அனுராக் பாசுவின் “ பர்·பி ‘

This entry is part 15 of 21 in the series 21 அக்டோபர் 2012

மூன்று வாரமாக மல்டிப்ளெக்சில் ஓடுகிறதே என்கிற கியூரியாசிட்டியில், படம் பார்க்கப் போனேன். கிடைத்த அனுபவம் சூப்பர். ஓரளவிற்கு ரன்பீர் கபூர் நல்ல நடிகர் என்பது, எனக்கு ராக்கெட் சிங் பார்த்தபோதே புலப்பட்டது. இந்தப் படத்தைப் பார்த்தவுடன் அது உறுதி பட்டது. ஒல்லி பெல்லி இலியானா, இதில் கனமான (!) பாத்திரத்தில். அந்த ஒட்டிய கன்னங்களும், அழகுக் கண்களும், கவிதை பேசுகின்றன. படத்தில் பிரியங்கா சோப்ரா இருக்கிறார் என்று தெரியும். ஆனால் இப்படி இருப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. சிம்ப்ளி சூபர்ப்!

டார்ஜிலிங்கில் மர்பி ரேடியோ பிரபலமான காலகட்டம். அழகுக் குழந்தை பிறந்தால், அதற்கு மர்பி என்றே பெயர் வைப்பார்கள். அப்படித்தான் ஒரு தம்பதியினரும் நினைத்தார்கள். பிறந்தது அழகு ஆண் குழந்தை. ஆனால் காது கேளாத, வாய் பேசாத அழகன். “ மர்பின்னு வெக்க நெனைச்சோம்.. ஆனல் பேச்சு இல்லையே? அதனால் பர்·பின்னு வச்சிடுவோம்..” அவன் தந்தை ஒரு பணக்காரரின் கார் டிரைவர். பணக்காரருக்கு ஒரு மகள் ஜில்மில். அவளுக்கு மூளை வளர்ச்சியில்லை. பர்·பியும், ஜில்மில்லும் பால்யத்திலே இருந்தே நண்பர்கள்.

பர்·பி ஊரின் செல்லப்பிள்ளை. ஆனால் அவனுக்கு ஒரு கெட்ட பழக்கம். சவுக்குக் கழியில் கட்டியிருக்கும் தெரு விளக்கை, முக்கால் வாசி அறுத்து விட்டு, அது விழும் இடத்தில் ஒரு பாட்டிலை வைப்பான். கழி விழுந்து பாட்டில் உடைந்தால், அவனுக்கு நட்போ காதலோ கைகூடும். யதேச்சையாக பார்க்கும் சுருதியை, அவன் காதலிக்கிறான். பாட்டில் உடைந்ததால் அது கைகூடும் என்று நம்புகிறான். ஆனால் சுருதி, திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண். அவள் மனம் பர்·பியை நேசித்தாலும், பெற்றோர் வற்புறுத்தலுக்காக நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டுகிறாள்.

பர்·பியின் தந்தைக்கு கிட்னி கோளாறு. மருத்துவமனை 7 லட்ச ரூபாய் கேட்கிறது. ஜில்மில்லுக்கு தாத்தா வழியில் கோடிக்கணக்கில் சொத்து. ஜில்மில்லைக் கடத்தி, 7 லட்சம் கேட்கிறான் பர்·பி. ஆனால் லட்சத்திற்கு எத்தனை பூஜ்யம் என தெரியாமல், 7000 எனக் கடிதம் எழுதி அனுப்புகிறான். நடுவில் ஒரு பேங்க் கொள்¨ளைக்கு முயல்கிறான். கொஞ்சம் பணம் கிடைக்கிறது. ஆஸ்பத்திரியில் கட்டுவதற்குள் தந்தை இறந்து போகிறார். இப்போது ஜில் மில் அவனுக்கு சுமை. கழட்டி விடப் பார்க்கிறான். ஆனால் அவள் கூடவே வருகிறாள்.

ஜில்மில்லின் சொத்தை அடைய, அவளுடைய தந்தையே திட்டம் போட்டு, அவளை காருடன் ஏரியில் தள்ளி விடுகிறார். ஆனால் ஏரியிலிருந்து எடுக்கப்பட்ட காரில் ஜில் மில்லின் உடல் இல்லை. எங்கே அவள்? ஜில்மில் கடத்தலுக்கு பர்·பி கைதாகிறான். அவனைத் தேடி வரும் சுருதி, ஜில்மில்லின் அம்மா வழி தாத்தா வீட்டுக்கு வருகிறாள். அங்கே ஜில் மில் உயிரோடு இருக்கிறாள். பர்·பி, ஜில்மில் கல்யாணம் நடக்கிறது சுருதியின் ஆசீர்வாதத்துடன்.

படம் முழுக்க வசனமே இல்லாமல் ரன்பீர் கபூர் தூள் கிளப்புகிறார். அவர் செய்யும் சின்ன சின்ன குறும்புகள் குபீர் சிரிப்பு. சுருதியாக வரும் இலியானா, ‘நண்பனி’லேயே தனக்கு நடிக்க வரும் என்று உறுதி செய்து விட்டார். இதில் அசத்துகிறார். ஸ்பாஸ்டிக் பெண் பாத்திரத்தில் பிரியங்கா. கோணாலாக நடப்பதும், உடையை இழுத்து விட்டுக் கொள்வதும், ஒரு விரலால் மூக்கைத் தேய்த்துக் கொள்வதும் என அந்த மாதிரிப் பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார்.

படத்தில் முக்கிய பாத்திரம் ஒரு காமெடி இன்ஸ்பெக்டர். அவரும் ரன்பீரும் அடிக்கும் கூத்து நகைச்சுவை திருவிழா.

பர்·பியை தமிழில் எடுப்பதாகப் பேசிக் கொள்கிறார்கள். எடுத்தால், எனது சாய்ஸ்:

ரன்பீர் – விஜய்  இன்ஸ்பெக்டர் – சத்யராஜ் அல்லது தம்பி ராமையா. இலியானாவுக்கு இலியானா தான். பிரியங்காவுக்கு அவரே.

0

Series Navigationகவிதையாக ஒரு கதைவானவில் வாழ்க்கை
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *