செல்லாயியின் அரசாங்க ஆணை

பிறந்ததிலிருந்தும் பிறந்தகம் துறந்த பின்னாலும் செல்லாயியின் பொழுதுகள் எப்போதும் ஆடுகளோடுதான். கோடையும் மழையும் ஆடுகளுக்கு உகந்ததில்லை எனினும் பருவத்தின் பின்சுழற்சியில் கருகிப்போயிருக்கும் மரங்களின் இலைகள் ஆடுகளுக்கெனத் தழைக்க, " கொஞ்சம் பொறுங்கடா சிவராத்திரி வரைக்கும் " எனப் பனிபோகவே அன்று விரதமிருப்பாள்.…
மாதா+ பிதா +குரு < கொலைவெறி

மாதா+ பிதா +குரு < கொலைவெறி

ஒரு 15 வயது நிரம்பாத மாணவன் தனக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியரைக் கொலை செய்த சம்பவம் ஊடகங்களுக்கு வேண்டுமானால் திடுக்கிடும் செய்தியாக இருக்கலாம். ஆனால் சமூக ஆர்வலர்களுக்கு இந்தச் செய்தி சமூக அவலங்களின் எதிரொலி. ஓர் அபாயச்சங்கு. இந்தச் செய்தியின் இரண்டு…

விஜய் நந்தாவின் ‘ விளையாட வா ‘

சித்தார்த் நடித்து, இந்தியில் ஸ்ட்ரைக்கர் என்றொரு படம் வந்தது. சுமாரான வெற்றி என்று சொன்னார்கள். அதேபோல் இதுவும், தெருவில் காரம்போர்ட் விளையாடுபவர் களைப் பற்றிய படம். சீனிவாசபுரத்தில், குடிசை மாற்று வாரிய வீட்டில் வசிக்கும், கம்பி மேஸ்திரி பொண்வண்ணன், அவரது நண்பர்கள்…

ராஜ்கிருஷ்ணாவின் ‘ ஒரு நடிகையின் வாக்குமூலம் ‘

டர்ட்டி பிக்சர் வித்யா பாலன் அளவிற்கு பெயர் வாங்கித் தருமா என்று தெரியாது, ஆனால் சோனியா அகர்வாலுக்கு இது செகண்ட் இன்னிங்ஸைத் துவக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு நடிகையின் டைரியைக் கொண்டு கதையை நகர்த்தும்போது, கொஞ்சம் ஷகிலாத் தனமான காட்சிகள் வைத்தால்…
பாத்தென்றல் முருகடியான் இயற்றிய திண்ணப்பர் பிள்ளைத் தமிழ் நூல் வெளியீடு

பாத்தென்றல் முருகடியான் இயற்றிய திண்ணப்பர் பிள்ளைத் தமிழ் நூல் வெளியீடு

வணக்கம் பாத்தென்றல் முருகடியான் இயற்றிய திண்ணப்பர் பிள்ளைத் தமிழ் நூல் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் ஏற்பாட்டில் வெளியீடு காண்கிறது. 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழுக்கு அவர்கள் செய்த தொண்டினை நாம் அனைவரும் மதிக்கும் வகையில் ஒன்று கூடுவோம். இணைப்பில் அழைப்பிதழ்…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) தெறித்த முத்துக்கள் ! (கவிதை -60)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++ சுதந்திர மனிதன் +++++++++++++ செல்வம் சேமித்துக் கணக்குக் கூட்டாத - செல்வந்த னாய்க் கொழுத்துத் தோன்றாத - செல்வத்தை இழக்க நெஞ்சம் அஞ்சாத - சிறிதும்…

முன்னணியின் பின்னணிகள் – 26

சாமர்செட் மாம் தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் >>> அடுத்த ஆறு மாதத்தில், கோப்பையில் வாழ்க்கை சார்ந்த பரபரப்புகள் அமுங்கின. பை தெயர் ஃப்ரூட்ஸ், (சாதனைகளினால்) என ஏற்கனவே பதிப்பித்த நாவலைத் திரும்ப திரிஃபீல்ட் ஆரம்பித்திருந்தார். எனக்கு நாலாவது வருடம். வார்டில் இருக்கும்…

மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 13

சித்ராங்கிக்கு தீட்சதர்மேல் மரியாதை இருக்கின்றது. அவர் வரும்போதெல்லாம பள்ளியறை கதவைத் திறக்கக் கடமைப்பட்டவள். மற்றவர்களுக்கு வேண்டுமானால் தில்லைநாதர் படியளக்கலாம். மீனாம்பாளுக்கும் சித்ராங்கிக்கும் அவர்தான் பரமன் 14. மனதில் கவலை இரையை அண்மித்த சிலந்திபோல உட்கார்ந்திருந்தது. கைக்கெட்டிய தூரத்தில் எண்ணையின்றி பொசுங்கும் திரியின்…

அதோ ஒரு புயல் மையம்

அதோ ஒரு புயல் மையம் கருக்கொண்டு விட்டது. தினசரி காலண்டர் தாள்க‌ளின் இந்த‌ இலையுதிர் கால‌த்தின் ந‌டுவே பெப்ர‌வ‌ரி ப‌தினாலாம் தேதி..... பொன் வ‌ச‌ந்த‌ம். ம‌ல‌ர் ம‌ழை. தேன் மின்னல். குமுழிக்கோட்ட‌ம். நுரைவ‌ன‌ங்க‌ள். ப‌னிச்சொற்க‌ள். வ‌ண்ணாத்திப்பூச்சி சிற‌குக‌ளுக்குள் வாழ்க்கைப்பாட‌ங்க‌ள். முள் மீது…

மெஹந்தி

பட்டி விக்கிரமாத்தித்தன்களிடம் போய் இந்த வரம் வாங்கி வந்தேன். "கூடு விட்டு கூடு பாய்ந்து" மெஹந்தி பிழியும் இந்த கூம்புக்குள் கண் கூம்பி தவம் இருந்தேன். இந்த "பியூட்டி பார்லருக்குள்" அவள் இன்று இதே நேரம் வருவாள் என்று எனக்குத்தெரியும். அப்படித்தான்…