குறி மூன்றாவது இதழ் – ஒரு பார்வை

இரு மாத இதழான குறி பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அடுத்த இதழ் பிராம்ப்ட்டாக வந்து விட்டது. பச்சை நிறத்தில் சிகப்பு எழுத்துக்களுடன் அட்டையே அசத்துகிறது. தனியாக நீல பார்டரில் படைப்பாளிகளின் பெயர்கள். சபாஷ். கலைந்த கூந்தலுடன் கூடிய பெண்ணின் கோட்டோவியம் (…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) தெறித்த முத்துக்கள் ! (கவிதை -59)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++++++++ பிறர் பின்னால் சென்று +++++++++++++++++++ கூக்குரல் மெதுவாய் நிற்கிறது ஓநாய் வருகுது ஓடுகிறோம் வெவ்வேறு திசைகளில் கிடைத்துள்ள ஆதாயங் களை நினைத்துக் கொண்டு ! ஆனால்…

மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 12

சித்ராங்கிக்கு தீட்சதர்மேல் மரியாதை இருக்கின்றது. அவர் வரும்போதெல்லாம பள்ளியறை கதவைத் திறக்கக் கடமைப்பட்டவள். மற்றவர்களுக்கு வேண்டுமானால் தில்லைநாதர் படியளக்கலாம். மீனாம்பாளுக்கும் சித்ராங்கிக்கும் அவர்தான் பரமன் 14. மனதில் கவலை இரையை அண்மித்த சிலந்திபோல உட்கார்ந்திருந்தது. கைக்கெட்டிய தூரத்தில் எண்ணையின்றி பொசுங்கும் திரியின்…

ஜே.கிருஷ்ணமூர்த்தி-மனக்கட்டுப்பாடு தியானத்துக்கு உதவாது – பகுதி 2

மாயன் இது தப்பு ..செய்யாதே! இது சரி.. செய்!. இது பரவாயில்லை..செய்யலாம்... இவை எல்லாமே பிறந்ததிலிருந்து ‘கற்றுக் கொண்டதே’. புத்தி என்பது தெரிந்ததின் தொகுப்பே. அதன் அடிப்படையில் செய் செய்யாதே என்று ஒரு வழக்கத்தில் சிக்கிக் கொண்டு நாம் வாழ்ந்து வருகிறோம்.…

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 5) எழில் இனப் பெருக்கம்

மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதியிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர்…

ஆரோக்கியமேரி என்றழைக்கப்பட்ட மேரி ஃபிலோமினா

'ஓ பரமபிதாவே' துளி நம்பிக்கையும் சிதறிப்போன அன்று ஆச்சியின் அழுகை ஓலம் ஆஸ்பத்திரி வளாகத்தை அதிரச் செய்திருக்கக் கூடும் சளி இறுகிச் சிதைத்த நெஞ்சுக் கூட்டோடு வசதிகள் குறைந்த வவுனியா வைத்தியசாலை பல நூறு கிலோமீற்றர்கள் தொலைவில் அவளை கண்டிக்கு அனுப்பியிருந்தது…

பஞ்சதந்திரம் தொடர் 29- முட்டாள் நண்பன்

முட்டாள் நண்பன் ‘’பிறகு அவர்கள் அந்த ஊரில் வியாபாரியின் மகனைப் பேரம் பேசிவிட்டு மூன்று ரத்தினங்களையும் விற்றனர். பணம் நிறையக் கொண்டு வந்து அரசகுமாரன் முன் வைத்தனர். அவன் மந்திரி குமாரனைத் தனது மந்திரியாக நியமித்துக் கொண்டான். அவன் மூலம் அந்த…