இசை என்ற இன்ப வெள்ளம்

This entry is part 11 of 35 in the series 29 ஜூலை 2012

எண்பதுகளில் இருந்த தமிழ்த்திரை இசை பற்றி அந்தக்கால யுவன்/யுவதிகள் சிலாகித்துப்பேசுவது போல , 1990களிலிருந்து இப்போதைய 2010 வரையிலான இசை பற்றி இக்கால இளைஞர்கள் பேசுகிறார்களா..? இந்தக்காலகட்டத்திய இசை அவர்களின் அன்றாட வாழ்க்கையோடு இணைந்து பயணிக்கிறதா,,? எண்பதுகளில் கோலோச்சிய இளையராஜாவையும் , கூடவே பயணித்த சக இசைக்கலைஞர்களின் இசையையும் வாழ்வோடு இணைத்துப்பார்த்த பார்வை இப்போதுள்ள இளைஞர்களுக்கு இருக்கிறதா..? கேள்விக்கான விடையை கடைசியில் பார்க்கலாம்,..ஹ்ஹ…இல்ல கேட்கலாம்.

எனக்குத்தெரிந்து ரஹ்மானையும் ,யுவனையும் சிலாகித்து வெகு சிலரே இடுகைகள் இடுவதையும், அவர்கள் கூட சில நாட்களுக்குப்பிறகு இளையராஜாவைப் பற்றியும் அந்தக்கால கட்டத்தில் வாழ்ந்த, இசைத்தவர்களைப் பற்றி மட்டுமே அதிகம் பேசுவதைப் பார்க்கிறேன்..அப்ப அவங்க ஆழ்மனதில Originality ய தேடிப்போறதுங்கறது இருக்கத்தான் செய்யுது , ஆனா இப்ப இருக்கிற இசையமைப்பாளர்கள் அதைக் கவனிக்கத்தவறி அவர்களின் ஆவலைப்பூர்த்தி செய்வதில்லை.அன்றைய ரசிகர்கள் பாடலின் இடைஇசையைக்கூட(Interlude) நினைவில் வைத்திருந்து ரசித்தனர்.இப்போது அது போன்ற ஈடுபாடுகள் காணக்கிடைக்கவில்லை.

இசை தவிர எந்த alternative மனதிற்கு இதம் ?. இந்தக்கால இசை பற்றி  யாரும் சிலாகித்துப்பேசுவதில்லை, அதிக கட்டுரைகளோ, பெருவாரியான கருத்துகளோ வருவதே இல்லை , இப்போது இருப்பவர்களைப் பற்றி. இன்னும் சொல்லவேண்டுமென்றால் இளைஞர்களுக்கு இசை தவிர பிற விஷயங்களில் அவர்களின் நாட்டம் இருக்கிறது.“அறிவொளி இயக்கம்“ ச.தமிழ்ச்செல்வன் சமீபத்துல பெங்களூர் வந்திருந்தப்ப சொன்ன ஒரு விஷயம். இந்தக்காலக்கட்டத்தில தான் இலக்கியமும், இசையும் மிகவும் வேண்டியதாக இருக்கிறது , மேலும் அதனோட அவசியமும் அதிகம் என்று.

இசை பற்றி தமிழ் வலைப்பூக்கள்ல பல பேர் எழுதுறதப்பாத்துருக்கேன், ..இருந்தாலும் பெரு வாரியான வெள்ளம் போல இளையராஜா மற்றும் எண்பதின் இசையைப்பற்றி
எழுதுவது/ விவாதிப்பது போல இப்போதைய இசைபற்றிக் கருத்துகளோ இல்லை விவாதங்களோ காணக்கிடைப்பது இல்லை

மேலும் இப்போது இசை மலிந்து விட்டது , Uniqueness இல்ல, Originality இல்ல இப்ப இருக்கறவங்ககிட்ட, எப்பவுமே இந்தக்கால எந்த இசை ஆல்பம் கேட்டாலும் , இது இங்க இருந்து காப்பி அடிக்கப்பட்டது , இது இங்கருந்து Lift ங்கற மாதிரிதான் இருக்கு,?!  Casio, Roland மாதிரியான Keyboards  ரொம்ப சுலபமாகவே எல்லாரும் வாங்கக்கூடிய விலையிலேயே விற்பதும் ஒரு பெரிய காரணம். அதில எல்லாமே இருக்கு, எந்த Beats வேணும் , எவ்வளவு நேரம் அதை இசைக்கலாம் , இடையில் எந்த வாத்யக்கருவிகளை எந்த அளவில் ஒலிக்கச்செய்யலாம் , எத்தனை கருவிகள் தேவை என்றெல்லாம் Program பண்ணி வெச்சிட்டா அதுவாவே இசைக்க ஆரம்பித்து விடுகிறது.அதனால வீட்டுக்குவீடு இப்ப ஒரு Composer உருவாகிவிட்டனர்.
எந்தவித இசை பற்றிய ஞானமும் இல்லாமல், அடிப்படைப்புரிதல்கள் இல்லாமல், Program பண்ணா வாசிக்கிதுங்கற நிலைல எந்த Music Soul Touching ஆக இருக்க முடியும்?!
இசை பாடல்களில் மட்டுமல்ல, நம்ம கைபேசிகளிலும், வாயில் மணிகளும், ஏன் கார் ஹார்ன்ஸ்களிலும் கூட இசை ததும்புகிறது, ஃபோனில் கால் வெய்ட்டிங்கிற்கு கூட இசை தான். இசை”பட” வாழ்கிறோம்.மேலும் அந்தக்காலத்திய இசை என்பது கேட்பதற்காக மட்டுமே இருந்தது. இப்போது இசையை காட்சிகளுடன் சேர்ந்து ரசிப்பது என்ற மனோநிலை. எதைச்செய்தாவது கவர்ந்துவிட வேண்டும் என்று காட்சி ஊடகங்களில் இசையைக்கொண்டு செல்வதற்கென உள்ள மெனக்கெடல்கள் இசையைக் கொல்கின்றன.
முக்கியமா பேசறதா இருந்தா அவங்களுக்கு இசை பற்றின ஆழ்ந்த அறிவோ இல்ல அத எப்படி ரசிக்கிறதுங்கற புரிதல்களோ இல்லைங்கறது தான் நிஜம். இன்றைய இசையை நான் ரசிக்கிறேன்னு சொல்றவங்கெல்லாம் Ipod, Iphone , MP3 Playersலயும் இசையை நிரப்பிக்கிட்டு தொடர்ந்தும் கேட்டு சலித்துத்தான் போகுது அவங்களுக்கு. மேலும் இன்னிக்கு ஒரு சொடுக்கில எங்கருந்து இந்த இசை உருவப்பட்டது,  எந்த இசைக்கோவை இந்த இசையை கொண்டுவந்ததுங்கறத தெரிஞ்சுக்க முடியுது இந்த Internet Generations ல , அதுவே கூட பெரிய சலிப்பை உண்டாக்கி அவங்கள இந்தக்கால இசை பற்றி சிலாகித்துப்பேச ஒண்ணுமே இல்லங்கற நிலைக்குக் கொண்டு போய்விடுகிறது.
இப்ப இருக்கிற இசையமைப்பாளர்களுக்கு IT Engineer போல Oniste Offer கிடைக்காதாங்கற ஆசைலதான் இருக்காங்க. ஒரு படத்துக்கு இசையமைச்சாச்சுன்னா உடனே அத YouTube-லயும் , இன்னபிற சமூக வலைத்தளங்கள்லயும் உடனே பகிர்ந்துகொண்டு International Audience- ஐக்கவர்ந்துவிட வேண்டும் என்கிற மனப்பாங்கோடயே இருக்காங்க என்பது தெளிவு. இந்த மாதிரியான சிக்கல்கள்ல மாடிக்கிட்டு , அவங்க Target International Audience தான்னு ஆனப்புறம் , அவங்களுக்கு பிடித்த மாதிரியான இசையைக்கொடுத்தே ஆகவேண்டுமென்ற உந்துதல், அழுத்தங்கள் அவங்களயறியாமலேயே அவங்களுக்குள்ளேயே வந்துவிடுகிறது . அதனால தனித்துவம், மனதை மயக்கும் இசைங்கறதெல்லாம் பெரிய விஷயமாகத்தெரிவதில்லை. அதனாலேயே உள்ளூர்ல இருக்கிறவங்களுக்கும் இது போன்ற இசையை பெரிதாக கருத்திலெடுத்துக் கொள்ளாமல் போறபோக்கில ரசித்துவிட்டுச்செல்லும் மனப்பாங்கும் தொடர்கிறது.
மேலும் எண்பதுகளின் இசையைப்பற்றி அப்போதிருந்தவங்ககிட்ட கேட்டால் , இது இன்னார் தான்  இசையமைத்ததுன்னு தெளிவா எந்த சந்தேகமும் இல்லாம சொல்ல முடிந்திருக்கிறது . இப்ப எல்லாம் அந்த Uniqueness , அல்லது Originality ங்கற பேச்சுக்கே இடமில்லாமப்போச்சு. எல்லோரின் இசையும் ஒன்றாகவே ஒலிக்கிறது.வேறுபடுத்திப் பார்ப்பதற்கு தனிக்காதுகள் அவசியப்படுகிறது. இன்றைய பத்திரிக்கைகள் , மற்றும் தொலைக்காட்சி அலைவரிசைகளின் சின்னங்களை/பெயர்களை மட்டும் நீக்கிவிட்டால் எல்லாம் ஒன்று போலத்தான் தெரியும் அதுபோலவே இன்றைய போஸ்ட்டர்களில் இருந்து இசையமைப்பாளனின் பெயர் மட்டும் நீக்கப்படுமானால்   யார் இசையமைத்தது என்று தெரியாமலேயே போய்விடும். சொல்லப்போனா யாருக்கும் தனக்கான ஸ்டைல் என்று எதுவும் வைத்துக்கொள்ளாமல் மனம் போன போக்கில் இசையமைக்கின்றனர். அளவுக்கதிகமான மேற்கத்திய இன்றைய இசையின் தாக்கமும், அரேபியன் இசையின் தாக்கமும் அவர்களுக்குள் வந்துவிட்டதால் அவர்களின் இசை ஒன்று போலவே தெரிகிறது. எது விற்கிறதோ அதைக் கொடுக்கிறேன் என்பதால் வர்ற பிரச்னை இது.
அவசர வாழ்க்கையில் இசையை அணு அணுவாக ரசித்துக் கேட்க யாருக்கும் நேரம் இல்லை. அப்படிக் கேட்க நினைத்தாலும் ஒரு தமிழ் பாடல், ஒரு ஹிந்திப் பாடல், மலையாளப் பாடல், ஆங்கிலப் பாடல் ஸ்பானிஷ் பாடல் எனப் போய்க் கொண்டே இருக்கிறது. தொழில் நுட்பம் மட்டும் மாறவில்லை. மக்களின் ரசனையும் மாறி அறிவும் இப்போது கூடி விட்டதால் எந்த ஒரு பாடலும் அவர்களின் மனதிலும் வாழ்விலும் நிலைத்து நிற்பதில்லை. பாடல்களின் வரிகளை தம் அன்றாடம் உழலும் வாழ்வில் இணைத்துப்பார்ப்பதற்கு யாருக்கும் தோன்றுவதில்லை. எது மனதிற்கு நிம்மதியைக்கொடுக்கிறது ? எதைத்தேடிச்செல்கிறான் என்பது ஒரு புதிர். என் கூட பணிபுரிபவர்கள் எல்லாம் Frustratedஆனா என்ன பண்ணுவ மச்சி’ன்னு கேட்டா என்னா கொஞ்சம் சரக்கடிச்சிட்டு கவுந்து படுத்துக்கலாம் ,இல்ல எதாவது “மால்”ல போயி Figure வெட்டலாம்னு தான் சொல்வார்கள். இல்லாட்டி Weekend ல எதாவது பக்கத்தில இருக்கிற மலைப்பாங்கான இடத்துக்குப்போயி ஜாலியா கும்மாளம் போடலாம்ங்கற நினைப்பிலதான் பலபேர் இருப்பதைப்பார்த்திருக்கிறேன்.கவிதை வாசிக்கலாம், மனதிற்கினிய இசை கேட்கலாம் என்று பொதுவாக யாரும் விரும்புவதில்லை.
ஆத்மார்த்த இசைங்கற விஷயத்தப்பத்தி யாருமே கண்டுக்கிர்றதேயில்ல. கும்மாளம் போடவும், Fast Beatsல தன் சந்தோஷத்த வெளிப்படுத்தவும் மட்டுமே இசை தேவையாயிருக்கு. Weekend Parties  எல்லாம் ரொம்பவே பிரபலம் IT Filed ல. அங்கெல்லாம் இந்தக்கூத்து தான் நடக்குது..எப்படியும் வெளிநாட்டவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் தான் அவை. [ ஏன் எங்க ஆஃபீஸுலயும் இதே கூத்து தான் ]. இலக்கியம் இசை , கவிதைகள், கட்டுரைகள் வாசிப்பது என்பன போன்ற கலை மீதான விருப்பங்கள் குறைந்து கொண்டே வருவதும் ஒரு காரணம். நம் மண்ணுக்கான இசை , நமது மண்ணின் மொழி , நமது இசைங்கறதெல்லாம் எப்பவோ இல்லாமப்போயாச்சு. எல்லாம் உலகமயம், தாராளமயமாக்கல் , இந்த விஷயங்கள்லாம் நம்ம கலைகளிலும் , இசையிலும் ஊடுருவி நிற்பது ஒரு வலுவான காரணம்.

எண்பதுகளின் இசை பற்றி , முப்பது ஆண்டுகளுக்குப்பிறகு தான் இப்படி ஒரு விவாதம் வந்திருக்கு , அதே போல 2020ல, 1990லிருந்து 2010வரையிலான இசை பற்றிப் பேசுவாங்களோ..?! இருந்தாலும் ஒப்பிட்டுப்பாக்கறதுக்கு அக்காலத்திய நிகழ்கால இசை பயன்படுத்தப்படும்னு நினைக்கிறேன். ☺

எவ்வளவுதான் சொன்னாலும் , அவங்கவங்க இளைமைல கேட்ட , பாத்த , பழகின விஷயங்கள் தான் அவங்களோட பிற்கால வாழ்க்கை முழுக்க நிறைந்திருக்கும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.! அப்போது , இப்ப இருக்குறவங்க எந்த விஷயங்களப்பத்தி யாருடைய இசை, மற்றும் எழுத்துகள் பற்றி சிலாகித்துப் பேசுவாங்க..?! ☺

– சின்னப்பயல் (chinnappayal@gmail.com)

Series Navigationசிற்றிதழ் அறிமுகம் – சிகரம் ஜூன் 2012.தற்கொலைக் குறிப்பு கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு
author

சின்னப்பயல்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *