நாம் பிறந்தோம் நன்கு வளர்ந்தோம் தவழ்ந்தோம் நடந்தோம் பள்ளி சென்றோம் படித்தோம் விளையாடினோம் இருவர் வாழ்விலும் பேதம் இல்லை இருவர் வளர்ப்பிலும் பேதம் இல்லை இனிமையான நாட்கள்தான் அவை பசுமை நிறைந்த நினைவுகள் படிப்பில் சிறந்தவள் எனப் பாராட்டப் பெற்றேன் பதக்கங்கள் வாங்கினேன் விளையாட்டில் சிறந்தவள் எனப் பாராட்டப் பெற்றேன் பதக்கங்கள் வாங்கினேன் ஆடல் பாடல் என எதையும் விட்டு வைக்கவில்லை நான் அவற்றிலும் பரிசுகள் வாங்கினேன் திருமணகாலம் வந்தது என் மகள் பதக்கங்கள் வாங்கியவள் என்றார் தந்தை எவ்வளவு சவரன் தேறும்? என்றார் உமது தந்தை என் மகள் கலைகளில் வல்லவள் என்றார் தாய் சமையல் கலையை அறிவாளோ? என்றார் உமது தாய் உமக்கும் சமையல் தெரியுமா? கேட்கத் தோன்றவில்லை எனக்கு கேட்கவில்லை என் பெற்றோரும் மணந்தோம் மகிழ்ந்தோம் எதிர்காலத் திட்டமிட்டோம் பணிக்குச் சென்றேன் நானும் என் கல்வியறிவு வீணாகவில்லை வந்தது வருமானம் கணக்கிட்டோம் நாம் நம் சந்ததியின் எதிர்காலம் சிறக்குமென மாலைவரை கடும் உழைப்பு தீராத சலிப்பு களைப்பு மேலதிகாரியின் முறைப்பு வீடு திரும்பியது சோர்வுற்ற உடல் ஓய்வு விரும்பியது அசதியான மனம் இருக்கையில் சரிந்து சற்றே இளைப்பாறச் சொன்னது அறிவு இரவுணவு சமைக்கவில்லையா? இரக்கமற்று கேட்தது உமது குரல் உழைத்த களைப்பு ஏன் இருவருக்கும் பொது இல்லை புரியவில்லை என் மனதுக்கு பயிலும் படிப்பில் வேறுபாடில்லை செய்யும் பணியிலும் வேறுபாடில்லை சமையல்கலை பெண்களுக்கு மட்டுமே என்ற பிறந்த வீட்டுச் சீதனமா?
- ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி-2013
- ஒட்டுப்பொறுக்கி
- சரித்திர நாவல் போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 13
- தாகூரின் கீதப் பாமாலை – 57 என் உறக்கம் போனது !
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -16 என்னைப் பற்றிய பாடல் – 9 (Song of Myself) விடுதலைக் குரல்கள் ..!
- காணிக்கை
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……22 வல்லிக்கண்ணன் – ‘வல்லிக்கண்ணன் கடிதங்கள்’
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -2 மூன்று அங்க நாடகம்
- வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் – 49
- ‘அப்பு’வின் மகாராணியும் ‘ஆதி’யின் பகவானும்
- தொல்காப்பியம் ஆந்திரசப்தசிந்தாமணி கூறும் எழுத்தியல் கோட்பாடு
- ஒற்றைச் சுவடு
- ஐந்து கவிதைகள்
- தீராத சாபங்கள்
- அக்னிப்பிரவேசம்-28
- எம் ஆழ்மனப் புதையல்!
- குறும்படப்போட்டி
- செவ்விலக்கியங்களில் ‘கூந்தல்’
- ஈசாவின் பிளாங்க் விண்ணுளவி பெரு வெடிப்பின் முதன்முதல் பூர்வத் தோற்றப் பிரபஞ்சத் தடப்படம் எடுத்தது
- தற்கொலைகளால் நிரப்பப்பட்ட எதிர்ப்பின் எழுத்து
- பாரத விண்வெளி ஆய்வுப் பிதா டாக்டர் விக்ரம் சாராபாய்
- பொதுவில் வைப்போம்
- அர்த்தராத்திரி ஃபோனும், மாணவர்கள் நிலையும்
- செல்லப்பா – தமிழகம் உணர்ந்து கொள்ளாத ஒரு வாமனாவதார நிகழ்வு -7
- குரல்வளை
- முறுக்கு மீசை
- வெளுத்ததெல்லாம் பால்தான்!
- ஒரு தாயின் கீதா உபதேசம் ..!
- காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை