யமுனா ராஜேந்திரனின் விமர்சன அரசியல் பற்றி விரிவாகப் பேசியதால் விஸ்வரூபம் விம்ரசனத்தைத் தொடர இயலாமல் ஆகிவிட்டது.
“தமிழ் சினிமாவின் சிறந்த படங்கள் எனப் பட்டியலிட்டால் அவற்றில் “குணா” (இந்தப் படம் பற்றி ஆய்வாளர் காளி சுந்தர் ஒரு அருமையான விமர்சன ஆய்வினை எழுதியுள்ளார். அது தமிழில் மொழிபெயர்க்கப் பட்டதா என்று தெரியவில்லை.), “பேசும் படம்” (இது பற்று டி ஜி வைத்தியநாதன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.) , விருமாண்டி, தேவர் மகன் , ஹே ராம்.இவற்றின் இடம் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் உண்டு. இவற்றில் விருமாண்டி தேவர் மகன், ஹே ராம் வரிசையில் “விஸ்வரூபம்” இடம் பெறுகிறது.” என்று என் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.
விருமாண்டி, தேவர் மகன், ஹே ராம் மூன்று படங்களுமே வன்முறையை முன்வைத்து உரையாடலை நிகழ்த்து கின்றன. அவற்றின் அடிப்படியான கதைக் களன் வன்முறையின் மூலத்தை ஆய்வு செய்கின்றன. தேவர் மகன் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் அதில் மிக முக்கியமான சேர்க்கையாகும். சாதி என்பதும் , சாதிச் சித்தரிப்புகள் என்பதும் பெருமைக்குரியதாகவும், வீரதீரப் பராக்கிரமங்களை முன்வைப்பதாகவும் திரைப்படங்கள் உண்டு. ஆனால் தேவர் மகன், சாதியத்திற்குள்ளாக செயல்படும் உட்பகைகளை சித்தரிக்கிறது. பங்காளிகளுக்குள் மோதல் என்ற முறையில் மீண்டும் மகாபாரதத்தின் சாயல்கள் தவிர்க்கமுடியாமல் நிழலாய்த் தோன்றுகின்றன. உட்பகைக்குக்காரணம் என்ற ஒன்று தெளிவாய் முன்வைக்கப் படவில்லை . ஆனால் தனக்கு மரியாதை இல்லை என்ற காரணம் மீண்டும் மீண்டும் சுட்டப் படுகின்றது. மரியாதையைப் பெறுவதற்காகவும், அவமரியாதையைக் காட்டி தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும் எந்த இழிசெயலுக்கும் தயாராக உள்ள மனநிலையை முன்வைக்கிறது. கிராமம் என்ற ரொமாண்டிக் கருத்தாக்கமும், சாதி என்பது ஒருமைப் பட்ட இனக்குழு என்ற பிரமையும் உடைபடுகின்றன. வெளிக் கலாசாரத் தாக்கம் கொண்டு கிராமத்திற்குத் திரும்பும் கமல் ஹாசனின் பாத்திரம் தவிர்க்க முடியாமல் கிராமத்தின் அழிவரசியலில் அங்கம் வகிக்க வேண்டி வருவதும் அதன் உச்சகட்டமாக தான் நம்பியிருந்த அனைத்திற்கும் எதிராக ஒரு கொடூரக் கொலையில் முடிவதும் ஒரு கிரேக்க அவல நாடகத்தின் சிக்கலைக் கொண்டுள்ளது. இருசாதிகளுக்கு இடையே அவ்வப்போது தோன்றும் வெறிச்செயலைக் காட்டிலும், நீறு பூத்த நெருப்பாக என்றும் இயங்கி வரும் உட்சாதிப் பகையை முன்வைப்பதில் ஒரு சுய விமர்சனம் வேண்டி நிற்கிறது. ஆனால் சுயவிமர்சனம் இல்லாமலாகிப் போன தமிழ்ச் சமூகத்தில் இதன் விளைவுகள் என்று ஒன்றும் நிகழவில்லை. இது பற்றிய விமர்சனங்கள் கூட தேவர் சாதியினை முன்வைத்து பெருமிதம் தேடித்தந்த ஆவணமாக அதைத் தவறாகப் புரிதலினை முன்வைத்தன. சொல்லப் போனால் தேவர் இனக்குழு தான் இந்தப் படத்தை ஒரு சுய விமர்சனத்தின் முன்னுரையாய் மேற்கொண்டிருக்க வேண்டும். காட்டுமிராண்டித்தனத்தை வீரமாக பாவிக்கும் மனநிலை பற்றிய இந்தச் சித்திரம் தமிழுக்கு மிகப் புதிது.
விருமாண்டியும் கூட இதே மனநிலையை இன்னொரு சந்தரப்பத்தில் வைத்துப் பேசுகிறது. இங்கும் இருவேறு சாதிகளுக்குள்ள மோதல்களை மீறிய இணக்கம் பற்றிப் பேசும் போது, சாதி இணைவு என்பது எப்படி ஒரு சுயநலம் பேணும் வழிவகையாகிவிட்டிருக்கிறது என்பது பற்றியும் பேசுகிறது. ராஷோமானை நினவு படுத்தும் உத்தி படத்தின் அங்கமாகி விட்டிருக்கிறது. மரண தண்டனைக்கு எதிரான படம் என்ற முத்திரையில் காணாமல் போனது வன்முறை பற்றிய விசாரணை.
இனி யமுனா ராஜேந்திரனின் விமர்சனத்திற்குத் திரும்புவோம்.
“அரசியல் பயங்கரவாதம் பற்றிப் படமெடுத்த கமல் ஹாசன், இஸ்லாமிய சகோதரகள் என அன்பாக விழித்த கமல் ஹாசன், அதே சகோதரர்கள் முன்வைத்த விமர்சனத்தைகே கலாசார பயங்கரவாதம் என உடனடியாகக் கூசாமல் , தயங்காமல் அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். ஆங்கிலத்தில் கல்சுரல் டெரரிசம் என்பது எவ்வளவு அழுத்தமான சொல் என்பதை உலக அரசியல் அறிந்த ஒருவர் உணர முடியும். ” என்கிறார் யமுனா ராஜேந்திரன். மிக சாமர்த்தியமான வாசகங்கள். கமல் ஹாசன் சகோதரர்கள் என்று சொன்னது இஸ்லாமிய சமுதாயத்தினரை. ஆனால் இஸ்லாமியரின் தீவிரவாத அரசியல் குழுக்கள் சில தான் விஸ்வரூபம் தடை செய்யவேண்டும் என்று பிரசினையை எழுப்பின. இவர்கள் “அதே சகோதரர்கள்” இல்லை. ஒட்டு மொத்தமாக இஸ்லாமிய சகோதரர்களை இந்தக் குழுக்கள் பிரதிநிதித்துவப் படுத்தவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். கமல் ஹாசனின் மக்களை, உறவினரை ஆபாசமாக விமர்சித்தவர்கள் இஸ்லாமிய சகோதரர்கள் இல்லை. மனுஷ்யபுத்திரனை அருவருப்பாக திட்டியவர்கள் இஸ்லாமிய சகோதரர்கள் இல்லை. இப்படிப் பட்ட குழுக்களை கலாசார பயங்கரவாதிகள் என்று சொல்லாமல் வேறு என்ன பெயர் இட்டு அழைக்க வேண்டும் என்று, இந்த வகை குழுக்களை சகோதரர்களாக பாவிக்கும் யமுனா ராஜேந்திரன் தான் சொல்ல வேண்டும். அயொதல்லாக்களை யமுனா ராஜேந்திரன் சகோதரர்களாகவே பாவிக்கட்டும். ஆனால் எல்லா இஸ்லாமியர்களையும் இந்த வேலிக்குள் அடைக்க வேண்டாம்.
”இது தமிழக முஸ்லீம்களை, தமிழக பிராம்மணர்களை, தமிழகத்தில் பிறந்த பெண்களை, தமிழக நகரங்களான மதுரை கோயம்புத்தூர் போன்றவற்றை சர்வதேச பயங்கரவாதத்துடனும் தாலிபானியத்துடனும் பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் யுத்தத்துடனும் இணைக்கும் படம்” என்று கவலைப்படுகிறார் யமுனா ராஜேந்திரன்.
இப்படிப் பட்ட அபத்தத்தை யமுனா ராஜேந்திரன் தவிர வேறு யாரும் எழுதி விட முடியாது. 60 வருடங்ளாக இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் பாலஸ்தீன ஆதரவு பிரச்சாரம் பொய்மை என்பது இதன் பொருளா? பாலஸ்தீனப் பிரசினைக்கும் தமிழ் நாட்டிற்கும் தொடர்பு உண்டு என்றால், ஆப்கானிஸ்தான் பயங்கரவாதத்திற்கும் தமிழகத்திற்கும் தொடர்பு இல்லாமல் போகுமா? இஸ்லாமிய பயங்கரவாதம் என்பது ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக நிகழும் தனிமைப் பட்ட சம்பவம் அல்ல. உலகு தழுவிய ஒரு நோக்கம் அதற்கு உண்டு. அதனால் தான் கோவை தொடங்கி, ஜாவா வரையில், இந்தோனேசியா தொடங்கி, ரஷ்யா வரையில், ஸ்பெயின் தொடங்கி அமேரிக்கா வரையில் தொடர்ந்து பயங்கரவாத செயல்கள் நிகழ்கின்றன.
கவனமாக எழுதப்பட்டிருக்கும் இந்த வரிகளில், கோயம்புத்தூரில் நடந்த குண்டுவெடிப்புகள் இஸ்லாமிய பயங்கரவாதத்துடன் சம்பந்தப்பட்டவைதான் என்பதை வேண்டுமென்றே தவிர்த்து, அவ்வாறு தவிர்ப்பதற்கு. தமிழர்களை சர்வதேச பயங்கரவாதத்துடன் கமலஹாசன் சம்பந்தப்படுத்துகிறார் என்று தாவுகிறார்.
தேசம் என்ற கட்டுக்குள் இஸ்லாமிய பயங்கரவாதிகள் வருவதில்லை. அவர்களை பொறுத்த மட்டில், தமிழ்நாட்டு பயங்கரவாதம், கர்னாடகா பயங்கரவாதம், மும்பை பயங்கரவாதம், கோரக்பூர் பயங்கரவாதம் காஷ்மீர் பயங்கரவாதம், கராச்சி பயங்கரவாதம், பெஷாவர் பயங்கரவாதம் என்றெல்லாம் தனித்தனியாக இருக்கிறதாக யமுனா ராஜேந்திரன் கருதுகிறார் போலிருக்கிறது.
ஒருவேளை, கோயம்புத்தூரில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கும் இஸ்லாமிய பயங்கரவாதத்துடனும் சம்பந்தமில்லை என்று யமுனா ராஜேந்திரன் நினைக்கிறாரோ என்னவோ? இஸ்லாமிய பயங்கரவாதத்தை தமிழ்நாட்டுடன் சம்பந்தப்படுத்தியது கமலஹாசன் மட்டும்தானோ என்னவோ? இல்லையென்றால், தமிழ்நாட்டில் முஸ்லீம் பயங்கரவாதிகளே இல்லை என்று அவர் சொல்ல, நாமும் நம்பிவிடலாம்.
முள்ளிவாய்க்கால் பற்றிய படத்தை கமலஹாசன் எடுக்க வேண்டும் என்று கொளுத்தி போட்டிருக்கிறார் யமுனா ராஜேந்திரன். எடுத்த படத்திற்கு விமர்சனம் எழுதிக் களைத்து விட்ட யமுனா ராஜேந்திரன் எடுக்காத படத்திற்கு ஆலோசனை வழங்கியிருக்கிறார். அப்படி அது எடுக்கப் பட்டால் அதற்கு விமர்சனமும், படம் வருவதற்கு முன்பேயே யமுனா ராஜேந்திறன் தயார் செய்திருப்பார் என்று நம்பலாம்.
இது கமிஸார் கட்டளையோ என்னவோ! கம்யூனிஸ்ட் நாட்டில் தான் இது பற்றி எடு, இந்த விஷயம் பற்றி எடுக்காதே என்று கட்டளை பிறக்கும். என்ன ஆச்சரியம் – யமுனா ராஜேந்திரனும் ஒரு கம்யுனிஸ்ட் கட்சியாளரின் மேற்கோள் தான் காட்டுகிறார்.
ஈழம் பற்றி எடுக்கப்பட்ட படங்களை எந்த திசையிலிருந்து யமுனா ராஜேந்திரன் விமர்சனம் செய்திருக்கிறார், எவற்றை போற்றி பாராட்டியிருக்கிறார் என்று பார்த்தால், எப்படிப்பட்ட பிரச்சார படத்தை கமலஹாசன் எடுக்க வேண்டும் என்று யமுனா ராஜேந்திரன் விரும்புகிறார் என்று அறிந்துகொள்ளலாம்.
இப்படிப்பட்ட எதிர்பார்ப்புகள் எல்லாம் இருக்கும் என்று தெரிந்துதான், கமல் போன்றவர்கள் விவரமாக ஈழம் பற்றிய படங்களை தவிர்க்கிறார்களோ என்னவோ.
ஈழம் பற்றி படம் எடுப்பதற்கு இருக்க வேண்டிய நேர்மையோ அல்லது அந்த நேர்மை மூலம் சொல்ல வேண்டிய விஷயங்களோ, சொல்லப்படக்கூடிய விஷயங்களோ யமுனா ராஜேந்திரன் போன்றவர்களுக்கு வேண்டியதில்லை. ஒரு கலைஞனுக்கு இருக்கக்கூடிய அடிப்படை உரிமைகளை கூட மறுக்கிற குணம் கொண்ட யமுனா ராஜேந்திரன் போன்றவர்கள், ஏன் இவர் இதனை பற்றி படம் எடுக்கவில்லை, அவர் ஏன் அதனை பற்றி படம் எடுக்கவில்லை என்று கேட்பதற்கு கூட அருகதை அற்றவர்கள்.
விஸ்வரூபம் படத்தில் அமைதிப்புறாவான இஸ்லாமின் காலில் அணுகுண்டை கட்டிகொண்டிருக்கிறார்கள் என்று இஸ்லாமின் சார்பாகவே எடுத்திருக்கும் கமலஹாசனையே, இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களை சேர்ந்தவர்கள் கண்டித்த காரணத்தினால், எதிர்க்கிற யமுனா ராஜேந்திரன், ஈழம் பற்றி எப்படிப்பட்ட படத்தை கமலஹாசன் எடுக்க வேண்டும் என்று நினைக்கிறார் என்று புரிந்துகொள்ளுதல் கடினமானது அல்ல.
————-
- போதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 20
- அக்னிப்பிரவேசம்-34
- பின்னற்தூக்கு
- நீர்ப் பாலை – மார்ச் 22 ” பூமி தினம் “ நீரின்றி அலையப் போகும் உலகம்
- மருத்துவக் கட்டுரை கொலஸ்ட்டெரால்
- அவசரம்
- நீங்காத நினைவுகள் – 3
- அஸ்கர் அலி எஞ்சினியர் – முஸ்லிம் சமூகத்தின் உயிர்ப்புமிகு அறிவுஜீவி
- திருப்புகழில் ராமாயணம்
- சி. சு. செல்லப்பா – தமிழகம் உணர்ந்து கொள்ளாத ஒரு வாமனாவதார நிகழ்வு (10)
- வெங்கட் சாமிநாதனின் அக்ரஹாரத்தில் கழுதை
- இமையம் அவர்களின் பேராசை என்கிற சிறுகதை
- சில பறவைகள் எத்தனை பழகினும் அருகே வருவதில்லை
- எசக்கியம்மன்
- டௌரி தராத கௌரி கல்யாணம்….! – 6
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -24 என்னைப் பற்றிய பாடல் – 18 (Song of Myself) என் கடல் பயணங்கள்
- தாகூரின் கீதப் பாமாலை – 65 என் விடுமுறைப் பொழுதில் !
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 10
- விளையாட்டு வாத்தியார் -2
- தேவலரி பூவாச காலம்
- சுவீகாரம்
- வள்ளுவம் அல்லது வாழ்க்கையே வழிபாடு – அணிந்துரை
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -2 Cover image மூன்று அங்க நாடகம்
- நாகராஜ சோழன் M.A.M.L.A.
- பிரபஞ்சத்தில் புலப்படாத புதிய ஐந்தாம் அடிப்படை உந்துவிசை [Fifth Force] கண்டுபிடிக்கத் தோன்றும் அறிகுறிகள்.
- சூறாவளியின் பாடல்
- புகழ் பெற்ற ஏழைகள் ( முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) 7.தோல்விகளைக் கண்டு துவளாத ஏழை………..
- மதிப்பீடு
- ‘பாரதியைப் பயில…’
- முற்பகல் செய்யின்…….
- துண்டாடப்படலும், தனிமை உலகங்களும் – இரா முருகனின் “ விஸ்வரூபம் “ நாவல்
- என்னால் எழுத முடியவில்லை
- விஸ்வரூபம் – தொடர்ந்த விமர்சனம் – வன்முறையின் தீராக் கவர்ச்சி