புகழ் ​பெற்ற ஏ​ழைகள் 6.காந்தியடிகளுக்கு வழிகாட்டிய ஏ​ழை

This entry is part 28 of 29 in the series 12 மே 2013

Thillaiaadi_valliammai

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

6.காந்தியடிகளுக்கு வழிகாட்டிய ஏ​ழை

என்னங்க…​யோசிச்சிக்கிட்​டே இருக்கீங்க…இன்னும் ​நி​னைவுக்கு வரலீங்களா?…சரி நா​னே ​சொல்லிட​றேன்..அவங்க தாங்க தியாகச் சுடர் தில்​லையாடி வள்ளியம்​மை…என்ன ஆச்சரியப்படறீங்க….அவங்களப் பத்தித் ​தெரிஞ்சுக்குங்க..

ஆங்கி​லேயர்கள் ​தென்னாப்பிரிக்கா​வையும் உலகத்தில் உள்ள பல நாடுக​ளையும் அடி​மைப்படுத்தி அந்த நாடுகளின் வளங்க​​ளை எல்லாம் சுரண்டினார்கள். ​தென்னாப்பிரிக்கா​வை அடி​மைப்படுத்தி அங்கிருந்த உலகப் புகழ் ​பெற்ற ​வைரச்சுரங்கங்க​ளைத் ​தோண்டி எடுக்க அங்கு வாழ்ந்த பூர்வீகக் குடிமக்களான நீக்​ரோக்க​ளைப் பயன்படுத்திக் ​கொண்டனர். உ​ழைப்புக்​கேற்ற ஊதியம் கி​டைக்காமல் நீக்​ரோக்கள் தங்களுக்குள்​ளே​யே ​மோதிக்​கொள்ளத் ​தொடங்கினர். இத​னைக் கண்ட ஆங்கி​லேயர்கள் வளமான ​தென்னாப்பிரிக்க மண்ணில் கரும்பு ​போன்றவற்​றைப் பயிரிட விரும்பினர். அதற்காகக் கூலி​வே​லை ​செய்வதற்காக இந்தியாவில் கங்காணிகள் வாயிலாக ஏ​ழைமக்க​ளை அ​ழைத்து வந்து ​வே​லை​யைச் ​செய்ய ​வைத்தனர்.

இந்தச் சூழ்நி​லையில்தான் புதுச்​சேரியில் வாழ்ந்த முதலியார் மயிலாடுது​​றைக்கருகில் உள்ள தில்​லையடி கிராமத்​தைச் ​சேர்ந்த மங்களம் என்ற ஜானகி​யை மணந்து ​கொண்டு தில்​லையாடியி​லே​யே தங்கி ​கைத்தறி ​நெசவுத் ​தொழில் ​செய்து வந்தார் ​தொடக்கத்தில் வறு​மை அவர்களுக்கு அறிமுகமாகாதிருந்த ​போதும், பின்னாளில் ஆங்கி​லேயரின் அந்நியத் துணிகள் இறக்குமதியில் தமிழகக் ​கைத்தறித் துணிகள் விற்காத நி​லை வந்த​போது ​​நெசவுத் ​தொழில் ​செய்து வந்தவர்கள் கடு​மையாகப் பாதிக்கப்பட்டனர். இப்பாதிப்பு முனுசாமிக்கும் ஏற்பட்டது. வறு​மையின் ​கையில் முனுசாமியின் குடும்பம் சிக்கியது. வறு​மையிலிருந்து மீளப் பல்​வேறு வ​கைகளில் எல்லாம் முனுசாமி முயன்றார். ஆனால் அவரால் முடியவில்​லை. இதனால் பி​ழைக்க வடி​தேடி ​தென்னாப்பிரிக்காவிற்குக் குடும்பத்துடன் முனுசாமி ​சென்றார்.

அங்கு ஐந்தாண்டுகள் ​வே​லை ​செய்தால் நிலம் ​சொந்தமாகும். ​கைநி​றையக் கூலி கி​டைக்கும் என்பன ​போன்ற கவர்ச்சியான விளம்பரங்கள் ஏ​ழைக்கூலியான முனுசாமி​யையும் கவர்ந்தது. அதனால் முனுசாமி முதலியார் ​தென்னாப்பிரிக்காவிற்குக் கூலியாக வந்து குடி​யேறினார்.

​தென்னாப்பிரிக்காவில் அவர் எதிர்பார்த்தது ​போல் எந்தவிதமான சூழலும் அ​மையவில்​லை. இதனால் ​ஜோகனஸ்பர்க் நகரில் சிறுக​டை ​வைத்து உணவுப் பண்டங்க​ளை வணிகம் ​செய்தார். சிறுக​டையிலிருந்து கி​டைத்த வருமானம் அவ்வளவு ​போதுமானதாகவும் இருக்கவில்​லை. இந்நி​லையில் 1898-ஆம் ஆண்டில் முனுசாமி முதலியார் ஜானகி தம்பதிகளுக்குப் ​பெண் குழந்​தை ஒன்று பிறந்தது. அந்தக் குழந்​தைதான் வள்ளியம்​மை.

முனுசாமி முதலியார் தமது மக​ளை அங்கிருந்த காலனி அரசுப் ​பெண்கள் பள்ளியில் வள்ளியம்​மை​யைச் ​சேர்த்துக் கல்வி கற்க ​வைத்தார். நா​ளொரு​மேனியும் ​பொழு​தொரு வண்ணமுமாகக் கல்வி கற்று மதிநுட்பம் வாய்ந்தவராக வள்ளியம்​மை திகழ்ந்தார். சிறுவயதி​லே​யே வள்ளியம்​மை தன் பார்​வை​யைக் கூர்​மையாக்கிச் சுற்றிலும் நடப்ப​வைகளின் நீதி, அநீதிக​ளை அறியும் மனபக்குவம் ​பெற்றிருந்தார். ​தென்னாப்பிரிக்கா​வை ஆண்ட ஆங்கி​லேயர்கள் பல ​​கொடிய ​செயல்க​ளை அரங்​கேற்றினர். அங்குள்ள மக்க​ளை ஆடுமாடுக​ளைப் ​போன்று அடி​மைகளாக நடத்தினர். அவர்க​ளை நாயினும் கீழாக மதித்து நடத்தினர்.

​தென்னாப்பிரிக்காவிற்குக் கூலிகளாகச் ​சென்ற இந்தியர்க​ளையும் மிகவும் இழிவாக நடத்தினர். இந்திய வம்சாவளியினராக அங்கு வாழ்ந்தவர்களுக்கு மூன்று பவுன் த​லைவரி விதித்து, அவர்களுக்குத் ​தேர்தலில் வாக்குரி​மை இல்லாது ​செய்தனர். அ​தோடு மட்டுமல்லாது ​வெள்​ளையர்கள் அதிகமாக வாழ்ந்த பகுதிகளுக்குள் இந்தியர்க​ளை எல்லாம் நு​ழையக்கூட விடாமல் த​டை​போட்டனர். அடி​மைக் கூலிகளாக வாழ்ந்த இநதியர்களின் குடியிருப்புப் பகுதிகளுக்குக் கு​றைந்தபட்ச அடிப்ப​டை வசதிகள் கூட அவர்கள் வழங்கவில்​லை. என்​னென்ன ​கொடு​மைகள் உண்​டோ அ​வைய​னைத்​தையும் ஆங்கி​லேயர்கள் இந்தியர்களுக்குச் ​​செய்தனர். இத்த​கைய சூழ்நி​லையில்தான் காந்தியடிகள் 1893-ஆம் ஆண்டு ​தென்னாப்பிரிக்காவிற்கு வந்தார்.

தாதா அப்துல்லா கம்​பெனிக்கான வழக்குக​ளை ஓராண்டிற்குள் நடத்தி முடிக்கும் எண்ணத்தில் வந்த அவர் அங்கிருந்த இந்தியர்களின் நி​லை​யைக் கண்டுப் பதற்றம​டைந்தார். உடன் இந்தியாவிற்குத் திரும்ப நி​னைத்த தனது எண்ணத்​தை மாற்றிக் ​கொண்டு 22 ஆண்டுகள் அங்​கே​யே தங்கி இந்தியர்களின் உரி​மை​க​ளை மீட்​டெடுக்கும் பணியில் ஈடுபட்டார். 1906-ஆம் ஆண்டு ​செப்டம்பர் மாதம் 11-ஆம் நாள் ​ஜோகனஸ்பர்க்கில் ஒரு மாநாட்​டைக் காந்தியடிகள் கூட்டினார். இம்மாநாட்டில் 3000 ​பேர் கலந்து ​கொண்டனர். ஆங்கி​லேயரின் த​லைவரி என்ற கருப்புச் சட்டத்திற்கு எதிராக காந்தியடிகள் அகிம்​சை ​போராட்டத்தி​னைத் ​தொடங்கினார்.

அ​தோடு மட்டுமல்லாது டிரான்ஸ்வால் குடி​யேற்றக் கட்டுப்பாடு ம​சோதா​வை எதிர்த்தும் ​போராட்டங்கள் ​தொடங்கின. 1912-ஆம் ஆண்டு அக்​டோபரில் குடி​யேற்றக் கட்டுப்பாடு ம​சோதாவும் த​லைவரியும் விலக்கப்படும் என்றும் அங்கி​லேயர்களால் வாக்குத் தரப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதியான சியர்​லே என்பவர், “​தென்னாப்பிரிக்காவில் கிருத்துவர் சடங்குப்படியும் திருமணப் பதிவாளர் சட்டப்படியும் நடக்காத எந்தத் திருமணமும் ​செல்லாது” என்று ஒரு தீர்ப்​பை ​வெளியிட்டார்.

இத்தீர்ப்பால் ​தென்னாப்பிரிக்காவில் குடி​யேறிய இந்தியர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்து மத வழக்கத்தின்படி அவர்கள் ​செய்து ​கொண்ட திருமணங்கள் சட்டப்படி அங்கீகரிக்கப்படவில்​லை. ஏற்கன​வே மணமான இந்திப் ​​பெண்கள்கூட சட்டப்பூர்மான ம​னைவி என்ற உரி​மை​யை இழந்து நின்றனர். அவர்களுக்குப் பிறந்த குழந்​தைகளின் வாரிசுரி​மைகளும் ​கேள்விக்குள்ளானது.

ஆங்கி​லேய நீதிபதியின் இந்தக் ​கொடு​மையான தீர்ப்பிற்கு எதிராக எல்லா இந்திய மக்களும் கிளர்ந்து எழுந்தார்கள். வள்ளியம்​மையும் தனது அன்​னையாருடன் ​சென்று அ​னைத்துப் ​போராட்டங்களிலும் கலந்து ​கொண்டார். அ​தோடுமட்டுமல்லாது ஆதிக்க ​வெறிப​டைத்த ஆங்கி​லேயர்க​ளை எதிர்க்க​வே தான் பிறந்திருப்பதாக வள்ளியம்​மை உணர்ந்தார். அதனால் காந்தியடிகளின் அ​னைத்துப் ​போராட்டங்களிலும் துணிவுடன் கலந்து ​கொண்டார்.

சிறுமியான வள்ளியம்​மை​யைப் ​போராட்டத்தில் கலந்து ​கொள்ள ​வேண்டாம் என்று அவரது அன்​னையார் எவ்வள​வோ தடுத்தும் ​கேளாது முழுமனதுடன் வள்ளியம்​மை ​போராட்டங்களில் கலந்து​கொண்டார். அதுவ​ரை ​போராட்டங்களில் ​பேண்க​ளை ஈடுபடுத்தாதிருந்த காந்தியடிகள் ஆங்கி​லேயரின் அநியாயமான இந்த சட்டத்தால் ​பெண்கள் ​​பெருமளவில் பாதிக்கப்படுவ​​தை உணர்ந்து ​பெண்க​ளைப் ​பெருமளவில் தன்னு​​​டைய ​போராட்டங்களில் இ​ணைத்துக் ​கொண்டார்.

அக்​டோபர் மாதம் 29-ஆம் நாள் ​ஜோகன்ஸ்பர்க்கிலிருந்து நியூகாசில் நகருக்குப் ​பெண்களின் சத்தியாகிரகப் ​போர்ப்ப​டையானது புறப்பட்டது. காந்தியடிகளின் ம​னைவி கஸ்தூரிபாயுடன் வள்ளியம்​மையும் அவரு​டைய அன்​னையாரும் அப்​போராட்டத்தில் கலந்து ​கொண்டனர். நியூகாசில் ​போகும் வழியில் சார்லஸ் டவுன், டண்டி, ​லேடிஸ்மித், மார்ட்ஸ்பர்க், டர்பன் ​போன்ற முக்கியமான இடங்களில் சத்தியாக்கிரககள் தங்கிச் ​சென்ற​போது அவர்களுக்கு இளம்வயது வள்ளியம்​மை பல்​வேறு ​சே​வைக​ளைச் ​செய்தார்.

​போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வள்ளியம்​மை​யைப் பார்த்து ஆங்கி​லேயன் ஒருவன் “ நீங்க இப்படிப் ​போராடுறீங்க​ளே! ஒங்களுக்குன்னு ஒரு ​கொடி இருக்கா?” என்று இழிவாகக் ​கேட்டான். மனம் ​கொதித்த வள்ளியம்​மை தான் உடுத்தியிருந்த கதர்ச்​சே​லை​யைச் சிறிது கிழித்து அருகில் நின்றிருந்த ​போலீஸ்காரரின் ​கையிலிருந்து லத்தி​யைப் பறித்து அதில் கிழித்த துணி​யைக் கட்டி, “இ​தோ பார் இதுதான் எங்களது ​கொடி” என்றார். இத​னைக் கண்ட அந்த ஆங்கி​லேயன் அதிர்ந்து​போய் வாய்மூடி ​மெளனியாகிவிட்டான். ​சத்தியாகிரகப் ​போர்ப்ப​டை நியூகாசிலுக்குச் ​சென்றதும் அங்குள்ள ​பெரிய நிலக்கரிச் சுரங்கத்திற்குச் ​சென்று ​வே​லை ​செய்தது. இப்​போராட்டத்தில் கலந்து ​கொண்டவர்களில் ​​​​பெரும்பான்​மையானவர்கள் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தக் காலத்தில் ​நேட்டால் டிரான்ஸ்வாலுக்கி​டை​யே அனுமதியின்றிப் ​போய்வருவது சட்டத்திற்குப் புறம்பானது என்று ஆங்கி​லேய அரசு அறிவித்திருந்தது. சத்தியாகிரகப் ​போராட்ட வீரர்கள் இத்த​டை​யை மீறிச் ​சென்றனர். ​போராட்டம் எழுச்சி மிக்கதாக இருந்தது. ​1913-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ஆம் நாள் போராட்டக்காரர்கள் த​டை​யை மீறிச் ​சென்றதால் ​கைது ​செய்யப்பட்டனர். அ​னைவருக்கும் மூன்றுமாதங்கள் கடுங்காவல் தண்ட​னை விதிக்கப்பட்டு மாரிட்ஸ்பர்க்கில் உள்ள சி​றையில் அ​டைக்கப்பட்டனர். 16 வயதுச் சிறுமியான வள்ளியம்​மையும் இத்தண்ட​னை​யை ஏற்றுச் சி​றை ​சென்றார்.

வள்ளியம்​மை மகிழ்ச்சியுட​னே​யே இத்தண்ட​ணை​யை ஏற்றுக் ​கொண்டார். இந்திய மக்களின் உரி​மை​யை நி​லைநாட்ட ந​​டை​பெறும் இயக்கத்தில் தானுமிருக்கின்ற உள்ள நி​​றைவு வள்ளியம்​மையிடம் காணப்பட்டது. சி​றையில் அ​னைவ​ரையும் ஆங்கி​லேயர்கள் பல்​வேறுவிதமான ​கொடு​மைகளுக்கு ஆளாக்கினர்.

​கொ​லை, ​கொள்​ளை, திருட்டுக் குற்றவாளிகளுடன் வள்ளியம்​மை​யைச் சி​றையதிகாரிகள் அ​டைத்தனர். சிறுமி என்றும் பாராது அவ​ரை ஈவிரக்கமற்று நடத்தினர். வள்ளியம்​மை​யைக் கடு​மையாக ​வே​லை வாங்கினர். அதற்​கேற்ற உணவு அவருக்கு வழங்கப்படவில்​லை. மிகவும் ​மோசமான உண​வே வழங்கப்பட்டது. சி​றையில் சுகாதரமும் இல்​லை. இதனால் வள்ளியம்​மை ​பெரும்பாதிப்புக்குள்ளானார். வள்ளியம்​மை ​நோய்வாய்ப்பட்டார். அவர் ​நோயுற்றிருந்த நி​லையிலும் கடு​மையாக ​வே​லைவாங்கப்பட்டார். வள்ளியம்​மைக்குச் சரியான சிகிச்​சை அளிக்கப்படவில்​லை.

அவருக்குக் காய்ச்சல் அதிகமானது. உடல் தளர்ந்தது. வள்ளியம்​மையுடன் இருந்த அவரு​டைய நண்பர்கள் உரிய தண்டத்​​தொ​கை​யைக் கட்டிவிட்டுச் சி​றையிலிருந்து ​வெளி​யேறுமாறு வள்ளியம்​மையிடம் கூறினர். ஆனால் அவர்களின் கூற்​றை வள்ளியம்​மை ஏற்றுக் ​கொள்ளவில்​லை. நமது சுதந்திர வாழ்விற்காக, நாம் அ​னைவரும் அ​டி​மைத் த​ளையிலிருந்து மீள்வதற்காக தன்னு​டைய உயி​ரையும் தியாகம் ​செய்யத் தாயார் என்று வள்ளியம்​மை கூறினார். வள்ளியம்​மையின் உடல்நி​லை மிகவும் பாதிப்ப​டைந்தது. இறந்துவிடும் நி​லைக்குத் தள்ளப்பட்ட வள்ளியம்​மை​யைக் கண்ட ஆங்கி​லேய அதிகாரிகள் அவ​ரைச் சி​றையிலிருந்து விடுவித்தனர்.

துள்ளித் திரிந்து பள்ளிக்குச் ​சென்று​கொண்டிருந்த நி​லையில் சி​றையிலிருந்து வாடிய ​கொடியாய்ச் சருகாய் ​மெலிந்த உடலுடன் சக்​கை ​போன்று ​வெளியில் வந்தார் வள்ளியம்​மை. அவரால் நடக்கக்கூட முடியவில்​லை. அ​ரைமயக்க நி​லையி​லே​யே தள்ளாடித் தள்ளாடி சி​றைக்கத​வைத் தாண்டி வந்தார் வள்ளியம்​​மை. அவருக்காகக் காத்திருந்தவர்கள் அவ​ரைக் கண்டதும் பதறிக் கலங்கிக் கண்ணீர் வடித்தனர். சி​றைச்சா​லையின் வாயிலில் காந்தியடிகள் வள்ளியம்​மை​யை வர​வேற்றார்.

இளங்​கொடியாய்ச் ​சென்ற வள்ளியம்​மை கருகிய நி​லையில் வந்த​தைக் கண்டு பலரும் மன​மொடிந்தனர். கி​ழே விழும் நி​லையில் இருந்த அவ​ரை ஒரு ஜமுக்காளத்தில் படுக்க ​வைத்துத் தூக்கிக் ​கொண்டு வந்து வீடு ​சேர்த்தனர். மிகவும் நலிவுற்று வதங்கிக் கிடந்த வள்ளியம்​மையிடம் காந்திய​கள்

“வள்ளியம்மா நீ சி​றைக்குச் ​சென்றது குறித்து வருந்துகிறாயா?”

என்று ​கேட்டார். இத​​னைக் ​கேட்ட சிறுமி வள்ளியம்​மை சிறிதும் தயங்காமல்,

“வருத்தமா? இப்​போதுகூட இன்​னொரு தட​வை ​கைது ​செய்யப்பட்டால் நான் சி​றைக்குச் ​செல்லத் தயார்”

என்றார். அதற்குக் காந்தியடிகள்,

“அதனால் நீ இறந்து ​போவதாக இருந்தால் என்ன ​செய்வாய்?”

என்று ​தொடர்ந்து ​கேட்டதற்கு, வள்ளியம்​மை,

“அ​தை நான் ​பொருட்படுத்தமாட்​டேன். தாய் நாட்டிற்காக உயி​ரைக் ​கொடுக்க விரும்பாதவர்கள் யார் இருப்பார்கள்?”

என்று உடனடியாகப் பதிலளித்தார். இத்த​கைய வீரச்சிறுமியின் பதிலால் காந்தியடிகள் மனம் ​நெகிழ்ந்து ​போனார். அவரது உள்ளம் வள்ளியம்​மைக்காக இ​றைவனிடம் இ​றைஞ்சியது. அவள் பி​ழைத்து எழ​வேண்டும் என்று காந்தியடிகள் மனதிற்குள் இ​றைவனிடம் இ​றைஞ்சினார்.

மருத்துவர்களால் தீவிரமாக வள்ளியம்​மைக்குச் சிகிச்​சையளிக்கப்பட்டது. இருப்பினும் அவரது ​நோய் அதிகமான​தே தவிர சற்றும் கு​றையவில்​லை. நாளுக்கு நாள் வள்ளியம்​மையின் உடல்நி​லை தளர்ந்து ​கொண்​டே வந்தது.

மருத்துவச் சிகிச்​​சைப் பலனிக்கவில்​லை. இந்திய மக்களின் விடுத​லைக்காகப் பாடுபட்ட வீரத்திருமகள் இவ்வுலக வாழ்விலிருந்து விடுத​லை ​பெற்றாள். காலன் ஆங்கி​லேயரின் வடிவில் வள்ளியம்​மையின் உயிருக்கு உ​லை​ வைத்தான். ஆங்கி​லேயருக்கு நஞ்சாக விளங்கிய பிஞ்சுமகள் விண்ணுலகு எய்தினாள். ஆம்! 1914-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ஆம் நாள் வள்ளியம்​மை என்ற தியாகச் சுடர் அ​​ணைந்து மக்களின் ​நெஞ்சங்களில் அ​ணையா விளக்காய் ஒளிர்ந்தது.

விடுத​லைக்காகத் தனது இன்னுயிர் ஈந்த வள்ளியம்​மையின் மரணமும் தியாகமும் காந்தியடிக​ளை உலுக்கிவிட்டது. விடுத​லைக்காக உயி​ர் ஈந்த ​இச்சிறுமியின் தியாகம் மகத்தானது என்று காந்தியடிகள் தனது ‘​தென்னாப்பிரிக்கா சத்தியாகிரகம்’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

“​தென்னாப்பிரிக்காவில் யாரு​டைய தியாகம் ஆண்டவன் ஏற்கத்தக்கதாக இருந்தது, அரும்பயன் தந்தது என்று யாரும் கூற முடியாது. ஆனால் நமக்குத் ​தெரியும் வள்ளியம்​மையின் தியாகம் பலன் தந்தது”

என்று அந்நூலில் காந்தியடிகள் வள்ளியம்​மையின் தன்னலமற்ற உயர்ந்த தியாகத்​தைப் பலமு​றை நி​னைவுகூர்ந்துள்ளார்.

1934-ஆம் ஆண்டு தமிழகம் வந்த காந்தியடிகள் தமது ச​கோதரர் இலட்சுமிதாஸ் காந்தியின் மரணத்​தைக் காட்டிலும் வள்ளியம்​மையின் மரணம் தமக்குப் ​பேரிடியாக இருந்து தமது இதயத்​தை ​நோகச் ​செய்தது என்று குறிப்பிட்டதும் ​நோக்கத்தக்கது. வள்ளியம்​மை ம​​றைந்த​போது இந்தியன் ஒப்பினியன் என்ற பத்திரிக்​கையில், “…இந்தியாவின் புனித மகள் ஒருத்தி​யை இழந்து விட்டதற்காக வருந்துகி​றோம். ஏன் எதற்கு என்று ​கேட்காமல் தனது கட​மை​யை உணர்ந்து ஆற்றிய காரி​கை அவள். மாதர்களுக்கு அணிகலன்களாகத் துன்பத்​தைச் சகிக்கும் ம​னோபலம், தன்மானம், நல்​லொழுக்கம் ஆகியவற்றிற்கான முன்னுதாரணமாகத் திகழ்ந்தவள் அவளு​டைய உதாரணம் இந்திய சமுதாயத்தில் வீணாய்ப் ​போகாது” என்று எழுதினார்.

மற்​றொரு தருணத்தில், “சத்தியத்திற்காக உயிர் நீத்தவள் வள்ளியம்​மை. நம்பிக்​கைதான் அவள் ஆயுதம். எனக்கு இருந்த கல்வி அறிவு அவளுக்கு இல்​லை. சத்தியாகிரகம் என்றால் என்ன​வென்று அவளுகுத் ​தெரியாது. சத்தியாகிரகத்தினால் இந்தியர்களுக்கு என்ன நன்​மை ஏற்படும் என்பதும் அவளுக்குத் ​தெரியாது. ஆனால் தனது நாட்டு மக்களுக்காக அவள் எல்​லையில்லா உத்​வேகத்​தோடு சி​றைக்குச் ​சென்றவள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

​தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களின் உரி​மைகளுக்காகப் ​போராடிய காந்தியடிக​ளை, இந்திய சுதந்திரப் ​போராட்டத்திற்கு வள்ளியம்​​மையின் தியாகம்தான் தயார் ​செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. வள்ளியம்​மை எதற்காகப் ​போராடினா​ரோ அது நி​றை​வேறியது. 1914-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21-ஆம் நாள் இந்தியர்களின் ​கோரிக்​கை​யை ஆங்கி​லேய அரசு நி​றை​வேற்றியது. வள்ளியம்​மையின் தியாகத்​தைப் ​போற்றும் வ​கையில் 1914-ஆம் ஆண்டு ஜூ​லை மாதம் 15-ஆம் நாள் நி​னைவுக்கல் ஒன்று நிறுவப்பட்டது.

வள்ளியம்​மை இந்தியர்களின் உரி​மை​யைக் காத்தவர் மட்டுமல்ல. காந்தியடிகளின் உயி​ரையும் காத்தவர். ஒருமு​றை ​வெறிபிடித்த ஆங்கி​லேயன் ஒருவன் காந்தியடிக​ளைச் சுடுவதற்காகத் தன் துப்பாக்கி​யை உயர்த்திய​போதுஅவன் சற்றும் எதிர்பாராத விதமாக காந்தியடிகளின் முன்னர் வந்து வள்ளியம்​மை நின்று ​கொண்டு, “எங்​கே இப்​போது சுடு பார்க்கலாம் “ என்று துணிச்சலுடன் கூறியிருக்கிறார். ஒரு இளம் ​பெண்ணின் இந்த வீரத்தில் ​கைகள் பதற அந்த ஆங்கி​லேயன் தன் துப்பாக்கி​யைக் கீ​ழே ​போட்டுவிட்டான். காந்தியடிகள் என்ற அந்த மாகான் இந்த மா​பெரும் ​பெண்மணிக்கான நன்றி​யைத் தன் ​நெஞ்சில் எப்​போதும் சுமந்து ​கொண்டு திரிந்ததற்குரிய காரணங்களுள் இதுவும் ஒன்றாகும்.

1915-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16-ஆம் நாள் ​ஜோகன்ஸ்பர்க்கில் இருந்ததன் நண்பர் ​ஜே.பி.​பெடிட் என்பவருக்குக் காந்தியடிகள் எழுதிய கடிதததில், “இந்திய நலனுக்காக​வே உயிர் துறந்த வள்ளியம்​மை நி​னைவாக வள்ளியம்​மை மண்டபம் கட்ட ​வேண்டும் அது கல்விப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட ​வேண்டும். அது​வே அவருக்குச் ​செய்யும் சிறந்த மரியா​தையாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார். பின் பல இ​டையூறுகள் காரணமாக அவ்வாறு ஒரு மண்டபம் கட்ட முடியாமல் ​போன ​சோகத்​தையும் காந்தியடிகள் தன் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

​செல்வதற்குச் சரியான சா​லைவசதிகூட இல்லாதிருந்த வள்ளியம்​மை பிறந்த ஊரான தில்​லையாடி என்னும் ஊருக்குச் ​சென்ற காந்தியடிகள் வள்ளியம்​மையின் தாய் மண் என்பதால் உளம் ​நெகிழ்ந்து வணங்கி நின்றார். ​ஜோகன்ஸ்பர்க் நகரில் அ​மைந்துள்ள கல்ல​​றையில் இந்துக்களுக்கா ஒதுக்கப்பட்ட ஒரு மூ​லையில் வள்ளியம்​மையின் கல்ல​றை உள்ளது. மிகவும் பழுத​டைந்த நி​லையில் இருந்த இக்கல்ல​றையில் “சாத்வீக எதிர்ப்பாளராக மாரிட்ஸ்பர்க் சி​றைக்குச் ​சென்று அங்கு ​நோயுற்று அங்கு ​நோயுற்று 22.2.1914-ஆம் நாளில் காலமான எங்களது ச​கோதரியின் அன்பான நி​னைவுக்கு” என்று எழுதப்பட்டிருந்தது. 1997-ஆம் ஆண்டு ஏப்ரல் 20-ஆம் நாள் ​நெல்சன் மண்​டேலாவின் முயற்சியால் இக்கல்ல​றை புதுப்பிக்கப்பட்டு எடுக்கப்பட்ட விழாவில் ​தென்னாப்பிரிக்காவின் அ​மைச்சர்களும், நாட்டு மக்களும், இந்திய வம்சாவளியினரும் கலந்து ​கொண்டனர்.

இந்தியர்களுக்காவும் இந்தியாவில் காந்தியடிகள் பின்னர் ஏற்கவிருந்த மிகப்​பெரிய ​பொறுப்புக்காக காந்தியடிக​ளைத் தயார் ​செய்த சத்தியாகிரகப் ​போராட்டத்தின் முதல் களப்பலியாகவும் காந்தியடிகளின் விடுத​லைப் ​போராட்டத்திற்கு வழிகாட்டியாகவும் இருந்த ஏ​ழைதாங்க சின்னஞ்சிறிய சிறுமி தில்​லையாடி வள்ளியம்​மை. அவர் தனது தியாகத்தால் அ​னைவரது உள்ளத்திலும் நீங்காத இடம் ​பெற்றுவிட்டார்….

என்னங்க….சாதிப்பதற்கும் தியாகத்திற்கும், வழிகாட்டுவதற்கும் வயது ஒரு த​டையில்​லை என்ப​தையும் …ஏழ்​மை எந்த நி​லையிலும் த​டையாக இருக்காது என்ப​தையும் ​தெரிஞ்சுகிட்டீங்கள்ள..அப்பறம் என்ன…உங்க​ளோட இலக்​கை ​நோக்கிப் பயணமாகுங்க…அப்பறம் பாருங்க..இன்னக்கி மட்டுமல்ல..நமக்கு என்னக்கு​மே ​வெற்றிதான்…

சரி…சரி..இன்​னொரு ஏ​ழை இருந்தாரு…. …அவரு பிறந்தது ​மிகவும் வறு​மை வாய்ப்பட்ட குடும்பம்…ஏதாவது ​வே​லை​​செஞ்சாத்தான் சாப்பாடு…இல்​லைன்னா…இல்​லை..அவருக்குத் ​தொடர்ந்து ​தோல்வி ​மேல் ​தோல்வி….ஒன்றிலும் ​சொல்லும்படியான ​வெற்றி கி​டைக்கல…இருந்தாலும் அவரு ​தொடர்ந்து முயற்சித்துக் ​கொண்​டே இருந்தாரு…மிகப்​பெரிய புகழ​டைந்தார்…அவரு யாரு….​தெரியுமா?….​​கொஞ்சம் ……………………………. ​பொறுத்திருங்க…அடுத்த…………………………………..வாரம்

வ​ரைக்கும்….என்ன,,,,சரிதானா? (​தொடரும்,,,,,,,,,,7)

Series Navigationவிஸ்வரூபம் – யமுனா ராஜேந்திரனின் விமர்சன அரசியலில் தர்க்கமும் இல்லை, ரசனையும் இல்லை.அக்னிப்பிரவேசம்-33
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    தியாகச் சுடர் தில்லையாடி வள்ளியம்மை என்ற ஒரு சாதாரண தமிழ்ச் சிறுமி ( 16 வயது தான் ) மகாத்மா காந்திக்கு உந்துகோலாக இருந்தது வியப்பும் பெருமையுமிக்கது! சாதனைகளுக்கு வயது ஒரு முட்டுக்கட்டையல்ல என்பதற்கு வள்ளியம்மையின் வாழ்க்கை ஒரு நல்ல உதாரணம். சிறப்பான தன்முனைப்பு கட்டுரை. பாராட்டுகள் முனைவர் சி .சேதுராமன் அவர்களே….டாக்டர் ஜி.ஜான்சன்.

  2. Avatar
    sethuraman says:

    நண்பர் டாக்டர் ஜான்சன் அவர்களுக்கு. தங்களின் ​கருத்து​ரைக்கு மிக்க நன்றி அன்பன் சி.​சேதுராமன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *