புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 10

This entry is part 22 of 24 in the series 9 ஜூன் 2013

Inline image 2

மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், தமிழாய்வுத்துறை,

மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

                                    E. Mail: Malar.sethu@gmail.com 

 

( முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை)

10.​அ​மெரிக்கா ​போற்றிய ஏ​​ழை

அட​டே வாங்க… என்னங்க……. …எப்படி இருக்குறீங்க…நல்லா இருக்கிறீங்களா?…என்னங்க ​பேசமாட்​டேங்குறீங்க…என்னது முதல்ல அவரு யாருன்னு ​சொல்லணுமா?…அட..இதுக்குத்தானா இந்தமாதிரி ​பேசாம உம்னு… இருக்குறீங்க… அப்படி​யெல்லாம் இருக்காதீங்க..எப்பவும் இயல்பா இருங்க…எதுலயும் நிதானம் ​வேணுங்க….​கொஞ்சம் ​பொறு​மையா இருங்க…என்னங்க ஏந்திருச்சுட்டீங்க..​போகாதீங்க..இருங்க..ஒங்க ​​பொறு​மையச் ​சோதிக்கலங்க.. ​வெற்றி கி​டைக்கணும்னா ​பொறு​மையா இருக்கத்தாங்க ​வேணும்…​பொறுத்தார் பூமியாண்டார்..​பொங்கி​னோர் காடாண்டார்ன்னு ஒரு பழ​மொழி​யே இருக்குறத மறந்துட்டீங்களா?

அ​மெரிக்கா ​போற்றிய அந்த ஏ​ழை யாரு ​தெரியுமா? அவருதான் பெஞ்சமின் ஃபிராங்கிளின். ஒருவர் ஒரு துறையில் வெற்றி பெற்றாலே வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டதாக கருதுகிறோம். அப்படியென்றால் நான்கு வெவ்வேறு துறைகளில் வெற்றி பெற்ற ஒருவரின் சாதனையை எந்த அளவுகோ​லை வைத்து அளப்பது ​சொல்லுங்க பார்ப்​போம். வணிகம், அறிவியல், இலக்கியம், அரசியல் என நான்கு துறைகளில் பெரும் வெற்றி பெற்ற ஒருவரின் பெயரை அமெரிக்கா நாடு தனது வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறித்து வைத்திருக்கிறது. அவர் இளம் வயதில் கையில் ஒரு காசுகூட இல்லாமல் ஏழ்மையில் இருந்தும் அச்சுத்தொழிலின் மூலமும் கடு​மையா உ​ழைச்சு, பத்திரிக்கையின் மூலம் நாற்பது வயதுக்குள் செல்வந்தரானவர்.

‘Poor Richard’s Almanack’ என்ற புகழ்பெற்ற இதழை உலகுக்குத் தந்தவரு யாருங்குறீங்க? ​பெஞ்சமின் பிராங்ளின்தான். உலகதின் மிகப்புகழ் ​பெற்ற தன்வரலாறுகளுள் ஒன்று பிராங்கிளினு​டையது. மின்சாரம் பற்றியும் இடி மின்னல் பற்றியும் புகழ்பெற்ற ஆராய்ச்சிகளைச் செய்து இடி தாங்கியையும், bifocal glasses எனப்படும் வெள்ளெழுத்துக் கண்ணாடியையும் மற்ற பல கருவிகளையும் கண்டுபிடித்து புகழ்​பெற்றவர் ​பெஞ்சமின். அ​மெரிக்க அரசியலில் சட்டமன்ற உறுப்பினராக, ராஜதந்திரியாக, பிரான்ஸூக்கான தூதராகப் பணியாற்றி மிகுந்த புக​ழைப் ​பெற்றவர் பிராங்ளின்.

அமெரிக்காவின் சுதந்திர பிரகடனத்தைத் தயார் செய்து கையெழுத்திட்ட மூவரில் ஒருவர்தான் இந்த புகழ்​பெற்ற ஏ​ழை பிராங்க்ளின். இப்படி பல பரிமாணங்களில் பிரகாசித்த அவரை அமெரிக்காவின் வரலாற்று ஆவணங்கள் மிகுந்த புகழ்​பெற்ற அ​மெரிக்கக் குடிமகன் என்றும் குறிப்பிடுகிறது. அவர்தான் ​மேன்​மைமிகு  பெஞ்சமின் ஃபிராங்க்ளின். அவர் தான் வாழ்ந்த 84 ஆண்டுகளும் மனிதகுலத்தின் மேன்மைக்காக​வே வாழ்ந்தார். எப்​போதும் மனிதர்களின் முன்​னேற்றத்​தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த விஞ்ஞானியாகவும், இலக்கியவாதியாகவும், வணிகராகவும், அரசியல்வாதியாகவும் பெஞ்சமின் ஃபிராங்கிளின் திகழ்ந்தார்.

வறு​மையும் ​பெரிது குடும்பமும் ​பெரிது

இத்த​கைய ​பெரு​மை வாய்ந்த ​பெஞ்சமின் பிராங்க்ளின் 1706 – ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ஆம் நாள் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் பிறந்தார். அவருடன் பிறந்தவர்கள் மொத்தம் 17 ​பேராவர். அந்தப்  பதி​னேழு பிள்ளைகளில் பத்தாவது பிள்​ளையாகப் பிறந்தார் பெஞ்சமின் ஃபிராங்கிளின். அவரது தந்தையார் சோப்புக் கட்டிக்களையும், மெழுகுவர்த்திகளையும் தாயரித்து பாஸ்டன் நகரம் முழுவதும் சுற்றித் திரிந்து விற்பனை செய்வார்.

பெரிய குடும்பம் என்பதால் அவர்கள் வீட்டில் வறுமை வசதியாக் ஆட்சி செய்தது. வறு​மையும் ​பெரிது; குடும்பமும் ​பெரிது என்றானது. குடும்ப ஏழ்மையின் காரணமாக ஃபிராங்கிளினை பள்ளிக்கு அனுப்பகூட அவரது தந்​தையாரிடம் பணம் இல்லை. ஃபிராங்கிளின் பள்ளி சென்றது ஓறாண்டுக்கும் குறைவாகத்தான் இருக்கும். ஆனாலும் பெஞ்சமின் ஃபிராங்கிளின் தனது ஏழாவது வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். அதுமட்டுமில்​லைங்க அவர் பள்ளிக்கு செல்லாவிட்டாலும் தனது தந்தையின் தொழிலில் உதவி செய்துகொண்டே தனக்குக் கிடைத்த நேரத்தில் நான்கு மொழிகளைக் கற்றுக்கொண்டார். என்ன இது ஆச்சரியமாக இருக்குதுல்ல? இது உண்​மைங்க.

படிப்​பே அவரது உயிர்த்துடிப்பு

பெஞ்சமின் ஃபிராங்கிளின் ஏழ்​மை​யை நி​னைத்து வருந்தி முடங்கிப் ​போய்விடவில்​லை. நாம் எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டும் நம்மில் பலர் புத்தகங்கள் பக்கமே தலை வைத்து படுப்பதில்லை. ஆனால் ஃபிராங்கிளினுக்கோ இயற்கையிலேயே நூல்க​ளை வாசிப்பது என்றால் அதிக  ஆ​சை. அவருடைய இந்தப் பண்புதான் பிற்காலத்தில் அமெரிக்காவின் சுதந்திர பிரகடனத்தை எழுதும் துணி​வையும் மனப்பக்குவத்​தையும் அவருக்குத் தந்தது. புத்தகங்கள் வாசிப்பதில் அவருக்கு இருந்த ஆர்வம் காரணமாகவே அவர் தனது சகோதரர் ஜேம்ஸின் அச்சுக்கூடத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.

பாருங்க படிக்கிறதுக்காக எங்​கே புத்தகங்கள் கி​டைக்கு​தோ அங்​கே ​போயி ​வே​லைக்குச் ​சேர்ந்திருக்காரு. இது “பிச்​கைபுகினும் கற்​கை நன்​றே” என்ற முது​மொழி​யையும், “உற்றுழி உதவியும் உறு​பொருள் ​கொடுத்தும் பிற்​றை   நி​லை முனியாது கற்றல் நன்​றே” என்ற புறநானூற்று வரிக​​ளை            நி​னைவுபடுத்துவதாக அ​மைந்துள்ளது.

பெஞ்சமின் ஃபிராங்கிளின் அச்சகத்தில் ​சேர்ந்து அங்கு அச்சுப் பணிகளைக் கற்றுக்கொண்டதோடு அச்சுக்கு வரும் அத்தனை புத்தகங்களையும் முழு​மையாகப் படித்துத் தனது ஆ​சை​யைத் தீர்த்து மகிழ்ச்சியடைவார். நிறைய படித்ததாலோ என்னவோ சு​வையாக எழுதும் எழுத்துத் திறமையும் அவருக்கு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தனது கட்டு​ரைக​ளை அச்சில் ​வெளியிடுவதற்காக பெஞ்சமின் ஃபிராங்கிளின் பல கட்டுரைகளைத் தானே எழுதி பெயர் குறிப்பிடாமல் அதிகாலையில் அந்த அச்சுக்கூடத்தின் வாயிலில் வைத்து விடுவாராம். சகோதரரும், நண்பர்களும் அவற்றைப் பாராட்ட ஃபிராங்கிளின் மட்டும் அவை நன்றாக இல்லை அப்படி இருக்குமேயானால் எழுதியவர் பெயரைக் குறிப்பிட்டிருப்பார் என்று எதிர்த்துக் கூறுவாராம். தன் தம்பி சொல்வதற்கு எதிராகவே முடிவெடுக்கும் பழக்கமுடையவர் அண்ணன் என்பதால் அவற்றையெல்லாம் அழகாக அச்சிட்டு பிராங்கிளினைக் கொண்டே விற்பனை செய்யச் சொல்வாராம் அவரது அண்ணன் ஜேம்ஸ். எவ்வுளவு சாதுர்யம்? பிறகு தனது சகோதரருடன் ஏற்பட்ட மனத்துயரின் காரணமாக அவர் வீட்டை விட்டு வெளியேறி Philadelphia வந்தடைந்தார். அங்கும் பெஞ்சமின் ஃபிராங்கிளின் அச்சுத்தொழிலில் ஈடுபட்டு சொந்தமாக அச்சு நிறுவனத்தைத் தொடங்கி நடத்தினார்.

பத்திரிக்​கை​யை வி​லைக்கு வாங்குதல்

பெஞ்சமின் ஃபிராங்கிளின் பத்திரிக்கைகளில் நிறைய எழுதினார். அவரது புகழ் நாடு முழுவதும் பரவத் தொடங்கியது. 1720 -ஆம் ஆண்டு Pennsylvania Gazette என்ற பத்திரிக்கையை விலைக்கு வாங்கி அதன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் ஃபிராங்கிளின். நான்கு ஆண்டுகள் கழித்து Poor Richard’s Almanack என்ற பத்திரிக்​கை​யைத் தொடங்கினார். மிகவும் வித்தியாசமான பாணியில் வெளிவந்த அந்த பத்திரிக்கைதான் அவருக்குச் செல்வத்தையும், பெரும் புகழையும் கொண்டு வந்து சேர்த்தது.

அறிவியல் கண்டுபிடிப்புகள்

அச்சுத்துறையில் புதுமைகள் செய்த அதே வேளையில் புதிதாக எதையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வமும் பெஞ்சமின் ஃபிராங்கிளினிடம் இருந்தது. குறைவான எரி ​பொருளுடன் மிகுந்த வெப்பம் தரக்கூடிய அடுப்பை பெஞ்சமின் ஃபிராங்கிளின் கண்டுபிடித்தார். அவற்றைத் தயாரித்து விற்கவும் தொடங்கினார். பயிர்களுக்குச் செயற்கை உரமிட்டால் அவை செழிப்பாக வளரும் என்று விவசாயிகளிடம் எடுத்துக் கூறினார். ​தொடக்கத்தில் உலகத்தாரால் இக்கருத்துப் புறக்கணிக்கப்பட்டாலும் அதிலிருந்த உண்மையை உலகம் மெதுவாக புரிந்து கொண்டது.

மின்சாரத்தின் மீது ஆய்வுகள் செய்த பெஞ்சமின் ஃபிராங்கிளின்  மின்னலில்கூட மின்னாற்றல் இருக்கிறது என்பதைக் கண்டறிந்தார். கூரிய முனைகளால் மின்சாரம் ஈர்க்கப்படுகிறது; அதேபோல் மின்னலும் கூரிய முனைகளால் ஈர்க்கப்படும் என்பதைக் கண்டுபிடித்து மின்னல் இடியிலிருந்து கட்டிடங்களைப் பாதுகாக்க பெஞ்சமின் ஃபிராங்கிளின் இடிதாங்கியைக் கண்டுபிடித்தார். முதியர்வர்கள் எட்டப் பார்வைக்கும், கிட்டப் பார்வைக்கும் சேர்த்து அணியும் ஒரே கண்ணாடியான bifocal lens அவருடைய அற்புதமான கண்டுபிடிப்பாகும்.

பெஞ்சமின் ஃபிராங்கிளின் தன் கண்டுபிடிப்புக்கெல்லாம் காப்புரிமை பெற்றதில்லை. மற்றவர்களின் கண்டுபிடிப்புகளால் நாம் பயன்பெறும்போது நமது கண்டுபிடிப்பால் பிறர் பயன்பெறுவதை நாம் பிறவிப் பயன் என்று கருத வேண்டும் என்பதே அவரது எண்ணம். அறிவியல் துறையில் பெரிய பங்களிப்பைச் செய்த அவர் பல கண்டுபிடிப்புக​ளை உலகுக்கு தந்திருக்கிறார் என்பது ​போற்றுதற்குரிய ஒன்றாகும்.

காகிதப் பணத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி அதன் புழக்கத்தை அதிகரிக்கச் செய்தார். சப்ஸ்கிரிப்சன் (subscription) எனப்படும் சந்தா ​செலுத்தும் முறையில் நூல்களை வாங்கிப் படிக்கும் முறையை உலகுக்கு அறிமுகம் செய்தவரும் பெஞ்சமின் ஃபிராங்கிளின் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அஞ்சல் து​றையில் புது​மைகள் ​செய்தல்

பெஞ்சமின் ஃபிராங்கிளின் பில​டெல்பியாவின் (Philadelphia) அஞ்சல் துறையில் பல மாற்றங்களைச் செய்து தற்கால அஞ்சல் துறை பின்பற்றும் பல கொள்கைகளை உருவாக்கித் தந்தார். 1730-ஆம் ஆண்டு நடமாடும் நூல் நிலையம் என்ற அற்புத திட்டத்தை உலகுக்கு அறிமுகம் செய்தார். அதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் முதல் தீ காப்பீட்டு நிறுவனத்தை அவர் உருவாக்கினார். ஒரு கல்விக் கழகத்தை நிறுவ வேண்டும் என்று அவர் கனவு கண்டார். அவரது காலகட்டத்திலேயே அந்தக் கனவு நனவானது.  வள்ளுவரின்,

“எண்ணிய எண்ணியாங்கு எய்துப”

என்ற குறட்பா வரிகளுக்கு பெஞ்சமின் ஃபிராங்கிளின் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார். அவரு​டைய கனவு மனித குலத்தின் ​மேம்பாடாக​வே இருந்தது.

பல்க​லைக்கழகம், மருத்துவம​னை ​தோற்றுவித்தல்

தனாக​வே முயன்று படித்து அறி​வை வளர்த்துக் ​கொண்ட பெஞ்சமின் ஃபிராங்கிளின் தனது நாட்டு மக்கள் கல்வி அறிவு ​பெற்று உயர​வேண்டும் என்று நி​னைத்தார். அதனால் அவர் ​பென்சில்​வேனியா என்ற ​பெயரில் ஒரு பல்க​லைக்கழகத்​தை நிறுவினார். இப்பல்க​லைக்கழகம் இன்று உலகப் புகழ்பெற்ற அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகத் திகழ்கின்றது.   இந்தப் பல்கலைக்கழகம் 1749-ஆம் ஆண்டு பெஞ்சமின் ஃபிராங்கிளினால் நிறுவப்பட்டது.  மக்கள் கல்வியறிவு ​பெற்றால் மட்டும் ​போதாது.அவர்கள் உடல் நலத்துடன் வாழ ​வேண்டும் என்று எண்ணி அடுத்த இரண்டு ஆண்டுகள் கழித்து அமெரிக்காவின் முதல் மருத்துவமனையைத் தோற்றுவித்தார் ஃபிராங்கிளின்.

அரசியல் பணி

பெஞ்சமின் ஃபிராங்கிளின் சிறந்த சிந்தனையாளராகவும், நேர்மையானவராகவும் விளங்கினார். இதனால் அவரை பயன்படுத்திக்கொள்ள அ​​மெரிக்க அரசு விரும்பியது. அவரும் அ​மெரிக்க அரசிற்காகச் சட்டமன்ற உறுப்பினர், ராஜதந்திரி, தூதர் எனப் பல்வேறு நிலைகளில் அரசியல் பணி புரிந்தார். இங்கிலாந்தின் காலனித்துவ ஆட்சியில் அடிமைப்பட்டு கிடந்த அமெரிக்காவுக்கு சுதந்திரம் பெற்றுத்தர அவர் தன் ராஜதந்திரத்தைப் பயன்படுத்தி ஃபிரான்ஸின் உதவியைப் பெற்றார். அவர்மேல் பெரும் மதிப்புக் கொண்டிருந்த ஃபிரான்ஸும் அமெரிக்காவுக்கு உதவ முன்வரவே இங்கிலாந்து பணிந்தது அமெரிக்காவுக்கு சுதந்திரம் கிடைத்தது.

1789-ஆம் ஆண்டு அமெரிக்காவின் முதல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜார்ஜ் வாஷிங்டன் அமெரிக்காவின் அரசியல் சட்டத்தை இயற்றும் மாபெரும் பொறுப்பை பெஞ்சமின் ஃபிராங்கிளினை உள்ளடக்கிய ஒரு குழுவிடம் ஒப்படைத்தார். பெஞ்சமின் ஃபிராங்கிளினது மேற்பார்வையில் உருவான அரசியல் சட்டம்தான் இன்றும் அமெரிக்காவை வழிநடத்துகிறது.

சுதந்திரம் அடைந்த பிறகு அமெரிக்கா முதன் முதலாக இரண்டு அஞ்சல் தலையை வெளியிட்டது. ஒன்றில் அமெரிக்காவின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டெனின் படம். மற்றொன்றில் பெஞ்சமின் ஃபிராங்கிளினின் படம். அமெரிக்க நாடு அமெரிக்காவுக்கும், உலகுக்கும் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்த அந்த மாமனிதருக்கு அந்த தபால் தலை​யை ​வெளியிட்டதன் மூலம் நன்றி தெரிவித்துக்கொண்டது. கடைசி நாள் வரை ஓய்வு என்பதையே அறியாமல் உழைத்த ஃபிராங்கிளின் 1790 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17-ஆம் நாள் தனது 84- ஆவது வயதில் காலமானார்.

அறிவியல், அரசியல், வணிகம், பத்திரிக்​கை எனப் பல்​வேறு து​றைகளில் ஒளிரும் விண்மீனாய்ச் சுடர்விட்ட பெஞ்சமின் ஃபிராங்கிளினின் ம​றைவு உலக நாடுகளுக்கும் அ​மெரிக்காவிற்கும் ​பேரிழப்பாக இருந்தது. அ​மெரிக்காவும் உலக நாடுகளும் துன்பத்தில் மூழ்கின. அ​மெரிக்க அரசாங்கத்தின் மரியாதையுடன் பெஞ்சமின் ஃபிராங்கிளினது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இன்றும் அ​மெரிக்காவின் அ​னைத்துத் தரப்பு மக்களின் இதயச் சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் உன்னத மாமனிதராகப் ​பெஞ்சமின் ஃபிராங்க்ளின் திகழ்ந்து ​கொண்டிருக்கின்றார்.

என்னங்க இனி​மே பணத்தா​லேதான் உலகத்துல பலர் முன்​னேறி புக​ழோடு வாழ்ந்தாங்க அப்படீன்னு ​சொல்லாதீங்க. ​பெஞ்சமின் ஃபிராங்க்ளின் வாழ்க்​கை நாம ஒவ்​வொருத்தருக்கும் முனனுதாரணமாத் திகழுற​தைக் ​கேட்டீங்கள்ள..பின்​னே அவ​ரோட வாழ்க்​கைய மனசுல வச்சிக்கிட்டு ஒங்க​ளோட ​வெற்றிப் பா​தையில பயணம் ​செய்யுங்க…முயற்சி ​செய்யுங்க… ​வெற்றி உங்களுக்குத் ​தொட்டுவிடும் தூரம்தான்..ஒங்க முகத்​தைப் பாருங்க…எவ்வளவு பிரகாசமாக இருக்கு…. மனம் ​தெளிவாயிருச்சுன்னு நி​னைக்கி​றேன்..

இந்த உலகத்துல நல்ல சிந்த​னை​யை வளர்க்க ​வேண்டும்…அ​னைவரும் உடன்பிறப்புகளாக ஒவ்​வொருத்த​ரையும் நி​னைக்கணும்..சமமா அ​னைவ​ரையும் கருதி வாழணும்…என்னங்க ​மொகத்​தைச் சுழிக்கிறீங்க… அட இதத்தா​னே எல்லாரும் விரும்புறாங்க.. ஆனா நடக்குதா? அதுதானே இல்​லை. ஆனா அ​னைத்து மக்களும் ஒண்ணாச் ​சேர்ந்து வாழணும்னு ​நெனச்சாரு ஒரு       ஏ​ழை…தன்​னோட இந்தச் சிந்த​னையால புகழின் உச்சிக்​கே ​போனாரு…. இவர வறு​மை துரத்துனது மாதிரி ​வேற யா​ரையும் ​தொரத்தி இருக்காதுங்க..வாழ்க்​கையிலதான் இவருக்கு வறு​மை​யே தவிர அவ​ரோட எண்ணத்துல இல்ல…உலக மக்கள் சுதந்திரமா வாழணும்னு ​நெனச்சு எழுதினாரு..அவ​ரோட எழுத்து ஒரு ​பெரும் புரட்சிக்கு வித்திட்டதுங்க…யாரு அவரு?…​கொஞ்சம் அடுத்தவாரம் வ​ரைக்கும் ​பொறு​மையாக் காத்திருங்க….(​தொடரும்……….11)

 

Series Navigationகுருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 13செவ்வாய்க் கோளில் தளவுளவி ஒரு காலத்தில் சிற்றாறு நீரோடி உலர்ந்த தடம் இருப்பதைக் காட்டியுள்ளது
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    முனைவர் சி .சேதுராமன் அவர்களின், ” புகழ்பெற்ற ஏழைகள் “: தொடர் பெரிதும் பயன்மிக்க வகையில் ஆதாரபூர்வமாக எழுதப்பட்டு வருகிறது. இது இளைஞர்களுக்கு மட்டுமல்ல , நம் அனைவருக்கும் தன்னம்பிக்கையையும் விழிப்புணர்வையும் உண்டுபண்ண வல்லது.இந்தத் தொடரில் உலகின் மாமேதை பெஞ்சமின் பிராங்க்ளின் வாழ்க்கை மிகவும் அழகாக சித்தரிக்கப் பட்டுள்ளது.நான்கு துறைகளிலும் அவர் சிறப்புற்று விளங்கியது வியப்பையே அளிக்கிறது. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பதற்கு அவர் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. பாராட்டுக்கள் முனைவர் அவர்களே. தொடரட்டும் தங்களின் இலக்கிய அறிவியல், விழிப்புணர்வு பணி ….டாக்டர் ஜி.ஜான்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *