நானும் ஷோபா சக்தியும்

புலம் பெயர்ந்த எழுத்தாளர்களோடு எனக்கு அவ்வளவாகப் பரிச்சயமில்லை. புலம் பெயர்ந்த தமிழர்களோடு, எனக்கு பரிச்சயம் உண்டு. எம் ஜி ஆர் ஆதரவால், அவரது நகரிலேயே, அவர்கள் பெருமளவில் குடியிருந்தார்கள். எண்பதுகளில் எனது வங்கி கே கே நகர் கிளையில், அவர்கள் கணக்கு…

பண்டி சரோஜ்குமாரின் ‘ அஸ்தமனம் ‘

மெல் கிப்ஸனின்ன் ‘ அப்போகாலிப்டோ ‘ பார்த்திருக்கிறீர்களா? அடிக்கடி சோனி பிக்ஸில் போடுகிறார்கள். சூப்பர் படம். அருமையான வண்ணங்கள். துல்லியமான ஒளிப்பதிவு. காட்டில் வாழும் இரு ஆதிவாசிக் கூட்டங்களுக்கிடையே நடக்கும் சண்டை. வலிய கூட்டம், எளிய கூட்டத்தைப் பிடித்து, கட்டிப்போட்டு, சித்திரவதை…

பி ஆர் பந்துலுவின் ‘ கர்ணன் ‘ ( டிஜிட்டல் )

அறுபதுகளில் வந்த படம், சிலரின் அரிய முயற்சியால் டிஜிட்டலாக்கப்பட்டு, வரவேற்பும் பெற்றிருப்பது ஆச்சர்யம். பிரம்மாண்டமும், துல்லிய வண்ணமும் காரணமாக இருக்கலாம். சிவாஜியைப் பற்றி அறியாத, அப்போது பிறந்திராத இளைய தலைமுறை கூட, அவ்வப்போது மெல்லிய சிரிப்பினை வெளியிடுவது, இது ஒரு திரைக்காவியம்…

இறந்தும் கற்பித்தாள்

இருக்கும் போது பலவற்றை கற்றுக் கொடுத்த அம்மா இறந்தும் கற்பித்தாள்... மரணத்தின் வலி எப்படி இருக்கும் ?... உணர்த்திற்று அம்மாவின் மரணம். சு.ஸ்ரீதேவி

கவிதை!

அரக்க கரும் நிழலொன்று தன் காலணி அணியா வருங்காலால் மணலை இழைத்துக் கொண்டு வருவது போல மரணத்தின் மாயத்திற்குள்ளிருந்து விடுபட்டு கல்லறையிலிருந்து உயிரோடு எழும்பி வந்தான் அவன்! ஓவியனின் முடிவுறாத ஓவியத்தை மெல்லிய கண்ணாடி வழியாகப் பார்ப்பது போலிருந்தது - அவனின்…

நீர் சொட்டும் கவிதை

நனைந்துவிட்ட கவிதைப்புத்தகத்திலிருந்து நீர் மட்டுமே தாரை தாரையாகச் சொட்டிக்கொண்டிருந்தது சொட்டிய நீர் சிறுகுளமாகித் தேங்கிவிட அதில் திடீரென அன்னப்பறவைகள் நீந்தத்தொடங்கின எங்கிருந்து வந்திருக்கக்கூடுமென்று நினைத்த பொழுதில் அவை என்னைப்பார்த்து அகவின அவற்றின் குரல்களில் வெளிப்பட்டவை யாவும் கவிதைகளாகவே இருந்தன. புத்தகத்தை கையிலெடுத்து…

பின்னூட்டம் – ஒரு பார்வை

திண்ணை இணைய இதழை நான் சமீபமாகத்தான் படிக்க ஆரம்பித்தேன். சில இதழ்களில் எழுதியும் இருக்கிறேன். சமீபத்திய இதழ்களில் வெளிவரும் பின்னூட்டங்களை பார்க்கும்போது ஆச்சர்யமாகவும் அவஸ்தையாகவும் இருக்கிறது. முன் பின் தெரியாத, ஒரே ஒரு கருத்தின் மூலமாக அறிமுகமான ஒருவரின் மீது இவ்வளவு…

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 19

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம்            (மூன்றாம் அங்கம்)                     அங்கம் -3 பாகம் - 19 ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா…

மலைபேச்சு- செஞ்சி சொல்லும் கதை-21

பாதரே பிமெண்ட்டா! எனது பேச்சின் முக்கியமான பகுதிக்கு வந்திருக்கிறேன். நான் காத்திருந்ததற்கு பலன் கிடைத்திருக்கிறது. கன்னிப்பெண்ணின் பிள்ளையை கடவுளாக ஏற்றுக்கொண்ட உங்களையன்றி வேறுயார் என்னையும் என்பிள்ளையையும் புரிந்துகொள்வார்கள் சொல்லுங்கள். நீங்கள் மட்டுமே சிசு வயிற்றுக்குள் வந்தவிதத்தைப்பற்றி கேள்விகேட்கமாட்டீர். அது தெய்வ குற்றமென்று…

காலப் பயணம்

ஆழ் கடல் நீருக்குள் பொழுதெல்லாம் முக்குளித்து ஒரேயொரு துளிநீரை தேடி எடுத்து வந்தேன்.. தரைக்கு வந்த பின்தான் புரிந்தது அது கண்ணீரென்று… ஆகாய வெளியெல்லாம் தாண்டிச் சென்று ஒரேயொரு மின்மினி(ப் பூச்சி) பிடித்து வந்தேன்…, கைசுட்ட பின்தான் புரிந்தது நட்சத்திரம் என்று……