தென்கச்சியார் கூறும் மருத்துவக் குறிப்புகள்

This entry is part 15 of 45 in the series 4 மார்ச் 2012

இரா. கலையரசி, முனைவர் பட்ட ஆய்வாளர்,
அரசினர் கலைக்கல்லு]hp (தன்னாட்சி) , கும்பகோணம்.
முன்னுரை ்
வானொலி, தொலைக்காட்சி, இதழ் என்று பல்லு]டகங்களிலும் நிகழ்ச்சியை வழங்கியவர் தென்கச்சியார். இவர் மக்களின் நல் வாழ்க்கைக்குத் தேவையான பல செய்திகளைக் கூறியுள்ளார். இவற்றில் மக்களின் உடலுக்கு நலம் தரக்கூடிய , பயனுள்ள பல மருத்துவச் செய்திகளையும் வழங்கியுள்ளார் என்பது வியத்தற்குறியச் செய்தியாகும்.
‘சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும்’ என்பார்கள் . அதுபோல உடலும், உள்ளமும் ஆரோக்கியமாக இருந்தால்தான் மக்;களால் சிறப்பாக செயலாற்ற முடியும். ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது பழமொழி . இத்தகைய சிறப்பு வாய்ந்த உடல் நலத்தைப் பேஹவதற்கு தென்கச்சியார் கூறியுள்ள சில மருத்துவக் குறிப்புகளை இக்கட்டுரையில் காண்போம்.
உடல் நலம் ்
மக்கள் எப்பொழுதும் உடலைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். முதுமைக் காலத்தில் பசியின் அளவும், உண்ஹம் உணவின் சுவையும் குறைகிறது. அதனால் உட்கொள்ளும் உணவின் அளவும் குறைகிறது. ஆதலால் மனிதர்கள்; உட்கொள்ளும் உணவு சத்துள்ள உணவாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. முதுமையில் கேழ்வரகு உட்கொள்ளலாம். இதில் கலோhp அதிகம். சுண்ணாம்புச் சத்தும், நார்சத்தும் அதிகமாகக் காணப்படுகிறது. சுலபமாக சொpக்கும் தன்மை கொண்டது. கோதுமை, கீரைகள், பருப்பு வகைகள், பழங்கள் இவற்றை உட்கொள்ளலாம். பொட்டுக்கடலை, பட்டாணி இவற்றிலும் புரதச்சத்து அதிகம் இருப்பதால் இவற்றையும் உட்கொள்ளலாம்.
முதுமையில் இரத்தசோகை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால் இரும்புச் சத்து அதிகமாக இருக்கும் உணவுப் பொருள்களை உட்கொள்ள வேண்டும். அதாவது வெல்லம், போpச்சம்பழம் , தேன் , கல்லீரல் , பால், வெந்தயக் கீரை இவற்றில் எல்லாம் இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால் இவற்றை உட்கொள்ளலாம்.
உடல்நலத்தை பாதுகாத்துக் கொள்ள உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியம். அதனால் உடம்பும், மனதும் து]ய்மையாக இருக்கும். முடிந்த அளவுக்கு தினம் தோறும் உடற்பயிற்சி செய்வது நல்லது. மன நலம் நன்றhக இருக்க , தியானம் ஒரு நல்ல மருந்தாக அமைகிறது. குடும்ப நலம், ச_க நலம் இவையும் நன்றhக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் முதுமையிலும் இன்பமாக வாழலாம்.1
உடல்நலத்தைப் பாதுகாக்கும் முறைகள் ்
உள்ளம் நலமாக இருந்தால் உடலும் நலமாக இருக்கும். உள்ளத்தில் நலமும், மகிழ்ச்சியும் இருந்தால் சோர்வும், நோயும் வருவது இல்லை. மக்களின் உள்ளத்தில் சோர்வு இருந்தால் எளிதில் நோய்கள் உடலைத் தாக்குகின்றன. வாழ்க்கையின் உண்மைகளை எளிதில் புhpந்துக் கொண்டு, சிhpத்த முகத்தோடு கவலை இல்லாமல் வாழ வேண்டும். அப்படி வாழ்பவர்களுக்கு எந்த நோயும் வருவது இல்லை என்று மோpலாண்டில் உள்ள மன இயல் ஆராய்ச்சி நிபுணர் மைக்கேல்ரளூப் கூறியுள்ளார்.
உள்ளத்திற்கும், உடலுக்கும் நெருங்கியத் தொடர்பு உள்ளது. மன எழுச்சி, மனப்போரட்டம் இவையெல்லாம் உடல் இயக்கத்தில் மாறுதலை ஏற்படுத்துகிறது. மனிதனின் உடம்புக்கு துன்பம் வரும் போது அட்hPனலின் சுரப்பிகளுக்கு _ளை எச்சாpக்கை கொடுக்கிறது. அதன் காரணமாக அட்hPனல் சுரப்பிகள் விறுவிறுப்பாக வேலை செய்யத் து]ண்டப்படுகிறது. அதனால் _ளை தௌpவாகவும், உள்ளம் கலக்கம் இல்லாமலும் இருக்கக் கூடிய நிலையில் அட்hPனல் சுரப்பிகள் இயங்குகிறது. அட்hPனல் சுரப்பிகள் இயங்காத நிலையில் நோய் எதிர்ப்புத்திறன் மனிதனின் உடலில் குறைந்துப் போகிறது. அதனால் மக்கள் உடலை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.2
முதல் உதவி ்
இன்று விபத்து என்பது எங்கும் எளிதாகி விட்டது. வாகன விபத்து , வெடிகுண்டு விபத்து, தீ விபத்து , கட்டடம் இடிதல் , பூகம்பம் ஏற்படுதல் போன்ற விபத்துகள் அதிகமாக ஏற்படுகின்றன. இப்படி விபத்து ஏற்படுபவர்களுக்கு மக்கள் முதலில் செய்ய வேண்டியது முதல் உதவி. பின்புதான் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். விபத்தில் காயம் அடைந்தவர்களை _ன்று பிhpவாக பிhpக்கலாம்.
1. உயிருக்கு உடனே ஆபத்துத் தரக்கூடியது . அதாவது _ளைக் காயம், முகம், கழுத்துக் காயங்கள் , இதயம் , நுரையீரல் காயங்கள் , வயிற்றின் உள்ளுறுப்புக் காயங்கள் இவற்றிற்கு எல்லாம் உடனே முதலுதவி செய்ய வேண்டும். பின்பு இவர்களை தாமதப்படுத்தாமல் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். இதுப்போல் எச்சாpக்கையாக இருந்தால் அவர்களைக் காப்பாற்றி விடலாம்.
2. முதல் உதவி விரைவாக கிடைத்தால் உயிர் பிழைக்கக் கூடிய மார்பு காயங்கள் , கை – கால் எலும்பு முறிவு , இடுப்பு , முதுகெலும்புக் காயங்கள் , சீரான இரத்த சேதம் உடையவர்கள் இவர்களுக்கு எல்லாம் உடனடியாக முதலுதவி செய்ய வேண்டும்.
3. ஆபத்து இல்லாத கீரல்கள், சிறு காயங்கள் , இரத்த உறைவுகள், இதனால் பாதிக்கப்பட்டவர்கள் _ன்றhவது வகை. இத்தகைய _ன்று வகையாக பகுத்து முதலுதவி செய்யலாம்.3
முதலுதவி செய்ய வேண்டிய முறைகள் ்
மருத்துவர் வந்து சேர்வதற்கு முன் விபத்து நேர்ந்;தவர்களுக்குக் கெடுதல் ஒன்றும் வராதபடி மக்கள் உதவிபுhpயக் கூடியது முதல் உதவி. அவ்வாறு செய்யும் போது பின்பற்ற வேண்டிய முறைகள்,
 ஒருவர் தலையில் அடிப்பட்டு நினைவினை இழந்துவிட்டால் அவருக்கு வாந்தி வந்து, புரையேறி, _ச்சு அடைப்பு உண்டாகும். இப்படி ஆகாமல் இருக்கத் தலையை ஒரு பக்கமாக சாய்த்து வைக்க வேண்டும்.
 நாடித் துடிப்பையும், இதயத் துடிப்பையும் தொட்டுப் பார்க்க வேண்டும். அது குறைந்து இருந்தாலும், நின்று இருந்தாலும் அவர் மார்பை நிமிடத்திற்கு 80 முறை உள்ளங்கையால் அழுத்தி இதயத் துடிப்பை மீட்க உதவ வேண்டும்.
 கழுத்தில் காயம் ஏற்பட்டாலும் ஆபத்து அதிகம். கழுத்தில் காயம்பட்டவர்க்கு உடனே கழுத்துக்கு அடியில் ஒரு துண்டை மடித்து வைக்க வேண்டும். இரண்டு பக்கமும் சிறு தலையணை அல்லது துணி மடிப்புகளை வைத்து கழுத்துப் பகுதி அதிகமாக அசையாமல் பார்த்;துக் கொள்ள வேண்டும்.
 முதுகு எலும்பு முறிந்து இருக்கும் என்ற சந்தேகம் இருந்தால் முதுகு எலும்பு முறிந்தவரை அதிகமாக அசையவிடக் கூடாது. அதிகமாக அசைந்தால் தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டு கை, கால் விளங்காமல் செயலிழந்து போய்விடும். அதனால் அவரை ஒரு கனமான போர்வை, இல்லையென்றhல் பாயில் படுக்க வைத்து நாலுபேர், மெதுவாக து]க்கி மருத்துவ உதவிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.4
 கை எலும்பு முறிந்திருந்தால்;, முறிந்த பாகத்தை உடம்போடு சேர்;த்து அசையாமல் கட்ட வேண்டும். கால் எலும்பு முறிந்திருந்தால் மற்ற காலோடு சேர்த்துக் கட்ட வேண்டும். முறிந்த பாகம் தொங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் வீ;க்கம் உண்டாகாமல் இருக்கும்.
 வெட்டுக் காயம், குண்டடிப்பட்ட காயம் இவற்றிற்கு எல்லாம் இரத்தப்போக்கு அதிகமாக இருக்கும். இரத்தம் அதிகமாக வெளியேறும் போது ஆபத்தும் அதிகமாக இருக்கும். அதனால் இரத்தம் வெளியேறும் இடத்தில் துணியை பல மடிப்பாக மடித்து காயத்தின் மேல் வைத்து அழுத்தமாக 10 நிமிடம் பிடித்துக் கொள்ள வேண்டும். இரத்தம் நின்றவுடன் காயத்துக்கு கட்டுப்போட வேண்டும். சில சமயம் காயம்பட்ட பாகத்தை உயரமாக து]க்கிப் பிடித்துக் கொண்டால்தான் இரத்தக் கசிவு நிற்கும்.5
மேற்கண்ட வழிகளை மக்கள்; பின்பற்றினால் விபத்தில் சிக்கும் பல உயிர்களை காப்பாற்ற முடியும்.

முடிவுரை்
உடலும், உள்ளமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. ஆகையால் உள்ளத்தை எப்பொழுதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டால் எந்தநோயும் எளிதில் வராது என்ற உண்மையை அறிய முடிகிறது. தென்கச்சியார் பள்ளியில் படிக்கும் போதே மருத்துவராக உருவாகி மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று நினைத்தார். ஆனால் அந்த எண்ணம் நிறைவேறhததால் மருத்துவம் தொடர்பான எல்லாச் செய்திகளையும் மக்களுக்கு வழங்க வேண்டும் என்று நினைத்து, மக்கள் உடல் நலனைப் பேஹவதற்கான பல வழிகளைக் கூறியதில் இருந்து இவர் சமுதாயத்தின் மீதும் , மக்களின் மீதும் கொண்ட ச_கப்பற்றினை அறியமுடிகிறது.

அடிக்குறிப்புகள் ்
1. தென்கச்சி கோ. சுவாமிநாதன் , வானொலியில் இன்று ஒரு தகவல், பாகம்-1,0 பக்.25-26.
2. மேலது , ப.27
3. மேலது , பாகம்-13, ப.87
4. மேலது .
5. மணவை இளங்கோ , முதலுதவி செய்ய வேண்டிய முறைகள், ப.81

Series Navigationபூவரசி காலாண்டிதழ். எனது பார்வையில்.சிலப்பதிகாரத்தில் காட்சிக்கலை
author

இரா. கலையரசி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *