கசந்த….லட்டு….!

 சிறுகதை:ஜெயஸ்ரீ ஷங்கர்,சிதம்பரம். இன்னைக்கு என்ன அதிசயம்....?  மழை கொட்டோ.....கொட்டுன்னு கொட்டப் போகுது, அங்க பாருங்க...நாடகத்தை....என்று ..பல்லைக் கடித்துக் கொண்டு ரகசியமாகக் கண்ணைக் காண்பித்துச் சொன்ன பியூன் செல்வராசைத் தொடர்ந்து சுற்றியிருந்த  அத்தனை பேர்  அதிசயக் கண்களும் அவன் சொன்ன திசைநோக்கித் திரும்பின.…

மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -5

  ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல !  ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல !  ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி,…

காற்றின்மரணம்

  வல்லிய நரம்பசைவில் சேதமுற்று அழும் பெருங்குரல்-பறையடித்த அதிர்வை உள்வாங்கி புடைக்கும் காயத்தின் கதறல் சுதந்திரத்தைப் பறித்து ஒரு குழலுக்குள் அடிமைப்பட்டு அழும் ஆழம் பெரும் நுகர்தலின் களிப்பில் சாலைக்கரிமக் கரைகளைச் செரித்து மூச்சுக்குழாய் வழி நுரையீரல் ஆலை சென்று முகத்தில்…

மடிப்பாக்கம் மனை தேடி, மாட்டு வண்டியில்

1968 என்று நினைவு. 1969- ஆகவும் இருக்கலாம். இவ்வளவு வருடங்கள் தள்ளிப் பேசும்போது இதில் என்ன பெரிய வித்தியாசம் இருக்கப் போகிறது? மாமியார் இறந்து ஒரு வருடம் ஆயிற்று. வருஷாப்தீகத்துக்காக மனைவியுடன் தில்லியிலிருந்து திருமுல்லைவாயிலுக்கு வந்திருந்தேன். திரும்பி தில்லி போக வேண்டும்.…

நினைவுகளின் சுவட்டில் (95)

ஹிராகுட் போனதுமே எனக்கு உதவியாக இருந்தவர் செல்லஸ்வாமி என்று சொல்லியிருக்கிறேன். எங்கோ தமிழ் நாட்டு மூலையில் இருக்கும்  கிராமத்திலிருந்து இங்கு வேலை பார்க்க வந்திருக்கும் 16 வயதுச் சிறுவனுக்கு வயதில் konjam மூத்த நண்பனாக சொல்லாமலேயே வழிகாட்டியாக இருந்தவர்களில் செல்லஸ்வாமி முக்கியமானவர்.…

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 23

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு இருட்டுக் குடிலிலிருந்து உயிர் வெளியே வந்தது. வெளி வந்த உயிரிடமிருந்து எழுந்த முதல் ஓசை அழுகை அதன் பயணத்தை உணரும் சக்தி அப்பொழுதே அந்த உயிருக்கு இருந்ததோ?! சுற்றி நின்றவர் சிரித்தனர்.…
ஒரு புதையலைத் தேடி

ஒரு புதையலைத் தேடி

    பிரபஞ்சனின் முதல் சிறுகதைத் தொகுதி “ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்” என்னும் தலைப்பில் வெளிவந்தது. அதன் முக்கியமான கதைகளில் ஒன்று “அழகி”. தனது இளம்பருவத்தில் அப்பா அழகான ஒரு பெண்ணுடன் நெருக்கமாகப் பழகிய செய்தியை அறிந்துகொள்கிறான் மகனான இளைஞன்.…

பரிணாமம் (சிறுகதை)

தெருவில் அவன் தன்னைத்தானே சாட்டையால் ‘சுளீர், சுளீர்’ என அடித்துக்கொண்டான். அவன் வெற்றுடம்பில் அடிபட்ட இடங்கள் இரத்தக் கோடுகளைப் போட்டிருந்தன. அவன் மனைவி ‘உர்ர்ர், உர்ர்ர்’ எனத்தேய்த்துக் கொண்டிருந்த உருமிமேளம் அந்த நிகழ்வை மேலும் உக்கிரமாக்கிக் கொண்டிருந்தது. கூட்டம் வேடிக்கை பார்த்து…

உன் காலடி வானம்

அன்றைய மழைக்கால முன்னிரவில் அவளது நீண்ட நேரக் காத்திருப்பின் முடிவு பேருந்துத் தரிப்பிடத்தில் தேங்கி நின்றதோர் கணம் தாண்டிச் சென்ற எவரையோ அழைத்துப் பேசி கூடச் செல்லுமுனது பார்வையின் கீழே நழுவியதவளது பூமி தெருவோரம் எவரோ வெட்டி வீழ்த்தியிருந்த மரத்தினை நோக்கிக்…

மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 36

42. கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய நகர சாம்ராச்சியத்தை உலுக்கிய உள்நாட்டு பிரச்சினை முடிவுக்கு வந்ததைப்போல தெரிகிறது. கிருஷ்ணபுர படை எறும்பு கூட்டத்தில் தீக்கங்கு விழுந்ததுபோல சிதறி ஓடுகின்றது. ஆளுயர புரவியொன்றில் இரகுநாதநாய்க்கர் கம்பீரமாக அமர்ந்திருந்தார். ஆழம்குறைந்திருக்குமென நம்பப்பட்ட கொள்ளிட நதியின்…