்ரமணியம்/ முத்துபாரதி/ து.ஜோ. பிரபாகர்/

விலை ரூ 70/

பிரதிகளுக்கு : கனவு, 8.2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602.

Series Navigationபாரதத்தில் பேரழிவுப் போராயுதம் படைத்த விஞ்ஞானி ராஜா ராமண்ணாஜே.கிருஷ்ணமூர்த்தி-மனக்கட்டுப்பாடு தியானத்துக்கு உதவாது – பகுதி 1
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *