ஏதோ ஒன்று (கடவுள்? நேரம்? வினை)

ப.பார்த்தசாரதி படுபயங்கரமான சாலை விபத்தொன்றில் காலும் கையும் துண்டாய் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பாதி மயங்கிய நிலையில் நசுங்கிய உடல் பிரிந்த கைகளை வேறொருவன் சாக்குப் பையில் போட அனைத்திலும் அவன் பார்வை பட காலன் வரும் ஒலியாய் ஆம்புலென்ஸ் ஒலியெழுப்ப…

கூடங்குளம் அணு உலை, கடலிலிருந்து குடிநீர், அசுரப்படை எதிர்ப்புகள் !

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா “இன்னும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் முக்கியப் பெரும் பிரச்சனைகளாக நீர்வளப் பஞ்சமும், எரிசக்திப் பற்றாக்குறையும் மனிதரைப் பாதிக்கப் போகின்றன!  இந்தியாவைப் பொருத்த மட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும்,…

துளிதுளியாய்….

கோவை புதியவன் ஏர் பஸ் வெளிச்சத்தில் இருட்டாகிப் போனது ஏழையின் பயணம் அப்பாவின் புகையில் மூச்சுத் திணறியது பீடி சுற்றும் மகளின் வாழ்க்கை கதாநாயகன் கட்-அவுட்டுக்கு ஊற்றிய பாலில் வழிந்தோடியது ரசிகனின் முட்டாள்தனம் வாசலில் பிச்சைக்காரன் வயிறு நிரம்பியது கோவில் உண்டியலுக்கு…

மார்கழி காதலி

மார்கழி பனி நீ வெளியே வரும்வரை உன் வீட்டு வாசலில் காத்திருந்து உன்னை தொட்டு குளிர் காய்ந்து கொள்ளும் வெட்டைஇல்லாமல் வாசல் தெளித்தை கண்டு மார்கழி பனி வெட்கி தலை கவிழும் நீ உன்வீட்டு வாசலில் போடும் மாக்கோலத்தை கண்டு கதிரவன்…

பஞ்சரத்னம்

அவனுக்குத் தியாகையன் என்று பெயர் வைத்ததால் சங்கீதத்தில் ஆர்வம் வந்ததா அல்லது சங்கீதம் அவனுக்கு நன்றாக வரும் என நினைத்து அவன் அப்பா பஞ்சரத்னம் அப்படி ஒரு பெயரை அவனுக்குச் சூட்டினாரா என்று தெரியவில்லை. அவன் அம்மா நாகரத்தினம்மாவிற்குப் பையனின் நாமகரணத்தில்…

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 5

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "அம்மா ! தயவு செய்து என்னை நீங்கள் இன்னும் குழந்தையாக நடத்த வேண்டாம் !  நேற்றிரவு நீங்கள் சொன்னதை நான் கவனமாக எடுத்துக் கொள்ள…

பாசாங்குப் பசி

மண்டப முகப்பில் கும்பிடுகளை உதிர்த்து மணமேடை நிழற்பட பதிவு வரிசையைத் தவிர்த்து பசியாத வயிற்றுக்கு பந்தியில் இடம் பிடித்தேன் சூழலுக்கு பொருந்தா வேடம்பூண்ட இடது பக்கயிருக்கைக் கிழவியின் இலை இளைத்துக்கிடந்தது அவர் தேகம் போலவே வலதுகையால் பிட்டதை பாசாங்காய் வாய் கொறிக்க…

………..மீண்டும் …………..

எண்ணற்ற நட்சத்திரக் கோள்களில் தேடி த் தேடி களைத்துபோய் இருக்கையில் எங்கோ ஒரு மூலையின் ஓரமாய் கண்சிமிட்டி அழைக்கிறாய் இறகுகளின் சுமைகளை அப்போது தான் உதிர்த்து பரவலாய் வைத்திருந்தேன் ... அவைகளை எடுத்து பிணைத்து கொண்டு இருக்கையில் ... சப்தப்படாமல் விடிந்து…

புத்தகச் சந்தை 2012 – ஸ்கூப் சுவாரஸ்யங்கள்

ஆட்சி மாறி விட்டதே, அதனால் சென்னையின் மையப்பகுதியில், அண்ணா சாலையில், காயிதே மில்லத் கல்லூரி மைதானத்தில், இந்த முறை சந்தை இருக்கும் என்று எதிர் பார்த்தேன். பொய்த்து விட்டது. வழக்கமாக டிசம்பர் கடைசி வாரத்தில் ஆரம்பிப்பார்கள். இம்முறை சனவரி ஐந்து. அதே…

கவிஞர் ந. பிச்சமூர்த்தியின் மகளுக்கு உதவ

மதிப்பிற்குரிய திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு, இத்துடன் இணைக்கப் பட்டிருக்கும் ஒரு சிறு வேண்டுகோள் கடிதத்தை தங்கள் மேலான இதழில் வெளியிட வேண்டுகிறோம். தள்ளாத வயதில் நோயுடன் போராடும் கவிஞர் ந. பிச்சமூர்த்தியின் மகளுக்கு உதவ தங்கள் மேலான இணைய இதழ் மூலம்…