விளையாட்டு

This entry is part 23 of 41 in the series 8 ஏப்ரல் 2012

பார்வையாளர்கள் குறித்த
பதட்டங்கள் ஏதுமின்றி
ஒரு விளையாட்டு துவங்கியது
கேள்விப்பட்டிடாது புதிதாக இருக்க
எல்லோர் நாவுகளிலும் பற்றிய தீ
வரைபடங்களில் மிளிரும்
நாடுகள் மீதும் நகரத் துவங்கியது
தேச நலனுக்கு பெரும் குந்தகம் வந்ததென
கமிட்டிகளை நியமித்தது அரசு
புத்தி ஜீவிகள்
கணிப்புகளை மேற்கோள்களின் நிழலில் வைத்தனர்
குறிசொல்லி சாமியாடிகளும்
அவிழ்க்கத் துவங்கினர் பொய் மூட்டைகளை
சமூக அறிஞர்கள் சந்தோசங்களை பகிர்ந்தனர்
வேப்ப மரத்தில் பால் ஒழுகுகிறதெனும் செய்தியென
அசட்டையாக இருந்த என்னுள்ளும்
ஆவல் பற்றிக்கொள்ள ஓடினேன்
துளி அடையாளமற்று போக்கிடச் செய்யும்
அனுபவம் தேறிய வேட்டையர்கள்
வேறு வேறு உபகரணங்களால்
வெற்றிகொள்ள துடித்தபடியிருக்க
தகர்க்க இயலாதவாறு தப்பிக்கொண்டிருந்தது பாறை
பறவையாகி…

Series Navigationஅரிமா விருதுகள் 2012புதுப்புனல் விருது 2012 ஏற்புரை – நானும் என் ஸ்குரூ டிரைவரும்
author

ந.பெரியசாமி

Similar Posts

Comments

  1. Avatar
    சோமா says:

    வெகு இயல்பாக மாறிப்போயிருக்கும் இன்றைய நிலையை நன்றாகவே படம் பிடித்துக் காட்டியிருக்கிறீர்கள்…
    வாழ்த்துக்கள்..திரு.ந.பெரியசாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *