மணிராமின் “ தமிழ் இனி .. “

This entry is part 14 of 32 in the series 13 ஜனவரி 2013

அமெரிக்கக் கலாச்சாரத்தில், அமெரிக்காவில் வளரும், பிள்ளைகளின் மொழியிலிருந்து, அன்னியப்படும் தமிழைப் பற்றிய, ஒரு உணர்வுப் பூர்வமான குறும்படம்.

கிருஷ்ணமூர்த்தி குமாரமங்கலம் ராமசாமி, அமெரிக்காவில் இருக்கும் தன் மகன் சுவாமிநாதன் வீட்டிற்கு, வரும் காலகட்டத்தில் இருந்து ஆரம்பிக்கிறது படம்.

கிராமத்தில் பிறந்து, நகரத்தில் வளர்ந்த ஒரு தென்னிந்தியனின் மன உணர்வோடு இருக்கும் கிருஷ்ணமூர்த்தி, அமெரிக்காவின் கலாச்சாரத்தோடு ஒப்ப மறுக்கும் காட்சிகள் மிகவும் இயல்பாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. தேக ஆரோக்க்¢யம் என, எந்நேரமும் ஓடிக் கொண்டிருக்கும் அமெர்¢க்கர்கள், குவளையில்லாத “ ஸ்பவுட்” குடிநீர் குழாய்கள், எந்நேரமும் ஆங்கிலத்திலேயே பேசிக் கொண்டிர்க்கும் பேரன் தேவா, எனச் சகலமும், அவருக்கு முரண்.

பிள்ளையும், மருமகளும், தமிழில் பேசுகிறார்கள். ஆனால், அவர்களுக்குள்ளே ஆங்கிலம் நுழைந்து வ்¢டுகிறது. அப்பாவுக்காக, தமிழ் தொலைக்காட்சி சேனல் போடுகிறான் பையன். தாத்தா, ராஜா, அரக்கன் என, அம்புலிமாமா கதைகளைப் பேரனுக்குச் சொல்லித், தூங்க வைக்கிறார். அவன் தூங்கியவுடன், மகனிடம், ‘வீட்டில் பேசாவிட்டால்’ தமிழ் செத்து விடும், என்கிறார். தாத்தா ஊருக்குப் போகும் நாளில், பேரன் “ போய்ட்டு வாங்க தாத்தா “ என்று தமிழ் பேசுகிறான்.

தேவ் வளர்ந்து, நீலிமா ராமச்சந்திரனை திருமணம் செய்வதும், அவர்களுக்கு ஒர் பையன் பிறப்பதும், இறுதிக் கட்டம். முன்னோர்கள் பற்றிய கட்டுரைக்கு, தாத்தா க்¢ருஷ்ணமூர்த்தியின் புகைப்படங்களையும், வரலாறையும் சொல்கிறான் தேவ். தாத்தா அவனுக்குப் பரிசாகக் கொடுத்த கைக்கடிகாரத்தை, மகனுக்கு தேவ் கொடுப்பதுடன், படம் முடிகிறது.

“ வாட் இஸ் அவர் ஏன்ஷியண்ட் லேங்க்வேஜ்? “

மகனின் கேள்விக்கு கொஞ்சம் யோசிக்கிறான் தேவ். தாய் நீலிமாவுக்கு அது தெரியவேயில்லை.

“ ஆங் ! இட்ஸ் டமில்..”

“ வாட்ஸ் தி ஸ்பெல்லிங்”

“ டி ஏ எம் ஐ எல் – டமில் “

ஒரு இடத்தில் கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார்: “ இந்தியாவில கூட எல்லாம் கான்வெண்ட்ல படிக்கிறாங்க.. அதனால இங்கிலீஷ்தான்.. ஆனா அங்கே தமிழ் எப்படியாவது பொழைச்சுக்கும்.. ஆனா இங்கே? வீட்ல பேசலேன்னா, தமிழ் செத்துடும். “

இந்த ஒரு வசனம்தான் மொத்த படத்தின் அடிநாதம். சொல்ல வந்ததை, அத்¢க போதனை இல்லாமல், பிரச்சார நெடி தூக்கலாகத் தெர்¢யாமல், சொல்லியதற்காக, மணிராம் பாராட்டப்பட வேண்டியவர்.

இயல்பான நடிப்புடன் திருமுடி துளசிராம் ( தாத்தா கிருஷ்ணமூர்த்தி ), சிறுவன் தேவா (விஸ்வாஸ் மணி ), துருவா நாயர் ( நிக் நாதன் ), வித்யா சுப்பிரமணி ( லட்சுமி), மணிராம் ( இளவயது சுவாமிநாதன் ), ஆதி கோவிந்தராஜன் ( வாலிபன் தேவ் ), ஜோயா நேண்டி காஸி ( நீலிமா ), என அனைவரும் அசத்துகிறார்கள். இசை இந்தப் படத்திற்குப் பெரும் பலம். இசைஞர் பாலமுரளி பாலு பாராட்டுகுரியவர். ஈஸ்வரனின் துல்லியமான ஒளிப்பதிவு, படத்திற்குப் பெருமை சேர்க்கிறது.

ஒரு மேடை நாடகத்துக்கான கரு இது.. வெளிநாட்டில் பிள்ளை, மாட்டுப்பெண். பிரசவத்திற்கு உதவியாக அம்மாக்கள் அமெரிக்கா போவதும், அப்பாக்கள் தனிமையில் வாடுவதும் என்று இதுவரை ‘ காத்தாடி ‘ விட்டுக்கொண்டிருந்த ராமமூர்த்திகளும், வரதராஜன்களும் இதைப் பற்றி யோசித்தால் நல்லது.

0

Series Navigationராம்சரண் ( தெலுங்கு மொழி மாற்றப் படம் )அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் தமயந்தியின் குரல்
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Comments

  1. Avatar
    paandiyan says:

    //வெளிநாட்டில் பிள்ளை, மாட்டுப்பெண். பிரசவத்திற்கு உதவியாக அம்மாக்கள் அமெரிக்கா போவதும், அப்பாக்கள் தனிமையில் வாடுவதும் என்று இதுவரை ‘ காத்தாடி ‘ விட்டுக்கொண்டிருந்த ராமமூர்த்திகளும், வரதராஜன்களும் இதைப் பற்றி யோசித்தால் நல்லது//

    அதுசரி நம்ப ஒரு மாதரி இனி மொழியை வைத்து கூவ வேண்டியதுதான். முதலில் இது ஒரு தொலைகாட்ச்யில் வந்தது அதை கூட விமர்சனம் பண்ணுபவர் எதற்காக மறைக்கவேண்டும். அதில் இருந்த ஜட்ஜ் சுரேஷ் கிருஷ்ணவ தமிழ் தெரியாமல் பேசமுடியாமல் நெளிந்தார் — அதை விட இனி வரும் வாரம்களில் எப்படி போகும் என்று பார்க்க வேண்டும் என்றுகூட ஒரு பஞ்ச் வைத்தார் . ஒரு கான்செப்ட் புடித்து இருந்தால் அதை விமர்சனம் மட்டும் இல்லை அதை வைது யாரு யாருக்கோ உபதேசம் கூட பண்ணலாம். வர வர நாட்டில் எல்லரும timesnow அர்னாப் மாதரி ஆக்கி கொண்டு வருகின்றார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *