எனது எழுத்துக்களை கொலை செய்வதற்குஆயுதங்களோடு எப்போதும் துரத்தி வருகின்றனர்.
அல்லது தற்கொலை செய்வதற்கான எல்லா சாத்தியங்களையும் திறந்து வைக்கின்றனர்.எலிப்பொறி வைத்து பிடித்துவிட்டால் எழுத்துக்கள் எலிகளாய் செத்துக் கிடக்கும் என நம்புகின்றனர்.
தீவிர எழுத்தின் இறுதி லட்சியமென்பதே சினிமாவுக்கு கதை பாட்டு எழுதவும்,பிரபல இதழ்களில் பத்தி எழுதவும், வெளிநாடுகளுக்கு இன்பச்சுற்றுலா சென்று அரட்டை செய்யவும், சொகுசாக உட்கார்ந்து பிளாக்கிலும்,பேஸ்புக்கில் எழுதுவதும் என்பதாகிவிட்ட சூழலில் எழுத்து சந்தர்ப்பவசமாக சிலரது வாழ்வின் இருப்பையே தகர்த்திருக்கிறது.
பெரும்பானமை, சிறுபான்மை என்றெல்லாம் அடிப்படைவாதத்திற்கு முகமில்லை என்பதை அனுபவபூர்மாக உணர்ந்திருக்கிறேன். ஜனநாயகவாதிகளும் தமக்கேயான முகமூடிகளோடேயே எப்போதாவது அதிகாரத்திற்கு எதிரானவர்களாக தங்களையும் காட்டிக் கொள்கிறார்கள்.கடந்த பத்தாண்டுக்கு முன்வந்த மைலாஞ்சி கவிதைநூலுக்கு பிறகு எழுதுவதற்கு உருவான மனத்தடை கடந்த நான்காண்டுகாலமாக மிகவும் அபாய நிலைக்கு போயுள்ளது.கவிதையைத்துறந்துவிட்டு ஆய்வுலகத்திற்குள் நுழைய நேர்ந்தது.அங்கும் அபுஜஹில்களும் நம்ரூதுகளும் கொலைக்கார ஆயுதங்களோடு எழுத்துக் குழந்தைகளை கொன்று தீர்த்தனர்.
வர்க்கப் போரென்றோ,இனப் போரென்றோ,தலித்தியப் போரென்றோ இதைச் சொல்ல முடியாததுதான். இந்த ஒடுக்குமுறையை வேறெந்த சொற்களால் நீங்கள் அழைக்கப் போகிறீர்கள். என்னிடம் இந்த கவிதைகளைத் தவிர வேறெந்த ஆயுதங்களும் இல்லை.இந்தக் கவிதைகளில் என் பிள்ளைகளின் கண்ணீரும் கலந்திருக்கிறது.
ஒரு நள்ளிரவின் மெளனத்தில்
ஹெச்.ஜி.ரசூல்,
21/105 ஞானியார்வீதி,தக்கலை-629175 செல்லிடை பேசி: 9443172681
நூல் விவரங்கள்:
கவிதை நூல்: உம்மா:கருவண்டாய் பறந்து போகிறாள்
ஆசிரியர்: ஹெச்.ஜி.ரசூல் பக்கங்கள்:142 விலை: ரூ 90/ வெளியீடு கருப்புபிரதிகள்பி55 பப்பு மஸ்தான் தர்காலாயிட்ஸ் சாலைசென்னை – 600005பேச: 9444272500மின்னஞ்சல்:karuppupradhigal@gmail.com
- பஞ்சதந்திரம் தொடர் 29- முட்டாள் நண்பன்
- ஆரோக்கியமேரி என்றழைக்கப்பட்ட மேரி ஃபிலோமினா
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 5) எழில் இனப் பெருக்கம்
- ஜே.கிருஷ்ணமூர்த்தி-மனக்கட்டுப்பாடு தியானத்துக்கு உதவாது – பகுதி 2
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 12
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) தெறித்த முத்துக்கள் ! (கவிதை -59)
- குறி மூன்றாவது இதழ் – ஒரு பார்வை
- சிற்றிதழ் அறிமுகம் – ‘ நீலநிலா ‘
- வளவ.துரையனின் நேர்காணல்
- சுஜாதாவின் ” சிவந்த கதைகள்” நாவல் விமர்சனம்
- ஜென் ஒரு புரிதல்- பகுதி 30
- பழமொழிகளில் நிலையாமை
- சுகனின் 297வது இதழ் – ஒரு பார்வை
- சுதந்திரம் … கம்பிகளுக்குப் பின்னால்
- நினைவுகளின் சுவட்டில் – (84)
- வருத்தப்பட்டு பாரம் சுமப்போரே…
- கவிஞர் தேவதச்சனுக்கு விளக்கு விருது
- புகுஷிமா விபத்துக்குப் பிறகு அணுமின் நிலையங்களின் எதிர்கால இயக்கம் பற்றி உலக நாடுகளின் தீர்மானங்கள் -1
- நூல் மதிப்புரை – செல்லம்மாவின் அடிச்சுவட்டில்…
- இந்திய பிரெஞ்சு பண்பாட்டு உறவுளை மேம்படுத்தும் வகையில் சந்திப்பு
- முன்னணியின் பின்னணிகள் – 25
- சுப்ரமணிய சுவாமியும் – சுப்ரீம் கோர்ட்டும்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 9
- காமம்
- கவிதை கொண்டு வரும் நண்பன்
- சமகால இலக்கியங்களில் முஸ்லிம்களின் வாழ்வியல் பதிவுகள் – கருத்தரங்கம்
- உம்மா கருவண்டாய் பறந்து போகிறாள் –முன்னுரையாக சில வார்த்தைகள்
- பேஸ்புக் பயன்பாடுகள் – 1
- தற்கொலை
- கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் 8
- மும்பை தமிழ் அமைப்புகள் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு பாராட்டு விழா