உயிர்த்தலைப் பாடுவேன்!

கிளைகளுக்கு நீரூற்றிக்கொண்டே வேர்களை வெட்டியெறியும் ஒரு தோட்டக்காரன்! மனச் சருகு மிதிபடும் சத்தம் இரும்புச் சப்பாத்துக்களின் செவிகளை எட்டவேயில்லை! கெல்லிக் கெல்லி – என் கணுக்களைச் சிதைக்கிறாய் - மீள உயிர்த்தலைத் தவிர்த்திடும் நஞ்சினைப் புதைக்கிறாய்! கொத்திக் குதறும் - உன்…

மலேசியத் தமிழ் இலக்கியத்தில் பெண்ணிலக்கியவாதிகள்: கருத்தரங்கம்.

மலேசியத் தமிழ் இலக்கியத்தில் பெண்ணிலக்கியவாதிகள்: கருத்தரங்கம். (சிதனா, கோலாலம்பூர்) மலேசியாவில், ஆண்களின் இலக்கியப் படைப்புகளுக்கு ஈடாக, நவீனம், குறு நாடகம், புதினம், கட்டுரை, கவிதை என மலையகத்துப் பெண் படைப்பாளர்களும் தங்கள் பங்கினை நிறைவாகவே வழங்கி வந்துள்ளனர். புத்தாக்க சிந்தனைகளும் எழுத்தாற்றல்…

விஸ்வரூபம் – அத்தியாயம் எழுபத்தெட்டு

1916 ஜனவரி 30 ராட்சச வருஷம் தை 17 ஞாயிற்றுக்கிழமை வைத்தாஸே, ரெண்டு வாரம் இடைவெளி விட்டு இதை உனக்கு எழுதறேன். எழுதாட்ட என்ன? சதா உன் நினைப்பு தான். பிள்ளைகள் எல்லாம் வளர்ந்து, நல்ல நல்ல கலாசாலைகளிலே படிச்சு புத்தியோடு…
விளிம்பு நிலை மக்களின்  உளவியல்:  நீர்த்துளி: சுப்ரபாரதிமணியனின் புதிய நாவல்

விளிம்பு நிலை மக்களின் உளவியல்: நீர்த்துளி: சுப்ரபாரதிமணியனின் புதிய நாவல்

உலகமயமாக்கல் கிராம மக்களை நகரங்களுக்குத் துரத்துகிறது. அவர்கள் நகரங்களில் அகதிகளாகத் திரிகிறவர்களாக இருக்கிறார்கள். ஆறுதலாய் சக தொழிலாளர்களின் நட்பும் ஆறுதல் வார்த்தைகளும் தொடர்ந்து இயங்க வைக்கிறது. வருமானம் வேண்டி வரும் “ ஒற்றைப் பெற்றோர்கள்” அடையும் மன்ச் சிதைவும், பாலியல் உளவியல்…

“தா க ம்”

வருஷங்கூடி தீபாவளிக்கென்று மட்டும் வெறும் நூறு ரூபாய்தான் நான் அவனுக்குக் கொடுத்திருக்கிறேன். அதற்கு மேல் என்னவோ எனக்கும் கை வந்ததில்லை. அவனும் மேற்கொண்டு கேட்டதில்லை. ரொம்பச் சந்தோசம் சார்...இவ்வளவுதான் அவன் வார்த்தை. துளி மனக்குறை இருக்காது அதில். இத்தனைக்கும் அவனுக்கு ஒரு…

இஸ்லாமிய அரசியலில் மாற்றுவாசிப்பு

சமகால இஸ்லாமிய அரசியல் குறித்த விவாதத்தில் கீழ்கண்டவாறு ஒரு குறிப்பை ந.முத்துமோகன் எழுதிச் செல்கிறார். ""பல நபிகளை, பல சமூகங்களை, பல கலாச்சாரங்களை, பல வேதங்களை இஸ்லாம் கோட்பாட்டு ரீதியாக ஒத்துக் கொள்கிறது. ஆனால் வளர்ந்து வரும் இஸ்லாமிய தீவிரவாதம் ஏகத்துவத்தை…

சமகால இலக்கியங்களில் முஸ்லிம்களின் வாழ்வியல் பிர்த்வ்ஸ் ராஜகுமாரன் – மீரான் மைதீன் பதிவுகள்

சமகால இலக்கியங்களில் முஸ்லிம்களின் வாழ்வியல் பிர்த்வ்ஸ் ராஜகுமாரன் – மீரான் மைதீன் பதிவுகள் ஹெச்.ஜி.ரசூல் சமகால இலக்கியங்களில் முஸ்லிம்களின் வாழ்வியல் குறித்த இருநாள் கருத்தரங்கம்படைப்பாளிகளின் நாவல்கள்கவிதைகள் கதையுலகம் என ஒரு விரிவான பரப்பை தமிழ் வாசகப் பரப்புக்கு அறிமுகம் செய்தது. இது…

அதையும் தாண்டிப் புனிதமானது…

மெல்லிய குளிர் பரவிய அறையில், டிக்... டிக்... டிக்... கடிகார முள் நகரும் சப்தம் இரவின் அமைதியை கிழித்து பயமுறுத்திக் கொண்டிருந்தது. என்றும் போல விமலாவிற்கு தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்துத் தூக்கத்திடம் தோற்றுப் போனவளாக... வயதாக... வயதாக தூக்கம்…

மீண்ட சொர்க்கம்

இத்தனை தூரம் கவிதையற்று வந்தவன் மனதில் தீக்குச்சி உரசிய சிரிப்பில் நீ விதைத்த வார்த்தைகள் வனவாச காலத்து முடிவைச் சொன்னது. கழைக்கூத்தாடியின் கவனமாய்ப் பின்னிய வார்த்தைகள் கொண்டு எழுதாமலேயே போன அந்தப் பத்தாண்டுகளின் சூன்யம் ஞாபகத் துளைகளில் வழிகிறது. காலத்தின் மிரட்டல்…

ஆலமும் போதிக்கும்….!

போகும் வழியில் புரிந்து போனது.. சமுதாயம்..ஜனநாயகம்.. சமத்துவம்..கற்றுத்தந்தது.. வழியிலொரு ஆலமரம்..! சுமை தாங்கும் நிம்மதியில் தான்.. எத்தனை விழுதுத்தூண்கள்..! மரத்தின் விழுதுகளா...? அத்தனையும் மதவிழுதுகள்... தாங்குகிறது இந்தியா..! நடுப்பரப்பை பிடிக்கவென்றே... பறவையாய் விரித்தது கிளைகள்.. அத்தனையும் சாதிக்கிளைகள்... விழுதுகளை தாங்குமா....கிளைகள்..? மரத்தின்…