ரிலே ரேஸ் போல, ஒரு கடத்தலை, ஓரு சில நிமிடங்களில், திகிலுடன் சொல்லியிருக்கிறார் ஹ¤சைன். விரைவில் தெலுங்கில் ‘ பர்கர் ‘ என்று ஒரு முழு நீள திகில் படம், அவரிடமிருந்து வரலாம்.
தனியாக ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாழும் இளைஞனுக்கு, ஒரு செல்பேசி அழைப்பு வருகிறது. குரல் தன்னை ‘பாஸ்’ என அடையாளம் சொல்கிறது. ‘ உனக்கு பத்து லட்சம் வேண்டுமா? நான் சொல்கிறபடி செய் ‘ என்கிறது குரல்.
பத்து நிமிட அவகாசத்தில், உடை மாற்றி, திறந்தவெளி உணவகத்திற்கு வருகிறான் அவன். செல்பேசியில் அவனுக்கு ஆணைகள். அவன் பின்னால் ஒருவன், கையில் கருப்பு பையுடன்.. ‘அவனை பின் தொடரு’ எனக் கட்டளை. பைக்காரன் நீண்ட முடி கொண்டவனாக இருக்கிறான். அதை முடிந்து குடுமியாக்குகிறான். நடந்து நடந்து, ஒரு பழைய மாடிக் கட்டிடத்திற்கு வருகிறான். பின் தொடரும் வாலிபன், ப்ளூ டூத்தில் கட்டளைகளை வாங்கிக் கொண்டே இருக்கிறான். “ இதென்ன கூலிப்படை விவகாரமா?” என்கிறான். ஒரு கட்டத்தில் அவனுக்கு ஆசை அதிகமாகிறது. பாஸிடம் தனக்கு இருபது லட்சம் வேண்டும் என்கிறான். பாஸ் உனக்கு பேராசை என்கிறான் பாஸ். ஆனால் அதற்கும் ஒப்புக் கொள்கிறான்.
குடுமிக்காரன் பையுடன் ஒரு கோடவுனுக்குள் போகிறான். மனித நடமாட்டமே இல்லாத பகுதி அது. அவன் வெளியேறும்வரை, வாலிபன் காத்திருக்கிறான். பிறகு உள்ளே போகிறான். சுற்றித் தேடுகிறான். எதுவும் இல்லை.
“ பாஸ் இங்கே யாரும் இல்லை.. பணமும் இல்லை.. “
“ முட்டாள்! உன்னை மீட்கும்போதுதான் பணம் வரும் “
“ என்ன சொல்கிறாய்? “
“ நீ கடத்தப்பட்டிருக்கிறாய் முட்டாளே~ “
வாலிபன் உடைந்து போகிறான். கதவுகள் அடைக்கப்பட்டிருக்கின்றன. தப்பிக்க மார்க்கம் இல்லை. ‘ஹே என்னிடம் செல்போன் இருக்கிறதே’ என்று எண்ணுகிறான்.
“ தம்பி அது உன் செல்போன் இல்லை.. உணவகத்தில் அது மாற்றப்பட்டு விட்டது “
0
கார் ஓட்டிக்கொண்டிருக்கும் அண்ணனுக்கு ·போன். “ சொல்லுடா “
“ நான் உன் தம்பி இல்லை.. அவன் கடத்தப்பட்டு விட்டான். எனக்கு பத்து லட்சம் வேண்டும்.. கொடுத்தால் உன் தம்பி உனக்குக் கிடைப்பான்.. “
“ ஏய் யார் நீ “
“ உனக்கு 20 நிமிடம்.. போய் உன் தம்பி இருக்கிறானா அவன் வீட்டில் என்று தேடு.. அப்புறம்.. போலீசுக்கு போக எண்ணாதே.. என்னைப் பிடித்தால் எனக்கு 3-4 வருடம் ஜெயில்.. உன் தம்பியைப் பிடித்தால், அவனுக்கு 15 வருட ஜெயில்.. ஏனென்றால் அவன் கள்ள நோட்டு மாற்றும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறான்..”
0
தம்பி வீட்டில் இல்லை.. தாகத்துக்கு குளிர்பானத்தை எடுக்கும் அண்ணனுக்கு, குளிர்பதன பெட்டியில் கிடைக்கிறது ஒரு தோல் பை. அதில் இருக்கிறது 500 ரூபாய் கள்ள நோட்டு!
“ உனக்கு வேண்டியதை தந்து விடுகிறேன்.. எனக்கு என் தம்பி வேண்டும்”
0
பிலியர்ட்ஸ் ஆடிக்கொண்டிருக்கும் ஒருவனுக்கு போன் அழைப்பு. “ உனக்கு பத்து லட்ச ரூபாய் வேண்டுமா? நான் சொல்கிறபடி செய் “
0
அண்ணன் கறுப்பு பையுடன் உணவகத்தில் அமர்ந்திருக்கிறான். பின்னால் பிலியர்ட்ஸ் இளைஞன். அண்ணன் எழுந்து நடக்கிறான். பிலியர்ட்ஸ் பின் தொடர்கிறான்.
இது முடிவில்லாத கதை என முடிகிறது படம்.
பெரிய நடிகர்கள் இல்லை.. ஆனாலும் துல்லியமான ஒளிப்பதிவு, மிரள வைக்கும் இசை. பெரும்பாலும் ஆங்கிலம். மண் வாசனைக்காக கொஞ்சம் தெலுங்கு. மிரட்டியிருக்கிறார் ஹ¤சைன். பாராட்டுக்கள்.
0
- கமலா தேவி அரவிந்தன் – என் வியப்பும் சந்தோஷங்களும்
- உன்னை போல் ஒருவன்,முசுலிம்களுக்கு எதிரான படமில்லை: 3
- தாகூரின் கீதப் பாமாலை – 46 வீணைக்குள் இன்னிசைக் கானங்கள்
- ஹ¤சைன் ஷா கிரணின் குறும்படம் ‘ ஷேடோ ‘ ( தெலுங்கு )
- சரித்திர நாவல் – போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா
- நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………. 10.ஆதவன் – ‘இரவுக்கு முன்பு வருவது மாலை’
- லைஃப் ஆஃப் பை (Life of Pie) திரைப்படம்: மனிதனும் மிருகமும்: ஒரே சங்கிலியின் இரு கண்ணிகள்
- தேவலோகக் கன்னி
- வால்ட் விட்மன் வசன கவிதை -4 அவனுக்கு ஒரு பாடல் (For Him I Sing) (1819-1892) (புல்லின்இலைகள் -1)
- “காப்பி” கதைகள் பற்றி
- இரு கவரிமான்கள் – 3
- பதில்
- அக்னிப்பிரவேசம்-16
- சங்க இலக்கியங்களில் அலர்
- கவிதைகள்
- நந்தா பெரியசாமி என்னும் கலைஞன்: ’அழகன் அழகி’ திரைப்படத்தை முன்வைத்து….
- மொழிவது சுகம்: தூக்ளாஸ் கிரெஸ்ஸியெ
- பெண்களின் விதிகள்
- தண்டனை யாருக்கு?
- வள்ளியம்மை
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் அங்கம் -4 பாகம் -9
- அன்பிற்குமுண்டோ அடைக்கும் தாழ்
- அதிகரிக்கும் பாலுறவு பலாத்கார குற்றங்களுக்கு தீர்வு என்ன?
- பாரத நாட்டின் பெளதிக மேதை ஸர்.சி.வி. ராமன்
- தில்லி பாலுறவு பலாத்காரத்துக்கு எதிரான மக்கள் பேரணி
- வாழ்வியல் வரலாற்றின் சில பக்கங்கள் -41