நனைந்துவிட்ட கவிதைப்புத்தகத்திலிருந்து நீர் மட்டுமே தாரை தாரையாகச் சொட்டிக்கொண்டிருந்தது சொட்டிய நீர் சிறுகுளமாகித் தேங்கிவிட அதில் திடீரென அன்னப்பறவைகள் நீந்தத்தொடங்கின எங்கிருந்து வந்திருக்கக்கூடுமென்று நினைத்த பொழுதில் அவை என்னைப்பார்த்து அகவின அவற்றின் குரல்களில் வெளிப்பட்டவை யாவும் கவிதைகளாகவே இருந்தன. புத்தகத்தை கையிலெடுத்து…
திண்ணை இணைய இதழை நான் சமீபமாகத்தான் படிக்க ஆரம்பித்தேன். சில இதழ்களில் எழுதியும் இருக்கிறேன். சமீபத்திய இதழ்களில் வெளிவரும் பின்னூட்டங்களை பார்க்கும்போது ஆச்சர்யமாகவும் அவஸ்தையாகவும் இருக்கிறது. முன் பின் தெரியாத, ஒரே ஒரு கருத்தின் மூலமாக அறிமுகமான ஒருவரின் மீது இவ்வளவு…
ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் - 19 ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா…
பாதரே பிமெண்ட்டா! எனது பேச்சின் முக்கியமான பகுதிக்கு வந்திருக்கிறேன். நான் காத்திருந்ததற்கு பலன் கிடைத்திருக்கிறது. கன்னிப்பெண்ணின் பிள்ளையை கடவுளாக ஏற்றுக்கொண்ட உங்களையன்றி வேறுயார் என்னையும் என்பிள்ளையையும் புரிந்துகொள்வார்கள் சொல்லுங்கள். நீங்கள் மட்டுமே சிசு வயிற்றுக்குள் வந்தவிதத்தைப்பற்றி கேள்விகேட்கமாட்டீர். அது தெய்வ குற்றமென்று…
ஆழ் கடல் நீருக்குள் பொழுதெல்லாம் முக்குளித்து ஒரேயொரு துளிநீரை தேடி எடுத்து வந்தேன்.. தரைக்கு வந்த பின்தான் புரிந்தது அது கண்ணீரென்று… ஆகாய வெளியெல்லாம் தாண்டிச் சென்று ஒரேயொரு மின்மினி(ப் பூச்சி) பிடித்து வந்தேன்…, கைசுட்ட பின்தான் புரிந்தது நட்சத்திரம் என்று……
ஏதோ ஒரு ஊரில் பிரலம்பவிருஷணன் என்றொரு காளை இருந்தது. அது மதம் பிடித்துப்போய் தன் மந்தையை விட்டுவிட்டுக் காட்டுக்குப் போய் விட்டது. காட்டில் ஆற்றங்கரையைக் கொம்புகளால் முட்டிக் கிளறிக் கொண்டும், இஷ்டம்போல் மரகதம் போன்ற புல்லை மேய்ந்து கொண்டும் அது திரிந்து…
( மு.வ நூற்றாண்டு இவ்வாண்டு; தமிழகமெங்கும் மு.வ நூற்றாண்டு நிகழ்ச்சிகள்: மு.வ நூற்களின் மறு பிரசுரங்கள்: ) பிரான்ஸ் காப்காவின் எழுத்துக்களின் பாதிப்பில் உருவான சமீபத்திய படமொன்று மு.வ. அவர்களின் 67 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கி. பி. 2000 நாவலோடு…