5. யமுனா ராஜேந்திரனின் கட்டுரை வத வதவென்று பல படங்களைப் பற்றிப பேசுகிறது. அவர் எத்தனை படங்களைப் பார்த்திருக்கிறார் என்று தம்பட்டம் அடிக்க இது உதவலாமே தவிர விஸ்வரூபம் விமர்சனத்திற்கு உதவாது. ஒரு கலாசாரத்தின் பின்னணியில் எடுக்கப்பட்ட படைப்பு ஒவ்வொன்றும் ஒவ்வொரு நோக்கில் ஒவ்வொரு பார்வையில் ஒவ்வொரு அழுத்தப் புள்ளியில் செயல்படும். இரண்டு படங்களை ஒப்பிட்டு இந்தப்படம் சிறந்தது, இன்னொரு படம் சிறந்தது இல்லை என்று மதிப்பீட்டை முன்வைப்பதற்கு அவை இரண்டும் ஒரு நாட்டினைப் பற்றியது என்ற தளம் மட்டும் போதாது. அவற்றின் மையப் புள்ளி என்ன, அவை ஒரே விதமான நிகழ்வுகளை வெவ்வேறு புள்ளியில் சொல்லிச் செல்கிறதா என்பதும் முக்கியம். அவர் அடுக்கிச் செல்லும் படங்களின் வரிசை விஸ்வரூபத்துடன் எதனால் ஒப்பிடப் படுகிறது என்று சொல்லாமலே அல்லது, சொல்லும் போது எந்தப் பொருத்தமும் இல்லாமலே விஸ்வரூபத்தை விட காபூலி கிட் சிறந்தது, ஒசாமா படம் அமெரிக்கர்களை மகிழ்ச்சிப் படுத்த எடுக்கப் பட்டது என்று எந்த ஆதாரமும் இல்லாமல் சொல்கிறார். முக்கியமான ஈரானிய இயக்குனர் மக்மல்பபின் துணையுடன் ஒசாமா படம் இயக்கிய சித்திக் பர்மக் அமெரிக்க அடிவருடி என்று ஒரு வரியில் சொல்லிவிட்டால் தீர்ந்தது யமுனா ராஜேந்திரனின் விமர்சனம். சித்திக் பர்மக் மாஸ்கோவில் திரைப்படம் பயின்றவர் என்பது ஒரு கூடுதல் செய்தி.
வேடிக்கை என்னவென்றால், விஸ்வரூபத்தில் ஆப்கான் நிகழ்வுகள் என்று காட்டப்படும் எதுவும் உண்மையல்ல என்று யமுனா ராஜேந்திரனோ அல்லது வேறு விமர்சகர்களோ சொல்லவில்லை. அவர்கள் கேள்வி என்னவென்றால், இதை ஏன் சொல்கிறார், ஏன் அமெரிக்காவைக் குற்றம் சாட்டவில்லை, என்பது தான்.
6. தாலிபான் பற்றிப் பேசும்போதெல்லாம் அமெரிக்கா அளித்த ஆயுதங்கள், பெனசிர் புட்டோ அளித்த உதவி, பாகிஸ்தான் தொடங்கிய இயக்கம் என்று மற்றவர்கள் மேல் பழி போடும் ஒரு போக்கு தமிழக/இந்திய அறிவுஜீவிகளுக்கே உரிய ஒரு வியாதி. வேடிக்கை என்னவென்றால் தாலிபான் யாரும் இப்படி அறிக்கைகள் விடுவதில்லை. அவர்கள் தம் செயல்பாடுகளுக்கெல்லாம், இஸ்லாமையும், குரானையும் தான் பொறுப்பாக்குகிறார்கள். தாலிபான் ஏதும் ஸ்கௌட் இயக்கமல்ல. எடுப்பார் கைப்பிள்ளையாக இயங்குகிற பொம்மலாட்டமும் அல்ல அது. உயிரும் உடலும் கொண்ட சுய சிந்தனை உள்ள தலைவர்களையும் இஸ்லாமும், குரானும் நன்கறிந்த மனிதர்களையும் உட்கொண்டது அந்த இயக்கம். இப்படி வெளி சக்திகளால் தான் இந்த இயக்கம் உருவாகியது என்றால், அமேரிக்கா வெளியேறினவுடன் அவர்கள் திசை மாறியிருக்கலாம். பாகிஸ்தான் இடை இடையே தன் உதவியை நிறுத்திக் கொண்ட தருணங்களில் தன் வன்முறை வழிகளை விட்டிருக்கலாம். பெண்களை மிக மோசமாக நடத்துவது இஸ்லாமிற்குப் புறம்பானது என்று பெண்கள் முன்னேற்றத்திற்கு வழி வகுத்திருக்கலாம். அதெல்லாம் ஏதும் நடக்கவில்லை. ஆனாலும் அருந்ததி ராய் தொடங்கி, நம் உள்ளூர் யமுனா ராஜேந்திரன் வரையில் தாலிபான் கொடியை உயர்த்திப் பிடிக்கிறார்கள். தாலிபான் இயக்கம் தன்னளவில் எந்த நோக்கும் இல்லாத ஒரு இயக்கம் என்ற ஒரு பிரமையை இவர்கள் எபப்டிப் பெற்றார்கள் என்று தெரியவில்லை.
- போதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 19
- மருத்துவக் கட்டுரை மாதவிலக்கு வலி
- தாகூரின் கீதப் பாமாலை – 64 செவிக்கினிய கானங்கள் .. !
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -23 என்னைப் பற்றிய பாடல் – 17 (Song of Myself) காலமும், வெளியும்
- தூண்டி மாடன் என்கிற பிள்ளையாண்டன்
- விளையாட்டு வாத்தியார் – 1
- ஒரு கவிஞனின் நாட்குறிப்பு
- வாழ்வியல் வரலாறு கடைசிப்பக்கம்
- முனைவர் க.பஞ்சாங்கத்தின் சிங்கப்பூர் பயணம்
- டௌரி தராத கௌரி கல்யாணம்….! – 5
- நீங்காத நினைவுகள் – 2
- சவூதி அரேபியா : பாதுகாக்கப்பட வேண்டிய சிறார்களும், மனிதர்களின் மீதான தண்டனையை நிறைவேற்றுபவரும்
- வனசாட்சி – இந்த நாவலுக்கு இரண்டு விமரிசனங்கள் எழுத நேர்ந்தது
- தமிழ் ஸ்டுடியோவின் மே மாத திரையிடல்கள் (நான்கு முக்கியமான திரையிடல் நடக்கவிருக்கிறது)
- புதிய வலை இதழ் – பன்மெய்
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -1
- சுமைதாங்கி சாய்ந்தால் ……..
- ஒரு புதிய அறிமுகம் – இரண்டு பழையவர்கள் (க. சட்டநாதன், குப்பிழான் ஐ. சண்முகம்)
- மட்டக்களப்பில் வைத்து
- “ஓலைக்கிளிகள்” (அன்னையர் தினம்)….
- கொக்குகள் பூக்கும் மரம்
- ‘இசை’ கவிதைகள் ‘உறுமீன்களற்ற நதி’ தொகுப்பை முன் வைத்து…
- பேரழகி
- ஒரு செடியின் கதை
- 2013 ஆண்டு அக்டோபரில் செவ்வாய்க் கோள் நோக்கிச் செல்லும் இந்தியச் சுற்றுளவி மங்கல்யான்.
- கல்யாணக் கல்லாப்பொட்டி
- விஸ்வரூபம் – யமுனா ராஜேந்திரனின் விமர்சன அரசியலில் தர்க்கமும் இல்லை, ரசனையும் இல்லை.
- புகழ் பெற்ற ஏழைகள் 6.காந்தியடிகளுக்கு வழிகாட்டிய ஏழை
- அக்னிப்பிரவேசம்-33